Published:Updated:

அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் பலி: சென்னையில் பரபரப்பு!

Vikatan Correspondent
அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் பலி: சென்னையில் பரபரப்பு!
அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் பலி: சென்னையில் பரபரப்பு!
அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் பலி: சென்னையில் பரபரப்பு!

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் கடந்த 7ஆம் தேதி பச்சிளம் குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பு ஊசி  போடப்பட்டது. அந்த மருத்துவமனையில் பிறந்த 51 குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது.

பொதுவாக தடுப்பு ஊசி போடப்படும்போது, குழந்தைகளுக்கு உடலில் உரிய எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால் காய்ச்சல் வரும். பிறகு அது சரியாகி விடும். ஆனால் அரும்பாக்கம் ராமலிங்கம் நகரைச் சேர்ந்த செல்வகுமார்- சரண்யா தம்பதியினர் தங்கள் ஆண் குழந்தைக்கு காய்ச்சல் நீடிப்பதாக கூறி மீண்டும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.   அதுபோல திருவள்ளூர் மாவட்டம் அலமாதியைச் சேர்ந்த முனுசாமி- ராஜாத்தி ஆகியோரின் பெண் குழந்தையும் காய்ச்சலுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

கடந்த  ஒரு வாரமாக இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் குழந்தைகளுக்கு நோய் கிருமிகளின் தாக்குதல் அதிகரித்து விட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அந்த குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. இன்று அதிகாலை இரண்டு குழந்தைகளும் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து அந்த குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை குழந்தைகள் சிறப்பு பிரிவு முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

உடனே மருத்துவமனை டீன் குணசேகரன் மற்றும் மருத்துவர்கள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தடுப்பு ஊசி போட்டதால் குழந்தைகள் உயிரிழக்க வில்லை என்றும், நோய் கிருமி தாக்கியதால்தான் குழந்தைகள் இறக்க நேரிட்டது என்றும் விளக்கம் அளித்தனர்.

அதன்பிறகு போராட்டம் நடத்தியவர்கள் சமரசமாகி குழந்தைகளின் உடலைப் பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.