Published:Updated:

'கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!'

'கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!'

'கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!'

'கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!'

Published:Updated:
##~##

''எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. முதல் தடவை கருத்தரித்தபோது, மூன்றாம் மாதத்தில் எதிர்பாராதவிதமாக கலைந்து போனது. உடனடியாக டாக்டரிடம் சென்று டி.என்.சி. செய்து கொண்டேன். அதற்குப் பின் கருத்தரிக்கவே இல்லை. 150 செ.மீ. உயரம், 77 கிலோ எடை என்று இருக்கிறேன். இப்படி கனத்த சரீரத்துடன் இருப்பதுதான் கருத்தரிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ என்று தோணுகிறது. தெளிவுபடுத்துங்களேன்..."

 டாக்டர் மாயா மோகன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!'

"உங்களின் பிரச்னைக்கு, அதிகப்படியான பருமனே காரணமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஓவர் வெயிட்டின் காரணமாக 'அவ்யலேஷன்' (Ovulation) எனப்படும் சினைமுட்டை சீராக உருவாகும் சுழற்சி, தடைபட வாய்ப்புள்ளது. உங்கள் உயரத்துக்கு, நீங்கள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய எடை 50 கிலோதான். எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். முன்னதாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று, நீங்கள் கருவுறாமல் இருப்பதற்கான காரணம் இதுதானா என்பதை உறுதி செய்தபின், அவர் வழிகாட்டுதல்களின் கீழ் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

'கருத்தரிக்காமல் போவதற்கு கனத்த சரீரமும் காரணமாகலாம்!'

கருத்தரிக்காமல் இருப்பதற்கு... ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், பி.சி.ஓ. என்று வேறு காரணங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான முறையான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்... கருவுறாததற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று நினைத்துக் கொண்டு உங்களுக்கு மட்டுமே சோதனைகளை செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உங்கள் கணவருக்கும் தேவையான பரிசோதனைகள் செய்து, அவரிடம் ஏதேனும் குறைபாடுள்ளதா என்பதையும் கண்டறிந்து, தேவையெனில் அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism