Published:Updated:

சோற்றுக்கற்றாழை உஷார்... உஷார்!

Vikatan Correspondent
சோற்றுக்கற்றாழை உஷார்... உஷார்!
சோற்றுக்கற்றாழை உஷார்... உஷார்!
சோற்றுக்கற்றாழை உஷார்... உஷார்!

யற்கை அழகு கொஞ்சி விளையாடும் திருநெல்வேலி மாவட்டம் , பாபநாசத்தில் பசுமை விகடன்- அவள் விகடன் மற்றும் உலகத் தமிழ் மருத்துவக்கழகம் இணைந்து, மார்ச் 15 ஆம் தேதி 'வீட்டுத்தோட்டத்தில் மெடிக்கல் ஷாப்’  என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தின.

இரண்டு நாட்களாக பொதிகை மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்திருந்தது. இதனால், இதமான குளிருக்கு காலையில் பாதாம் பால், மதியம் கிச்சடி சம்பா பிரியாணி... சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டன. பசுமை வழி நல வாழ்வு, கைமருந்து செய்முறைப் பயிற்சி, நோனி வழி நிறைவாழ்வு... பற்றி அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவ வல்லுநர்கள் விளக்கமாக பேசினார்கள்.

‘‘பூனை மீசை என்ற மூலிகைச் செடி, துளசியை போல இருக்கு. பூக்கள் பூனையின் மீசையைப் போல நீண்டு வெண்ணிறத்துடன் இருக்கும். இதை இலைக் கற்பம் அல்லது குடிநீராக பயன்படுத்தினால், சிறுநீரக செயல்பாடுகளை  சீராக்கும். ரத்தத்தில் அதிகரித்துள்ள உப்பின் அளவை சமநிலைப்படுத்தும்.

சோற்றுக் கற்றாழை மிகச் சிறந்த மூலிகை. சித்த மருத்துவத்தை பொறுத்தவரை சோற்றுக்கற்றாழையை உள் மருந்தாக  பயன்படுத்தும்போதுதான் பலன் கிடைக்கும். சித்த மருத்துவ நூல்களில் வெளி உபயோகத்திற்கு சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தும் நுட்பங்கள் கிடையாது. வணிக நோக்கம் கொண்டவர்கள் நமது மூலிகைகளின் பெயரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். மக்களே உஷார்... உஷார்... என்று’’ எச்சரிக்கை மணியடித்தார் உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் தலைவர் மருத்துவர் மைக்கேல் ஜெயராசு.

சோற்றுக்கற்றாழை உஷார்... உஷார்!

பாபநாசம் கோயில் திருக்குளத்தை சுற்றி அரிய மூலிகைச் செடிகளை, உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தினர் ஒரு பொழிலாக வளர்த்துள்ளனர். மாலையில் அந்த மூலிகைத் தோட்டத்தை சுற்றிக் காண்பித்து, அதன் பயன்பாடுகளும் விளக்கப்பட்டன. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் மூன்று அரிய வகை மூலிகை கன்றுகளும் அன்பளிப்பாக வழங்கபட்டன.

சோற்றுக்கற்றாழை உஷார்... உஷார்!

‘‘பசுமை நிறைந்த, சித்தர்கள் பலரும் வாழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை எங்கள் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அகத்தியர் அருவியில் குளித்தது, உடலுக்கு உற்சாகம் தந்தது. நிகழ்ச்சியில் பேசிய சித்த மருத்துவர்களின் கருத்துக்கள் வாழ்க்கை கல்வியாக அமைந்தது’’ என்று நிகழ்ச்சியில் கலந்து கொணடவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு சென்றனர்.

-ஆறுச்சாமி