Published:Updated:

''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!''

அபிநயாவின் அழகு ரகசியம்இரா.சரவணன், படங்கள் : பி.கே.ரமேஷ்

''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!''

அபிநயாவின் அழகு ரகசியம்இரா.சரவணன், படங்கள் : பி.கே.ரமேஷ்

Published:Updated:
##~##
ர்ணிப்பதுகூட வரம்புமீறல்! அந்த அளவுக்குக் கண்ணியமானது அபிநயாவின் அழகு. கண்கள், உதடுகள், விரல்களின் கூட்டணியில் வார்த்தைகளை மிஞ்சும் உணர்வுகளை உணர்த்திவிடுகிறார் அபிநயா. 'ஈசன்’ படத்தில் வருவதைப்போலவே அழகான குடும்பத்தின் அன்பு மகள். முறையான உடற்பயிற்சி,உணவுக் கட்டுப்பாடு என ஃபிட்னெஸ் விஷயங்களில் அபிநயா அநியாய சமத்து!

அதிகாலையில் ஜிம்முக்குக் கிளம்பிவிடும் அபிநயா, ஒரு மணி நேரம் இடைவெளி இல்லாத உடற்பயிற்சியில் திளைப்பார். அதிக நேரம் ஒதுக்குவது டிரெட் மில் பயிற்சிக்கு. ஷூட்டிங், வெளியூர் பயணம் என எதுவாக இருந்தாலும், ஜிம் பயிற்சிகளை ஒரு நாளும் அபிநயா தவறவிடுவது இல்லை. ''சின்ன வயசுல இருந்தே எதுவும் சரியா இருக்கணும். சரியான நேரத்துக்கு எழுந்திருக்கணும். வீடே

''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!''

சுத்தமா இருக்கணும். முறையா சாப்பிடணும்னு அபி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதுதான், இன்னிக்கு வரை ஒரு கட்டுப்பாடான குழந்தையா அவளை வார்த்துஇருக்கு. சாயங்காலம் யோகா பயிற்சிகளை ரொம்ப ஆத்மார்த் தமா செய்வா. யோகாவின் அத்தனை வித ஆசனங்களை யும் பெர்ஃபெக்ட்டா செய்வா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஆசனங்கள். தினமும் ஒரே மாதிரியான பயிற்சிகளை மேற்கொண்டால், அது நாள டைவில் உடம்பைப் பலவீனப் படுத்தும். ஒவ்வொரு நாளும் விதவிதமான பயிற்சிகளை மேற்கொண்டால்தான், உடலின் ஃப்ளெக்ஸிபிளிட்டி நல்லா இருக்கும்.  

'ஈசன்’ படத்துக்காக 'வெயிட்டைக் குறைக்கணும்’னு சசிகுமார் சார் சொன்னார். அடுத்த சந்திப்பிலேயே நாலஞ்சு கிலோ வெயிட் குறைஞ்சு இருந்த அபியைப் பார்த்து, அசந்துட்டார். 'ஒரு கிலோ வெயிட்டைக் குறைக்க நான் ஒரு மாசத்துக்கும் மேல போராடுறேன். நீங்க பலூன்ல காத்தைக் குறைச்சு, கூட்டுற மாதிரி வித்தை காட்டுறீங்களே’ன்னு சிரிச்சார்!'' - அம்மா சொல்வதை ஆமோதிக்கும் விதமாக கலீரெனச் சிரிக்கிறார் அபிநயா.

''அபிநயா கொஞ்சமா சாப்பிட்டாலும், அது சத்தான சாப்பாடா இருக்கும். எண்ணெய் சம்பந்தப்பட்ட உணவுகளை அபி தொடறதே இல்லை. அதே மாதிரி இனிப்பு உணவுகளும் இப்போ வரை நிராகரிப்புப் பட்டியலில் இருக்கு. இரவு உணவு இரண்டு சப்பாத்திக்கு மேல் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. நான்வெஜ்ல சிக்கனும் மீனும் பிடிக்கும். ஆனா, மறுநாள் எக்ஸ்ட்ரா டோஸ் உடற்பயிற்சிகள் இருக்கும். அடிக்கடி மோர் குடிச்சு உடம்பைப் புத்துணர்வோடு வெச்சிருப்பாங்க!''- அப்பா சொல்வதை யாரைப்பற்றியோ சொல்வதைப்போல ஆர்வமாக, ரசித்துக் கேட்கிறார் அபிநயா.

''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!''

மாசு மருவற்ற அபிநயாவின் முகப் பொலிவுக்கு கடலை மாவுதான் காரணமாம். ''பியூட்டி பார்லர் க்ரீம்களைவிட, இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. கடலை மாவையும் பாலையும் கலந்து முகத்தில் தேய்ப்பதுதான் அபிநயா கடைப்பிடிக்கிற ஒரே அழகு ரகசியம்.

அபிநயாவுக்கு சின்ன வயசுல இருந்தே முடி கருகருன்னு அடர்த்தியா இருக்கும். கோயிலுக்குக்குகூட நாங்க முடி இறக்கினது இல்லை. ஆனா, 'ஈசன்’ படத்தில் மாடர்ன் டீன் பெண்ணாக நடிக்கணும் என்பதால், 'முடியைக் கொஞ்சம் வெட்டினால் தேவலை’ன்னு சொன்னார் சசிகுமார் சார். எங்க எல்லோருக்கும் அழுகையே வந்துடுச்சு. இத்தனைக்கும் அவ கேசத்துக்கு தேங்காய் எண்ணெய் தவிர, விஷேசமான ஹேர் ஆயில் எதுவும் பயன்படுத்துவது இல்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மந்தாரை இலை, கறிவேப்பிலை, தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணி, தலையில் தேய்ப்போம். 'மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது’ன்னு ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது மந்தாரை. இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை முட்டையோட வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்ச்சு, கொஞ்ச நேரம் ஊறவெச்சுக் குளிச்சா... ஈறு, பொடுகு தொந்தரவும் இருக்காது!'' தலை முடி கோதி கதை கேட்டுக்கொண்டு இருக்கும் அபிநயா, 'சின்னத் தம்பி’ குஷ்புபோல அண்ணன்கள் செல்லமாம்.

''முகத்துக்கு கடலை மாவு... தலைமுடிக்கு மந்தாரை!''

''பேச முடியாதது ஒரு குறைங்கிறதை அபிநயாவோ நாங்களோ இன்னிக்கு வரைக்கும் உணரலை. அதுக்காக ஒரு நிமிஷம்கூட வருத்தப்பட்டதும் இல்லை. இரண்டு அண்ணன்களோடு விளையாடுறப்ப அபிநயா முகத்துல பூக்கிற குழந்தை குதூகலத்துக்கு எங்க கண்ணே திருஷ்டி படும். உடற்பயிற்சியும் சாப்பாடும் உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மனசுக்கு உற்சாகமும் முக்கியம். அதுதான் அபி!''