குட் நைட்

மனிதர்களின் வாழும் காலம் அதிகரித்துவிட்டதால், வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. வயது ஏற ஏற, அவர்கள் சந்திக்கும் சங்கடங்களும் அதிகம். குறிப்பாக பாலுணர்வு சம்பந்தமான சங்கடங்களும் மன உளைச்சலும் மிகவும் அதிகம். அக்டோபர் 1-ம் தேதியை உலக மூத்தோர் தினமாகக் கொண்டாடும்போது அவர்களுக்கான ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்வை உறுதிசெய்வதுதான் இதற்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கும்.

டீன் ஏஜ் பருவத்தில் எந்தவிதமான பாலுணர்வு உந்துதல் இருக்குமோ அதே அளவு உந்துதல் வயதான காலத்திலும் இருக்கும். ஆனால், வயதின் காரணமாக உடல் அதற்கு ஒத்துழைக்காது. இதுதவிரவும், பாலுறவில் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக அவ்வளவாக ஈடுபாடும் இல்லாமல் போகலாம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட் நைட்

கணவன் மனைவியையோ மனைவி கணவனையோ திருப்திபடுத்த இயலுமா என்ற சந்தேகம் வயதான ஆண் பெண் இருவருக்குமே இருக்கிறது. தவிரவும், குடும்பம், குழந்தைகள், எதிர்கால நல்வாழ்வு, வாழ்க்கையில் செட்டில் ஆகும் பரபரப்பு போன்றவை தரும் அழுத்தங்கள் தம்பதிகளிடையே ஆரோக்கியமாகப் போய்க்கொண்டிருந்த பாலுறவைத்தான் முதலில் பலிகொள்கிறது. குழந்தைகள் தோளுக்குமேல் வளர்ந்துவிட்டார்கள் இனிமேல் பாலுறவு தேவையா எனக் குழம்புவது, இந்த வயதிலுமா என சமூகம் கேலி செய்யுமே என்று பதற்றப்படுவது, கணவன் மனைவி இடையே காதல் பேச்சுகள் குறைந்து போவது என இந்த உறவைத் தள்ளிப்போடுவதாலும் இயல்பான பாலுணர்ச்சிப் பாதிக்கப்படும்.  

பாலுறவு தொடர்பான சங்கடங்கள்:

ஆர்வமின்மை:

வாட்டும் தனிமை, எரிச்சல்

ஒரே மாதிரியான பாலுறவு முறைகளால் ஆர்வம் குறைதல்

சூழல், நிகழும் முறை

குடும்பத்துக்குள் முளைக்கும் பிரச்னைகள்

உடல்ரீதியான சங்கடங்கள்:

  வயதானவர்களில் ஆண்களுக்கு பாலுறுப்பு தாமதமாக விரைப்புத்தன்மையை அடைவது

  துரிதமாக விந்து வெளியேறுவது (Retarded egacluation)

விந்து முழுமையாக வெளியேறாமல் மூத்திரக்குழலுக்குச் சென்று விடுவது (Retrograde)

  பாலுறவின்போது வலி ஏற்படுவது

பாலுறுப்பின் இலகுதன்மை குறைப்பாடு

  பாலுறவில் நீண்ட இடைவெளி விடுவது (Attrition by disuse)

‘‘Use it or lose it” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. எது ஒன்றையும் பயன்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.  இல்லையெனில் அது வீணாகிவிடும் என்பதுதான் இதற்கான அர்த்தம். இது மனிதர்களின் பாலுறுப்புகளுக்கும் பொருந்தும். முக்கியமாக பாலுறுப்புகளில் நோய்த்தொற்று ஏற்பட்டாலோ, அல்லது பாலுறுப்பு சம்பந்தமான சங்கடங்கள் இருந்தாலோ பாலுறவு இடைவெளி அதிகமாகிவிடும். இதைத் தவிர்த்தல் நலம்.

பாலுறவு ஆசை இருந்தும் சமூகம், கலாசாரம் விதிக்கும் கட்டுப்பாட்டால் வயதானவர்கள் பாலுணர்வைத் தள்ளிப்போடும் போதும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இவற்றை எப்படிக் கண்டுபிடிப்பது?  

ஆண்களுக்கு, 45 வயதுக்குப் பிறகு, ஹார்மோன்கள் குறைய ஆரம்பிக்கும்போதும், பெண்களுக்கு Menopauseபோல ஆண்களுக்கு Andropause நிலை வருகிறபோதும் தேவையற்ற பதற்றம் ஏற்படும்.

விந்தின் அளவு குறைதல், தூக்கத்தில் விந்து வெளியேறும். ஞாபகச் சக்தி குறையும். அதீத சோர்வும், தூக்கமின்மையும் ஆட்கொள்ளும். உடல் மெலியும். எலும்புகளின் உறுதித்தன்மை குறைந்து சின்னச் சின்ன முறிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். தலைமுடி உதிரும். சரும வறண்டு போகும்.  

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் நின்றுபோய் மெனோபாஸ் நிலை வருகிறபோது, பெண்ணுறுப்பில் வறண்ட தன்மை ஏற்படும். மார்பகங்கள் சரிந்து, சுருங்கிப் போகும். பாலுறவின்போது உறுப்பின் உட்புறத்தில் திரவம் சுரக்காது. ஞாபகசக்தி குறைய ஆரம்பிக்கும்.  எலும்பு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும்.

- இடைவேளை...

சங்கடங்களிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகள்...

  சீரான கால அளவில் மருத்துவ ஆய்வு

முன்னெச்சரிக்கையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது

இருபாலரும் சுரப்பி மாற்றுச் சிகிச்சை செய்துகொள்வது

ஆண்டுக்கு ஒருமுறை மருத்து ஆலோசனை பெறுவது

  வீட்டில் இருக்கும் இளைஞர்கள், முதியவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது

  மற்றவர்களோடு கலகலப்பாக கலந்து பேசி மகிழ்வது

  பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது

குறிப்பாக எதிர்மறையான சிந்தனைகளை விட்டுவிடுவது

வாக்கிங், ஜாக்கிங்... போன்ற எளிமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது

எப்போதும் இளமையாக உணர்வது

நம் ரசனைக்கு ஏற்றப்படி படுக்கையறையை அலங்கரித்துக்கொள்வது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism