Published:Updated:

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

Published:Updated:
மனமே நலமா?

முன்கதைச் சுருக்கம்

மனமே நலமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

குடும்பத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தைரியமான பெண்மணி அவர். கோயிலுக்குச் செல்லும் நேரத்தில் மாதவிலக்கு வந்துவிடக் கூடாது என்று மெடிக்கல் ஷாப்புக்கு சென்று மாத்திரை வாங்கிப்போட்டிருக்கிறார். மாத்திரை போட்டாலும், கோயிலில் இருக்கும்போது மாதவிலக்கு வந்துவிடுமோ என்று மனக்குழப்பத்தில்  ஏதேதோ பேசியிருக்கிறார். கோயிலுக்குச் சென்று வந்த பிறகும், மனக்குழப்பத்தில், சுயநினைவற்றுப் பித்துப்பிடித்ததுபோல இருந்தார். மற்றவர்கள் அவர் முன் வரவே பயப்படும் நிலையில் இருந்தவர், மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, எதைப் பற்றியும் கவலையற்றவராக இருந்தார். எப்போதும் சுத்தபத்தமாக இருந்தவர், குளித்து பல நாட்கள் ஆகி அழுக்கடைந்து இருந்தார். அவருக்கு மன நலப் பிரச்னை உள்ளது என்று எண்ணி அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

 ப்பா, அம்மா, மகள், மருமகன், இன்னொரு பெண் என ஒரு பட்டாளமே என்னை சந்திக்க வந்தனர். அந்தப் பெண்ணின் பெயர் மாலதி. பார்க்க மிகவும் லட்சணமாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மாலதிக்கு திருமணம் நடந்திருக்கிறது. கணவன் ஆசை ஆசையாக முதல் இரவுக்குக் காத்திருக்க, அந்த அறைக்குள் செல்வதற்கே முரண்டுபிடித்தார் மாலதி. பெற்றோர், உறவினர்கள் வலுக்கட்டாயமாக அவளை அனுப்பிவைத்தனர். அறைக்குள் சென்றும், கணவனை தன் அருகே நெருங்கவிடவில்லை.  'சரி முதல் நாள், இப்போதுதான் திருமணம் ஆகியிருக்கிறது. அந்தப் பயத்தில்தான் ஒத்துழைக்க மறுக்கிறாள்... போகபோகச் சரியாகிவிடும்' என்று நினைத்து கணவனும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. புகுந்த வீட்டினர் அனைவரிடமும் அன்பாகப் பழகி, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்திருக்கிறாள் மாலதி. கணவனிடமும் அன்பாகவே நடந்துகொண்டாலும்,  தாம்பத்திய உறவுக்கு மட்டும் உடன்படவே இல்லை. பொறுமை இழந்த கணவன் ஒரு கட்டத்தில் பிரச்னைசெய்ய ஆரம்பிக்க, அது இறுதியில் விவாகரத்தில் முடிந்துவிட்டது.

மனமே நலமா?

'நம் பெண்ணின் வாழ்க்கை இப்படிப் பாழாகிவிட்டதே’ என்று பெற்றோர் உடைந்துபோனார்கள். 'அப்பா, அம்மாவோட இருந்தா, அவங்களுக்கு இன்னும் மனக்கஷ்டம் அதிகமாகிவிடும்’ என்று மாலதி, சென்னைக்கு வேலை தேடி வந்தாள். ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் சென்றுவந்தாள்.

வேலை பார்க்கும் இடத்தில், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான சாந்தி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நட்பு நாளடைவில் 'நெருக்கமான’ உறவாக மாறிவிட்டது. மாலதியுடனான நெருங்கிய உறவு, சாந்திக்குப் புதுவித சந்தோஷத்தை அளிக்கவே அது தொடர்ந்தது. அவர்களின் இந்த ரகசிய உறவைத் தொடர்வதற்கு மாலதி ஹாஸ்டலில் இருந்தது, இடைஞ்சலாக இருந்தது. மேலும், வெளியில் தனிமையில் சந்திப்புக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தது. இதனால், ஹாஸ்டலைக் காலி செய்துவிட்டு தன் வீட்டிலேயே தங்கிவிடும்படி மாலதியை அழைத்திருக்கிறார் சாந்தி. மாலதியும் சாந்தியின் வீட்டில் குடியேறினார். இதனால் இருவரின் நெருக்கம் மேலும் அதிகரித்தது.

தோழிகளுக்குள் பாசம் காரணமாக மாலதியை அழைத்துவந்துவிட்டாள் என்று எண்ணினான் சாந்தியின் கணவன். சில நாட்கள் சென்றதும், இருவரது நெருக்கத்தைக் கண்டு, சாந்தியின் கணவனுக்கு சந்தேகம் வந்தது. கணவன் சந்தேகப்படுகிறான் என்று தெரிந்ததும், கொஞ்சம் விவரமாகத் திட்டம் தீட்டினாள் சாந்தி.

'என் கணவன் சந்தேகப்படுகிறார். நீ அவரைத் திருமணம் செய்துகொள். பிறகு நீயும் இந்த வீட்டில் தாராளமாகத் தங்கலாம். யாரும் நம்மைச் சந்தேகப்பட முடியாது’ என்று மாலதியிடம் தன்னுடைய திட்டத்தை விவரித்தார் சாந்தி. இன்னொரு திருமணமா என்று முதலில் யோசித்த மாலதி, சாந்தியுடன் நெருங்கமாக இருக்க இது ஒன்றுதான் சரியான வாய்ப்பு என்று ஒப்புக்கொண்டார்.

மகிழ்ச்சியில் துள்ளிய சாந்தி, தன்னுடைய கணவனிடம் பேசினார். 'பாவங்க மாலதி... அவளுக்கு நம்மைவிட்டா வேறு யாரும் இல்லை. நம்மகூடவே இருக்கணும்னு ஆசைப்படுறா. நீங்க அவளை இரண்டாவதாக் கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்புறம் நாம மூணு பேரும் இங்கேயே சந்தோஷமா இருக்கலாம்’ என்று ஆசை வார்த்தை காட்டினாள். தானாக ஒரு வாய்ப்பு கிடைக்கவே, சாந்தியின் கணவன் சந்தோஷத்தில் துள்ளினான். அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், 'உன் விருப்பம்«பால செய்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். சாந்தியே, மாலதியின் பெற்றோரைச் சம்மதிக்கவைத்து தன்னுடைய கணவனுக்கே இரண்டாவதாகத் திருமணமும் செய்துவைத்தாள். இவனுடனும் தாம்பத்திய உறவுவைத்துக்கொள்ள மாலதி மறுத்து, ஏதேதோ, சாக்குபோக்கு சொல்லி தாம்பத்திய உறவைத் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றாள். பொறுத்துப்பொறுத்துப் பார்த்த மாலதியின் கணவன், ஒரு நாள் பெற்றோரை அழைத்து பெரிய பிரச்னைசெய்யவே, கடைசியில் மாலதிக்கு ஏதோ பிரச்னை உள்ளது, அதைச் சரிசெய்ய வேண்டும் என்று அவளதுப் பெற்றோர் என்னிடம் அழைத்துவந்தனர்.

மாலதி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது பற்றி உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.

 டாக்டர் செந்தில்வேலன் பதில்

மனமே நலமா?

'அந்தப் பெண்மணியின் வயது,  அவர் மற்றவர்களோடு பழகும்போது ஏற்பட்ட திடீர் மாற்றம், மாதவிலக்கை நிறுத்தக்கூடிய ஹார்மோன் மாத்திரைகள் உட்கொண்டது போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இந்த அறிகுறிகள் மனநலப் பிரச்னைபோலத் தோன்றினாலும், மூளை தொடர்பான வேறு நோயாக இருக்கலாம் என்று உடனே அவருக்கு மூளையை சி.டி. ஸ்கேன் எடுத்துப்பார்க்கப்பட்டது. அங்கே ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு 'ஸ்ட்ரோக்’ என்னும் வியாதியின் அறிகுறிகள் தென்பட்டன. உடனடியாக அவரை மூளை நரம்பியல் நிபுணரிடம் காண்பித்து, மூளையின் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் முன்னேறி வருகிறார்.

இதுபோன்று, கோயிலுக்கு செல்லும்போது, நல்ல நாட்களின்போது மாதவிலக்கைத் தள்ளிப்போட வேண்டும் என்று பலர் தாங்களாகவே கடைக்குச் சென்று மாத்திரை வாங்கி உட்கொள்கிறார்கள். இது வயதானவர்களை நிறைய விதங்களில் பாதிக்கிறது. அதற்கு இந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட நிகழ்வே ஓர் உதாரணம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி பெண்கள், குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள் இதுபோன்ற மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.'

மனமே நலமா?

 வாசகர் கடிதம்

மாதவிலக்கை தள்ளிப்போடுவதற்காகச் சாப்பிட்ட மாத்திரை அவர் உடலில் ஏதேனும் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.  சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் இந்த மாத்திரை உட்கொண்டு தள்ளிப்போடும் விஷயத்தைச் செய்யும் பெண்களுக்கு இது ஓர் அபாயமான எச்சரிக்கை.  நல்லவேளை அவரது குடும்பத்தினர் ஆவி, பேய் என்று யோசிக்காமல், மருத்துவரைப் பார்க்க வந்தனர். மனநல சிகிச்சை அளிப்பதன் மூலம் அவரைக் குணப்படுத்த முடியும்.

- டி. வசந்தா, திண்டுக்கல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism