
##~## |
ஒருவகை ஒட்டுண்ணியால் ஏற்படுகிற, எளிதில் பரவக்கூடிய தோல் தொற்றுநோய் 'சிரங்கு’ (Scabies)பாதிக்கப்பட்டவரின் உடைகள், துண்டு, படுக்கை, இருக்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதில் இது பரவக்கூடியது. இருப்பினும் தோலுடன், தோல் தொடுவதாலேயே இது அதிகமாகப் பரவுகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அறிகுறிகள்:
தோலின் மேற்பகுதியில் சிவந்த நிற சின்னஞ்சிறு பள்ளம் போல் காணப்படும். முக்கியமாக கை, கால், விரல் இடுக்கு, பிறப்புறுப்பு, மார்பின் கீழ்ப்பகுதியிலும் காணப்படும். பச்சிளம் குழந்தைகளின் உள்ளங்கை மற்றும் பாதங்களில், சீழ் கோர்த்த சிறு கொப்புளங்கள் காணப்படும். இரவு நேரங்களில் அரிப்பு அதிகமாக இருக்கும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கால் டீஸ்பூன் பறங்கிப்பட்டைப் பொடியைப் பாலில் கலந்து உண்ணலாம்.
தழுதாழை இலைப்பொடி, மிளகுத்தூள் சம அளவு கலந்து அதில் கால் ஸ்பூன் எடுத்து தேன் கலந்து உண்ணலாம்.

8 கிராம் காஞ்சொறி வேர்ப்பொடியில், இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
கிலுகிலுப்பை இலை, துளசியிலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்ணலாம்.
இசங்கு இலை, வேர் இவற்றை சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் தேனில் கலந்து பருகலாம்.
கொட்டைக்கரந்தையை அரைத்து கால் ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து உண்ணலாம்.
சிவனார்வேம்பு வேர்ப்பொடி, சீந்தில் சர்க்கரை இவற்றை சம அளவு எடுத்து, அதில் அரை ஸ்பூன் கலந்து உண்ணலாம்.
அருகம்புல், வெள்ளருகு சம அளவு எடுத்து அரைத்து, கொட்டைப் பாக்களவு வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
அரை டீஸ்பூன் முடக்கத்தான் இலைப்பொடியை, மோரில் கலந்து உண்ணலாம்.
சத்திசாரணை வேர்ப்பொடி, மிளகுத்தூள் சம அளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் உண்ணலாம்.
சம அளவு வெப்பாலை பட்டைப் பொடி, கடுக்காய்ப் பொடி எடுத்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ணலாம்.
வெளிப் பிரயோகம்:
குப்பைமேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்துப் பூசலாம்
பாகல்கொடி, கருவாப்பட்டை, திப்பிலியை நீரடிமுத்தெண்ணெயில் அரைத்து, சிரங்கு மீது பூசலாம்.
பறங்கிச் சாம்பிராணி, நல்லெண்ணெய், வெள்ளை மெழுகு இவற்றை சமஅளவு எடுத்துக் காய்ச்சிப் பூசலாம்.
பவளமல்லி விதையை தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பூசலாம்.
ஊசித்தகரை இலையை எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்துப் பூசலாம்.
புன்னைப்பூவை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்
தேங்காய் எண்ணெயில் மரிக்கொழுந்தை சேர்த்து, வெயிலில் காயவைத்துப் பின் பூசலாம்.
கீழாநெல்லியை உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம்.
மூங்கில் வேர், சந்தனம் இரண்டையும் சமஅளவு எடுத்து எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்துப் பூசலாம்.
உசிலம்பூ, வேப்பிலை, மஞ்சள் சமஅளவு எடுத்து அரைத்துப் பூசலாம்.
கொள்ளுக்காய் விதையை அரைத்துப் பூசலாம்.
படம்: புகழ்.திலீபன்
உணவு: சேர்க்க வேண்டியவை:
வால்நட்,
பூண்டு,
மிளகு,
வெங்காயம்,
கீரைகள்,
பழ வகைகள்
தவிர்க்க வேண்டியவை:
கத்திரிகாய்,
சோளம்,
வரகு,
கம்பு,
கருவாடு,
மீன்