Published:Updated:

சத்யமூர்த்தி பவனில் சிறுதானிய உணவு!

சத்யமூர்த்தி பவனில் சிறுதானிய உணவு!
சத்யமூர்த்தி பவனில் சிறுதானிய உணவு!

சத்யமூர்த்தி பவனில் சிறுதானிய உணவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சத்யமூர்த்தி பவனில் சிறுதானிய உணவு!

''உணவே மருந்து... மருந்தே உணவு" என்ற வாசகமானது இன்று பரவலாக எல்லோருடைய மனதிலும் எழுந்திருக்கிறது.

உணவில் எல்லா வகையான உணவுகள், துரித உணவுகள் என்றெல்லாம் உண்டு. அதற்காக அதிக விலையும்,  மருத்துவ செலவுகளும் செய்த மக்கள் இன்று பெரும்பாலும் இயற்கை உணவுக்கு மாறத்துவங்கிவிட்டனர்.

இந்த சூழலில், இயற்கை உணவை தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் வரவேற்பு பெறத் துவங்கியுள்ளன. அப்படி இயற்கை உணவை சமைத்து தருவதற்காகவே ஒரு உணவகச்சேவை செய்து வருகிறார் பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன்.

சத்யமூர்த்தி பவனுக்கு ஒரு வேலையாக சென்றபோது  அங்கு நம்மை வரவேற்றது, நவதானிய பயிர்களும், ஆவாரம் பூ தேனீரும்தான். இதுபற்றி காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் கோபண்ணாவிடம் கேட்டபோது,  “இயற்கை உணவானது உடலுக்கு மிகவும் நல்லது. எல்லா இடத்திலேயும் சாதாரண உணவு கிடைக்கும். இயற்கை உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது.

இயற்கைக்காக அனைவரும் மாறுகிற தருணம் இது. தலைவர் இளங்கோவன், இந்த உணவை அலுவலகத் திற்கு காணவரும் அனைவருக்கும் கொடுக்க சொன்னதால் அவர் சொன்னபடி ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார்.

சத்யமூர்த்தி பவனில் சிறுதானிய உணவு!

இயற்கை உணவை தயாரித்து  தரும் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனிடம் கேட்டபோது, "சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள் பெரியவர்கள். என்ன தான் பணம், புகழ் என்று மனிதர்கள் அலைந்து திரிந்தாலும், அதை அனுபவிக்க மனிதனுக்கு ஆரோக்கியம் வேண்டும்.

ஆரோக்கியம் கெட்டுப்போனால் எல்லாம் வீண். பத்திரிகைப் பணிக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லவேண்டிய சூழலில், கண்ட கண்ட உணவகங்களில் உணவு சாப்பிட்டு வருவது எனக்கு பிடிக்கவில்லை.

அங்கு தரம் என்பதும் சந்தேகம்தான். இன்றைக்கு எல்லாமே கலப்பட உணவாகி விட்டது. இதில் ஆரோக்கியம் கெடவும் செய்கிறது. அதனால் பரிசாக கிடைக்கும் நோய்களும், என்னை இயற்கை தானிய உணவு முறைக்கு மாற்றியது. அதில் நான் கண்ட பலன்கள்தான் இதை மற்றவர்களும் உணர வேண்டும் எனத் தோன்றியது.

எந்த விழாவுக்கு இயற்கை உணவு கேட்டாலும் தயார் செய்து கொடுக்கிறேன். முழுக்க முழுக்க இயற்கை தான் எல்லா விதத்திலேயும் ஆரோக்கியத்தை தரும். குடிக்கும் தண்ணீர் கூட இன்று கலப்படமாக மாறி யிருக்கு. இதையெல்லாம் மாத்தணும்னு எனக்குள்ள இப்பவும் தோனிட்டே இருக்கு.

அதற்கு பொதுமக்கள் மத்தியில இப்பதான் விழிப்புணர்வு வந்துட்டு இருக்கு. 'உணவே மருந்து... மருந்தே உணவு!' எனும் சொல்லானது என்றைக்கும் மனிதர்களுக்கு முக்கியமானது.

சத்யமூர்த்தி பவனில் சிறுதானிய உணவு!

மத்த விழாவுல கேக், பிஸ்கட் கேட்பாங்க. அதிலேயும் சிறுதானிய கேக்கும், மைதா கலக்காத சிறுதானிய பிஸ்கட்டும் செய்து தருகிறோம். நாங்க செய்கிற தேனீர்ல மூலிகை மட்டும்தான் இருக்கும். அதனாலதான் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லமும், நாட்டுச் சர்க்கரையும் கலந்து உபயோகிக்கிறோம்.

அலுவலகம் மட்டுமில்லாமல், மருத்துவமனைகளிலும் இயற்கை உணவு உண்ணும் நோயாளிகளுக்கு தந்து கொண்டு இருக்கிறோம்” என்றவர்,  “ இதனையே அனைத்து அரசு விழாக்களிலும், அலுவலகங்களிலும் பின்பற்றலாமே. அப்படி செய்தால் இயற்கை உணவும் இன்னும் எளிதாக மக்களுக்கு சென்று சேரும்" என்றார்.

ஆரோக்கியத்தின் வாசலான இயற்கை உணவை வரவேற்பது அவசியமான ஒன்றுதான் தற்போது!

-துரை.நாகராஜன்

படங்கள்: தி.ஹரிஹரன்


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு