Published:Updated:

''அட்மிஷன் இங்கே.. ஆராய்ச்சி அமெரிக்காவில்!''

'அடேங்கப்பா' அறுவை சிகிச்சை

''அட்மிஷன் இங்கே.. ஆராய்ச்சி அமெரிக்காவில்!''

'அடேங்கப்பா' அறுவை சிகிச்சை

Published:Updated:
''அட்மிஷன் இங்கே.. ஆராய்ச்சி அமெரிக்காவில்!''

'மூடு சரி இல்லை’ என சலித்துக்கொள்பவர்களைவிட, 'மூட்டு சரி இல்லை’ என சங்கடப்படுபவர்கள் அதிகம். முதுமைதான் மூட்டு வலிக்குக் காரணம் என்ற நிலை மாறி, இன்றைய நிலையில் இள வயதினரும் மூட்டு வலியால் அல்லாடுகிறார்கள். இந்த மூட்டு வலிக்கு மகத்தான நிவாரணியாக வந்திருக்கிறது 'கஸ்டம் ஃபிட்’ சிகிச்சை. 

இந்தப் புதிய அறுவை சிகிச்சை குறித்து ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் எலும்பியல் அறுவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
சிகிச்சை நிபுணர் டாக்டர் நந்தகுமார் சுந்தரம் விளக்குகிறார்.

''மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் சமீபத்திய மகத்தான கண்டுபிடிப்புதான் கஸ்டம் ஃபிட் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தில் 60 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அடுத்த நாளே நடக்க வைத்தோம். ஐந்தே நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி, முழுத் திருப்தியோடு வீடு திரும்பினார். நாளுக்கு நாள் வளரும் தொழில்நுட்பம்தான் இத்தகைய சாதனையை சாத்தியமாக்கியது.

ஆறு வருடங்களுக்கு முன்பு நேவிகேஷன் என்ற கம்ப்யூட்டர் சர்ஜரி அறிமுகம் ஆனது. இதில் கம்ப்யூட்டர் மூலம் அறுவை சிகிச்சை முழுவதும் கண்காணிக்கப்படும். அதற்காக ஒரு பெரிய மெஷினை அறுவை சிகிச்சைக் கூடத்துக்குள் வைக்கவேண்டிய அவசியம் இருந்தது. மேலும் கம்ப்யூட்டர் கண்காணிப்புடன் செய்ய வேண்டி இருந்ததால், அறுவைச் சிகிச்சை செய்யும் நேரம் அதிகரித்தது. இதனால் நோயாளிகளுக்கு அதிக ரத்தக் கசிவும், நோய்த் தொற்று அபாயமும் இருந்தது. இத்தகைய குறைபாடுகளைப் போக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டதுதான், புதிய 'கஸ்டம் ஃபிட்’ முறை.

''அட்மிஷன் இங்கே.. ஆராய்ச்சி அமெரிக்காவில்!''

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில், செயற்கை மூட்டு பொருந்தும் வகையில், எலும்பை சரியான அளவில் தயார் செய்வதுதான் மிக முக்கியம். அதற்குத்தான் அதிக நேரமும் ஆகும். 'கஸ்டம் ஃபிட்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், அறுவை சிகிச்சை நேரம் பாதியாகக்

''அட்மிஷன் இங்கே.. ஆராய்ச்சி அமெரிக்காவில்!''

குறைந்துவிட்டது. இதன்படி, மூட்டு பாதிக்கப்பட்ட நோயாளிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்போம். அந்த மெஷின், அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இங்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் படம் அவர்களுக்குப் போய்விடும்.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் முப்பரிமாண (3டி) இமேஜ் மேப்பிங்கைப் பயன்படுத்தி, டிஜிட்டலாக எலும்பின் அமைப்பு, எடை விகிதம், பாலினம், வயது, மூட்டின் ஒழுங்கமைப்பு ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு நோயாளியின் மூட்டினை படமாக வரைந்து எங்களுக்கு அனுப்புவார்கள். அதை இங்கே நாங்கள் பரிசீலனை செய்து, திருத்தங்கள் இருந்தால் கூறுவோம். இறுதியில் அவர்கள் நோயாளியின் மூட்டுபோன்ற பிளாஸ்டிக் மோல்ட் ஒன்றைத் தயார் செய்து அனுப்புவார்கள். ஒவ்வொரு நோயாளியும் வேறுபட்டவர்கள் என்ற கொள்கை அடிப்படையில், அறுவை சிகிச்சையின்போது அடையாளம் கண்டுகொள்ள, இந்த மோல்டில் நோயாளியின் பெயரும் பொறிக்கப்படும்.

எலும்பை எப்படி வெட்ட வேண்டும்; என்ன அளவு இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பதற்காகவே இந்த மோல்டு தயாரிக்கப்படுகிறது. முதலிலேயே மோல்டு வந்துவிடுவதால், அறுவை சிகிச்சையை எப்படி செய்வது என்பதை நாங்கள் முன்கூட்டியே தீர்மானித்துவிடுகிறோம். மூட்டுப் பகுதியில் 10 - 11 செ.மீ. அளவுக்குத் துளை இடப்படுகிறது. முன்பு, எலும்பை வெட்ட, லெவல் 1, லெவல் 2, லெவல் 10 என்று பல்வேறு நிலைகள் இருக்கும். அதன்படி, அளவு பார்த்து, எலும்பு வெட்டப்படும். ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் அப்படி எதுவும் இல்லை.

மோல்டை, எலும்பின் மேல் வைத்து, செயற்கை மூட்டு பொருத்துவதற்கு ஏற்றதுபோல துல்லியமாகச் செதுக்கிவிடுவோம். பின்னர் வழக்கம்போல மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடக்கும். இதன் மூலம் ஆபரேஷன் நடக்கும் நேரம், ஒரு மணி நேரமாகக் குறைந்து விட்டது. எலும்பு மற்றும் திசுக்களின் சேதமும் குறைந்துவிட்டது. ரத்தக் கசிவு குறைந்துவிடுகிறது, அதனால், நோய்த் தொற்றுக்கு வாய்ப்பு இல்லை. அறுவை சிகிச்சை முடிந்தவர்கள், 15 நாட்களிலேயே இயல்பாக நடக்க முடியும்.

இதில் ஒரே குறைபாடு என்னவென்றால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்த பிறகு, நான்கு வாரங்கள் வரை நோயாளி காத்திருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இது எமெர்ஜென்ஸி அறுவை சிகிச்சை இல்லை என்பதால், நோயாளிகளால் தாங்கிக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் இந்த நேரம் குறையலாம்...'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார் டாக்டர் நந்தகுமார் சுந்தரம்.

நல்ல விஷயம்!

- பா.பிரவீன்குமார்