Published:Updated:

மூளை ரகசியம் அம்பலம்!

- ரியல் டைம் பிரெய்ன் மேப்பிங் அறிமுகம்

மூளை ரகசியம் அம்பலம்!

- ரியல் டைம் பிரெய்ன் மேப்பிங் அறிமுகம்

Published:Updated:
மூளை ரகசியம் அம்பலம்!

து ஒரு காலம். உடலின் உள் உறுப்புகளில் பிரச்னை என்றால், அறுவை சிகிச்சை செய்து உடலைத் திறந்து பார்த்துத்தான் கண்டறிய வேண்டும். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் போன்றவை அறிமுகம் ஆனதும், உடம்பைத் திறந்து பார்க்க வேண்டிய அவசியம் குறைந்துபோனது. அதனால், நவீனத் தொழில்நுட்பங்கள்கொண்ட கிளினிக்கல் ரேடியோ டயக்னோஸ்டிக் பிரிவு மிகவும் முக்கியத்துவம்கொண்டதாக மாறிவிட்டது. இப்போது மூளையில் இருக்கும் ஒவ்வொரு நரம்பின் செயல்பாடுகளையும் அலசும் தொழில்நுட்பம்தான் மருத்துவத்தில் ஹாட்டஸ்ட் கண்டுபிடிப்பு.

மூளை ரகசியம் அம்பலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

சென்னை செட்டி நாடு ஹெல்த் சிட்டியின் கதிர்இயக்க மருத்துவவியல் மூத்த உதவிப் பேராசிரியர் டாக்டர் அபுபக்கர் சுலைமான் பேசுகிறார்...

''முன்பு, மூளையின் செயல்திறன், உள்கட்டமைப்பு மற்றும் அதில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி ஆராய்வதற்கு, போதிய வசதிகள் கிடையாது. இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் வந்ததுதான், எம்.ஆர்.ஐ. எனப்படும் காந்த ஒத்ததிர்வு வரைவு. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் 1990-களில் அறிமுகமாகி இருந்தாலும், தொடர்ந்து பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வந்தன. இப்போது முழுமையடைந்த, 'ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ.’ எனப்படும் செயலாக்கக் காந்த ஒத்ததிர்வு வரைவு வந்துவிட்டது.

மனித மூளையின் செயல்பாடுகள் மிகவும் நுட்பமானவை. மூளையின் எந்த பாகம் செயலாற்றுகிறதோ, அந்தக் குறிப்பிட்ட பாகத்துக்கு மட்டும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனை புதிய தொழில்நுட்பம் மூலம், ஓர் ஒளிர்வாக உணர முடியும். மேலும் நேரடி மூளை வரைவு எனப்படும், ரியல் டைம் பிரெய்ன் மேப்பிங் மூலம் மூளை செயல்படும் விதத்தையும் கண்களால் பார்க்க முடியும்!

மூளை ரகசியம் அம்பலம்!

இதன் மூலம், மூளையின் எந்தெந்த பாகங்கள் குறிப்பிட்ட வேலைகளைச் செய்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அதாவது ஒரு மனிதன் யோசிக்கும்போது, அசையும்போது, பேசும்போது, உணர்ச்சிகளை உணரும்போது செயல்படும் பாகங்களைத் தனியே பிரித்துப் பார்க்க முடியும். அதனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளை, எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது, அவரால் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப முடியுமா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேலும், ஒரு விபத்தில் சிக்கியவருக்கு எப்படிப்பட்ட பாதிப்புகள், எங்கே ஏற்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் கணித்துவிட முடியும். இதன் மூலம் சிகிச்சை அளிப்பதும், உயிர் காப்பதும் எளிது.

முதியவர்களை அதிக அளவில் வாட்டும் ஞாபக மறதி நோய் பாதிப்பை அளவிட்டு, சிகிச்சை அளிப்பதற்கும் இந்த ரியல் டைம் பிரெய்ன் மேப்பிங் பேருதவி புரிகிறது. மூளையில் ஏற்படும் கட்டி (பிரெய்ன் டியூமர்) காரணமாக, எந்தெந்தச் செயல்பாடுகள் பாதிப்பு அடைந்து உள்ளன, இந்தக் கட்டி வளரும் பட்சத்தில் வேறு எந்தப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதையும் இதன் மூலம் கூறிவிட முடியும். இதனால், மூளைக்குக் கதிரியக்கம் கொடுத்துக் கட்டியைக் கரைக்கும் கட்டாயம் இருப்பின், அதற்கு முன்பு எந்த பாகங்களுக்கு மட்டும் கதிரியக்கம் கொடுக்க வேண்டும், எந்த பாகங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதைப் பிரித்துத் திட்டமிடுவதும் எளிது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் இந்த ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் அறியலாம். இதனால் அவர்களைக் குணப்படுத்துவது எளிது. ஒருவர் பொய் சொல்கிறாரா அல்லது உண்மை பேசுகிறாரா என்பதையும் இந்த ஒளிர்வுகள் மூலம் ஆராய்ந்து சொல்லிவிட முடியும். ஆனால், இது இன்னமும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது.

இந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியில், 'டிப்ஃயுஷன் டென்சார் இமேஜிங்’ (Diffusion Tensor Imaging) என்ற தொழில்நுட்பம் வந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இதன் மூலம் மூளையின் வெண் பகுதி (ஒயிட் மேட்டர் என்று மருத்துவத்தில் சொல்வோம்) மற்றும் நரம்பிழைகளைத் தனியாகப் பிரித்துப் படமாக்க முடியும். இதன் மூலம் நரம்பிழைத் தொடர்ச்சி மற்றும் குறைபாடுகளைக் கண்டறியலாம். பக்கவாதம், வலிப்பு, மனநோய், மூளைச் சிதைவு, வளர்சிதை மாற்ற நோய், கிருமித்தொற்று, மூளைக் கட்டி போன்ற நோய்களால் எந்தெந்த நரம்பிழைகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதைத் துல்லியமாக அறிந்து சிகிச்சை மேற்கொள்ள இது உதவுகிறது.

இந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியில் இன்னொரு முன்னேற்றமாக, 'ஸ்பெக்ட்ராஸ்«காபி’ அறிமுகமாகி உள்ளது. ஸ்கேன் செய்யும்போது கண்டறியப்படுவது சாதாரணக் கட்டியா, வளரக்கூடியதா, புற்றுநோய்க்கான வாய்ப்பு இருக்கிறதா என்பன போன்ற தகவல்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் இது. எம்.ஆர்.ஐ. என்பது மிக வலிமையான காந்தப்புலம். இந்தப் பரிசோதனையால் மூளைக்கு பாதிப்பு ஏற்படும் என்று பலர் பயப்படுகிறார்கள். உண்மையில் இது கதிர்வீச்சு இல்லாதது, அதனால், எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பு இல்லை. எளிய பரிசோதனைகள் மூலம், மூளையில் உள்ள எல்லாப் பிரச்னைகளையும் கண்டறிந்துவிட முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடுகளையும் கண்டறிய ஆய்வுகள் நடக்கின்றன...'' என்றார்.

மூளையில் ஒரு பிரச்னை என்றால், இனி நடுங்க வேண்டியது இல்லை என்பது எத்தனை நல்ல செய்தி!

- பா.பிரவீன்குமார்

மூளை ரகசியம் அம்பலம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism