Published:Updated:

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தும் வல்லாரைக்கீரை சாதம்! - செய்முறை

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தும் வல்லாரைக்கீரை சாதம்! - செய்முறை
குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தும் வல்லாரைக்கீரை சாதம்! - செய்முறை

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தும் வல்லாரைக்கீரை சாதம்! - செய்முறை

வல்லாரைக்கீரை சாதம் செய்முறைக்கு முன், அது சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை நியூட்ரிஷியனிஸ்ட் ப்ரியா ராஜேந்திரன்  சொல்வதைப் பாருங்கள்.

உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில ரெசிப்பிக்களை  நீங்களே வீட்டில் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் குழந்தையின் நினைவாற்றலை வளர்க்கவல்ல வல்லாரைக்கீரையில் செய்யக்கூடிய கீரை சாதம் ரெசிப்பி வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த வித்யா பாரதி.

தேவையானவை:

வல்லாரைக்கீரை - ஒரு கப்

கறிவேப்பிலை - கால் கப் 

கொள்ளு - கால் கப்

உளுந்தம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 7

பெருங்காயத்தூள் - சிறிதளவு

சீரகம் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


செய்முறை:

வல்லாரைக்கீரை மற்றும் கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி, நிழலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வாணலியில் வறுத்து, ஆறவைத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை, கறிவேப்பிலையை அதில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். 

                                    - சு.சூர்யா கோமதி 

அடுத்த கட்டுரைக்கு