Published:Updated:

கணையத்தின் நிறம் கறுப்பா?

அழுகலை நீக்கும் புதிய சிகிச்சை

கணையத்தின் நிறம் கறுப்பா?

அழுகலை நீக்கும் புதிய சிகிச்சை

Published:Updated:
கணையத்தின் நிறம் கறுப்பா?

ரு காலத்தில் கணைய அழற்சி நோய் வந்தால், அதோகதிதான்! இதனால்  வரும் கணைய அழுகலுக்கு மரணத்தைத் தழுவுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தது. அதன் பின்னர், இந்த கணைய அழுகலை சரிசெய்ய வயிற்றை அறுத்து அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தும் முறை வந்தது. ஆனால், இந்த அறுவை சிகிச்சை மிக நீண்டதாகவும்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்கலானதாகவும் இருந்தது. அதனால் இறப்பு விகிதம் அதிகம். இது தவிர, கணையத்தைச் சுற்றிலும் உள்ள மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. தற்போது இந்தப் பெரும் பிரச்னைக்குத் தீர்வாக ஒரு புதிய சிகிச்சை முறை வந்திருக்கிறது. இதை, 'மினிமலி இன்வேஸிவ் பேங்க்ரியாடிக் நெக்ரோசெக்டமி (Minimally invasive pancreatic necrosectomy) என்று சொல்கின்றனர். இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே செய்யப்படும் இந்த வகை அறுவை சிகிச்சைகள் குறித்து, செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குடல் நோய்கள் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் இளங்கோ விரிவாகப் பேசினார்.

''பித்த நாளத்தில் கல், அதிகம் மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று ஆகியவற்றால் கணையம் பாதிக்கப்பட்டு அழுகிப்போய், அதனால் உடலில் மற்ற பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த அழுகிய

கணையத்தின் நிறம் கறுப்பா?

பகுதி உடலுக்கு உள்ளேயே இருப்பதால், தொற்று அதிகமாகி... உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இந்த அபாயத்தில் இருந்து நோயாளியைக் காப்பாற்ற ஒரு புதிய சிகிச்சை முறை வந்துவிட்டது. முன்பு இந்த நோய் பாதிப்பு வந்தால், வயிற்றைக் கிழித்து, கணையத்தை அடைய வேண்டும். அது மேஜர் சர்ஜரி என்பதால், மூன்று  மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெறும். அதிக அளவில் ரத்த இழப்பும் ஏற்படும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்ததும், வயிற்றை உடனே மூட முடியாமல், திறந்தே வைக்கவேண்டிய நிலையும் ஏற்படும். இதனால், நோயாளிகளுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. இப்போது இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வாக நவீன தொழில்நுட்பக் கருவிகள் வந்துவிட்டன. அதனால், முன்பு ஓப்பன் சர்ஜரியாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை, இன்று சிம்பிள் சர்ஜரி ஆகிவிட்டது!

கணைய அழற்சி பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் மேல் வயிறு வலிக்கும்.  முதுகிலும் வலி ஏற்படும். பின்னர் 'முதுகை வளைத்து உட்கார்ந்தால் நன்றாக இருக்குமே’ என்ற அளவுக்கு வலி அதிகமாகும். வாந்தி வரும். ஆனால் அளவு குறைவாக இருக்கும். இப்படிப்பட்ட அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு, இதற்கென உள்ள சில பிரத்யேக சோதனைகளை நடத்துவோம். நோயாளிக்கு மருந்து கொடுத்து சி.டி. ஸ்கேன் எடுக்கச் செய்வோம். அதில், நல்ல ரத்த ஓட்டம் உள்ள கணையம் என்றால், வெள்ளையாகத் தெரியும். அது அழுகி இருந்தால், அந்தப் பகுதி மட்டும் கறுப்பாக இருக்கும். இதை வைத்தே நோயின் தீவிரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

கணைய நோய்க்கு மருந்து கொடுத்து ஏற்ற நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வோம். இதில்

கணையத்தின் நிறம் கறுப்பா?

இரண்டு வகையான அறுவை சிகிச்சை முறை உள்ளது. நோயாளிக்கு 'எண்டோஸ்கோபி’ மூலமாக இரைப்பையில் சிறு துளை போட்டு கணையத்தில் இருக்கும் தொற்றை வெளியேற்ற முடியும். சிலருக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் விலா எலும்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய துளை போட்டு  தொற்றுகளை வெளியே எடுப்போம். இதில் புதிதாக லேப்ராஸ்கோப்பியுடன் நெப்ரோஸ்கோப்பையும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,

சிறுநீரகத்தில் கல் அகற்றப் பயன்படும் பி.சி.என்.எல். தொழில்நுட்பம் அது.  அதாவது சிறுநீரகத்தில் சிறு துளையிட்டு, பின்னர் அதனை விரிவுபடுத்தி சிறுநீரகக் கற்களை வெளியே எடுப்பது போன்று, இடது பக்கம் விலா எலும்புக்கு கீழ் பக்கம் ஸ்கேன் செய்து அதன் அடிப்படையில் கணையத்தின் அழுகிய பகுதியை சிறுதுளை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றுவோம். இதனால் ஏற்கெனவே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, மிகக் கடுமையான அறுவை சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. முன்பு ஒவ்வொரு முறையும் வயிறைத் திறந்து சுத்தம் செய்யும்போது குடலில் ஓட்டை விழுவது, மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவது போன்ற பிரச்னைகள் இருந்தன. இந்த புதிய டெக்னிக் மூலமாக நோயாளிக்குப் பாதகம் குறைவு.

முன்பு எல்லாம் அறுவை சிகிச்சை முடிந்தால் 3 மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், இப்போது 4 வாரத்திலேயே இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம். மேலும், விரைவிலேயே வழக்கமான உணவுகளையும் நோயாளிகள் உட்கொள்ள முடியும். இந்த புதிய முறை சிகிச்சையால் இறப்பு விகிதம் மிகவும் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது!'' என்றார் இளங்கோ.

மதுவை விலக்கிவைப்போம்... கணைய அழற்சியைத் தடுப்போம்!

- பா.பிரவீன்குமார்

படம்: சொ.பாலசுப்ரமணியன்

கணையத்தின் நிறம் கறுப்பா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism