Published:Updated:

மஞ்சள் காமாலைக்கு பச்சை சிக்னல்!

வந்தாச்சு புதிய அறுவை சிகிச்சை

மஞ்சள் காமாலைக்கு பச்சை சிக்னல்!

வந்தாச்சு புதிய அறுவை சிகிச்சை

Published:Updated:
மஞ்சள் காமாலைக்கு பச்சை சிக்னல்!

'மஞ்சள் காமாலைக்கு ஆங்கில மருத்துவத்தில் சரியான மருந்து கிடையாது...’ என்பது பரவலாக மக்களிடம் உள்ள நம்பிக்கை. அதனால், கீழாநெல்லி  மீது அக்கறை காட்டுவார்கள். உண்மையில் அனைத்து விதமான மஞ்சள் காமாலை நோய்க்கும் கீழாநெல்லி தீர்வாக அமைந்துவிடுவது இல்லை. இந்த விழிப்பு உணர்வு மக்களிடம் இல்லாத காரணத்தால், பலரும்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நோய் மிகவும் முற்றிய நிலையில்தான் ஆங்கில மருத்துவர்களைத் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சிக்கலானதாக இருப்பதால், பெரும்பாலான நோயாளிகளைக் காப்பாற்ற முடிவது இல்லை.

 இந்த அறுவை சிகிச்சை இப்போது மேம்படுத்தப்பட்டு, எளிமையாகிவிட்டது. உயிர்களைக் காப்பாற்றும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி உள்ளன என்கிறார் கோயம்புத்தூர் கேட்வே க்ளினிக்ஸ் குடல் நோய்கள் மற்றும் லேப்ராஸ்கோபி சர்ஜன் டாக்டர் கே.செந்தில்குமார்.

''மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு, மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. நமது உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்கள் சராசரியாக 120 நாட்கள் உயிருடன் இருக்கும். பின்னர் அவை மண்ணீரலில் அழிக்கப்பட்டு ஹீம் மற்றும் குளோபின் என்று இரண்டு தனித்தனிப் பொருளாகப் பிரிக்கப்படுகின்றன. ஹீம் என்பது கல்லீரலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பிளுருபினாக மாற்றம் அடைந்து பித்தநாளம் வழியாகக் குடலுக்குள் செல்லும். மனிதக் கழிவு மஞ்சள் நிறத்தில் இருக்க, இதுவே காரணம். இந்த செயல்பாட்டில் எங்கு பிரச்னை வந்தாலும், மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். ரத்தம் சம்பந்தமான நோய் பாதிப்பின் காரணமாக, உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் சீக்கிரமாக அழிக்கப்படும். அதாவது, 120 நாட்களுக்கு முன்னதாகவே சிவப்பணு அழிக்கப்படும் நிலையில், அனீமியா ஏற்படும். அதே நேரம் அதிக அளவு ஹீம் கல்லீரலுக்குள் நுழைவதால், அதனை சமாளிக்க முடியாத நிலையும் உண்டாகும். இந்த நிலைக்கு ஹெமோலிடிக் ஜாண்டிஸ் என்று பெயர்.

இரண்டாவதாக ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று காரணமாகவும், மது அருந்துவதாலும் சிலருக்கு

மஞ்சள் காமாலைக்கு பச்சை சிக்னல்!

மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இதில் கல்லீரல் திசுக்கள் 80 சதவிகிதம் வரை பாதிக்கப்படும் வரை காமாலை வராது. அதற்கு மேலும் தொடரும் போது காமாலை மற்றும் கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது.

மூன்றாவதாக, குடலுக்குச் செல்லும் பித்த நாளத்தில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும், மஞ்சள் காமாலை வரலாம். பித்தப் பையில் உள்ள கல், பித்தப் பையிலேயே இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், அது பித்த நாளத்துக்கு வந்து அடைப்பு ஏற்படுத்தும்போதும் மஞ்சள் காமாலை வரும்.

பித்த நாளத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு, வயிற்று வலி, மஞ்சள் காமாலையுடன் சேர்ந்த குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இது போன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக கல்லீரல் சம்பந்தமான ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும். அதில், எந்த வகையான மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். முதல் இரண்டு வகையான மஞ்சள் காமாலை என்றால், மருந்துகள், மாத்திரைகள் கொடுத்து சரிசெய்துவிடலாம். மூன்றாவது வகைக்கு அறுவை சிகிச்சை செய்துதான், அடைப்பை அகற்ற வேண்டும்.

முன்பு, வயிற்றைத் திறந்து பித்தப் பையை அகற்றி, பித்தக் குழாயைத் திறந்து பைபாஸ் செய்ய வேண்டும். நோயாளிக்கு டி டியூப் பொருத்தப்படும். குறைந்தது மூன்று வாரங்களுக்கு இந்த டியூபோடு நோயாளிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் இந்த டியூபை அகற்றிவிட்டு, தையல் போடுவோம்.

மஞ்சள் காமாலைக்கு பச்சை சிக்னல்!

இப்போது இந்த பிரச்னைக்குத் தீர்வாக, இ.ஆர்.சி.பி. எனப்படும் எண்டாஸ்கோபிக் ரெட்ரோகிரேட் கொலஞ்சியோ பாங்க்ரியாடோகிராஃபி என்ற சிகிச்சை முறை வந்துவிட்டது. இந்த சிகிச்சை முறையில், வாய் வழியாக எண்டாஸ்கோப்பியை செலுத்தி பித்த நாளம் குடலில் சேரும் இடத்தை அடைந்து, கல் எங்கே அடைத்து உள்ளது என்பதைக் கண்டுபிடித்து, பேஸ்கெட், பலூன் மற்றும் லித்தோட்ரிப்டர் கருவிகளைக்கொண்டு உடைக்கிறோம். உடைக்கப்பட்ட கற்கள் கழிவு மூலம் வெளியே சென்றுவிடுவதால், நோயாளிக்கு முழு நிவாரணம் கிடைத்துவிடும். மஞ்சள் காமாலை, உடனடியாகக் குறையத் தொடங்கிவிடும். இந்த நோயாளிகளுக்கு மீண்டும் பித்தப்பையில் இருந்து கற்கள் வந்து அடைக்க வாய்ப்பு அதிகம் என்பதால், பித்தக் பையை அகற்றிவிடுவதே நல்லது.

அதனால் அடுத்த நாள் லேப்ராஸ்கோபி அறுவைச் சிகிச்சை செய்யப்படும். இப்போது அறிமுகமாகி உள்ள மேம்படுத்தப்பட்ட கருவிகள் மூலம் மிகத் துல்லியமாக வயிற்றுக்குள் உள்ளதை கம்ப்யூட்டர் திரையில் காணலாம். வெசல்சீலிங் கருவியானது, 5 மி.மீ. அளவு ரத்தக் குழாயைக்கூட சீல் செய்து வெட்டுவதால், ரத்த இழப்பு ஏற்படுவது இல்லை. பித்தப்பை அகற்றிவிடுவதால், மீண்டும் கற்கள் வராமல் தடுக்கப்படுகிறது. சிலருக்கு கேன்சர் காரணமாகவும் அடைப்பு வரலாம். அதற்கும் சரியான சிகிச்சை முறைகள் உள்ளன.

இந்த அறுவைச் சிகிச்சை முடிந்த மூன்று மணி நேரங்களிலேயே, நோயாளி நடக்க ஆரம்பித்துவிடலாம். அன்று மாலையோ அல்லது அடுத்த நாள் காலையோ, டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம். !'' என்றார்.

மஞ்சள் காமாலை நோய் இப்போது ஓர் உயிர்க் கொல்லி நோய் அல்ல என்பது எத்தனை நல்ல செய்தி!

- பா.பிரவீன்குமார்

மஞ்சள் காமாலைக்கு பச்சை சிக்னல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism