Published:Updated:

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

மனமே நலமா?

Published:Updated:

முன்கதைச் சுருக்கம்

மனமே நலமா?

கல்லூரி மாணவி ஒருவருக்கு நள்ளிரவில் அலறியடித்து எழும் பிரச்னை இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு நைட் ஷோ படம் பார்த்துவிட்டு,  தனியாக வீடு திரும்பியபோது, பேய் பிடித்து இருக்கலாம் என்று நினைத்து வீட்டில் பூஜை செய்து இருக்கிறார்கள். ஆனாலும் பிரச்னை சரியாகவில்லை. இந்த ஆண்டு அந்தப் பெண் கல்லூரியில் சேர்ந்து, ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்திருக்கிறார். அங்கும் இப்படி அலறியடித்து எழுந்திருக்கவே, மற்ற பெண்கள் பயந்துவிட்டனர். இதனால், அவள் கூடப் படிக்கும் மற்ற பெண்கள் அவளிடம் பழகவே பயந்து, கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். எங்கே தன்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்களோ என்று மன அழுத்தம் அந்தப் பெண்ணுக்கு. இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், மன நல மருத்துவரைச் சென்று சந்திக்கும்படி அவளது பெற்றோருக்கு ஆலோசனை கூறவே, டாக்டரிடம் வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனமே நலமா?

திருச்சியில் இருந்து, தன் குட்டி மகளுடன் வந்திருந்தார் அந்த அப்பா. துறுதுறுவென இருந்தாள் சிறுமி. 

##~##

'இவள் என் ஒரே மகள் தேன்மொழி. எட்டாவது படிக்கிறாள். ரெண்டு வாரத்துக்கு முன்னால், இவளோட பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா நடந்தது. இவளும், இவள் தோழியும் ஆண்டு விழாவில் டான்ஸ் ஆடி, முதல் பரிசும் வாங்கினாங்க. அப்ப, இவ சந்தோஷத்துக்கு அளவே இல்லை. டான்ஸ் ஆடினது பத்தியும், பரிசு வாங்கினது பத்தியும் எல்லார்கிட்டயும் சொல்லிட்டே இருந்தா.  'சரிம்மா, ரொம்ப சந்தோஷம்தான், அதான் பரிசு வாங்கிட்டியே... விடு’ன்னு சொன்னாலும் கேட்காமல், அதைப்பத்தியே தொடர்ந்து பேசிட்டு இருந்தாள்.

இந்த சந்தோஷத்தை எல்லோர்கிட்டயும் பகிர்ந்துக்கிட்டதுதான் பெரிய கொடுமை. ஸ்கூல்ல இவளோட படிக்கிற பசங்க, ஹெச்.எம்., டீச்சர்ஸ் எத்தனை பேர்னு கணக்கெடுத்து, அவங்களுக்கு எல்லாம் டிரெஸ் வாங்கிக்கொடுக்கணும்னு துணிக்கடைக்குப் போயிருக்கா. அங்கே ரொம்ப சாதுர்யமாப் பேசி எல்லாரையும் நம்பவெச்சு, துணிகளை எடுத்திருக்கா.

எல்லாம் பேக் செஞ்சு பணம் கட்டச் சொல்லியிருக்காங்க. அப்போ, 'எங்க அப்பா வந்து பணம் தருவாங்க’னு சொல்லி, எனக்கு போன் போட்டு வரச்சொன்னா. அங்க போய், அவ செஞ்சிருந்த காரியத்தைப் பார்த்தா எனக்கு மயக்கமே வந்துடுச்சு. மொத்தம் 65 ஆயிரம் ரூபாய்க்கு, துணி வாங்கி இருந்தா. 'ஏன் இப்படிச் செய்தே?’னு அவளைத் திட்டினேன். ஆனா அவ, திருக்குறள், சங்க இலக்கியத்துல இருந்து சில பாட்டைச் சொல்லி, 'நாம மத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்’னு தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டா. இவ செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டு, கொஞ்சமா பணம் கொடுத்துட்டு இவளைக் கூட்டிட்டு வந்தேன். அப்பவும், சந்தோஷமாவே இருந்தா.

ஒருநாள் திடீர்னு ராத்திரி ஒரு மணிக்கு எழுந்து, குளிச்சுட்டு வந்து,  தூங்கிட்டிருந்த எங்களை எல்லாம் எழுப்பி, 'ஏன் நீங்க இவ்வளவு சோம்பேறிங்களா இருக்கீங்க? என்னை மாதிரி சுறுசுறுப்பா இருக்கணும்’னு சொன்னா. அவளைத் திட்டித் தூங்கவெச்சோம். அடுத்த நாளும், நைட் முழுக்கச் சத்தமா பாட்டுப்போட்டு டான்ஸ் ஆடிட்டே இருந்தா. தூக்க மாத்திரை கொடுத்து, அவளைத் தூங்கவெச்சோம்.

ஒருநாளைக்கு ஐந்து, ஆறு முறை டிரெஸ் மாத்திக்கிறா. மேக் -அப் போட்டுக்கிறா, இலக்கியம், தானம் தர்மம்னு நிறைய விஷயங்களைப் பேசிட்டே இருக்கா. திடீர்னு காதல் கவிதையா எழுதி, எதிர் வீட்டில் இருக்கிற 30 வயசு ஆசிரியருக்குக் கொடுத்திருக்கா. அவர் பயந்து, திட்டி அனுப்பியிருக்கார். ஆனாலும், விடாம அவரையே தொந்தரவு செஞ்சிருக்கா. 'நாம ஏன் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது’னு கேட்டிருக்கா. அவர் என்கிட்ட வந்து புலம்பினார். இவ இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாம நடந்துக்கிறதைப் பார்த்ததும், ஏதோ பிரச்னை இருக்கும்னு புரிஞ்சது, அதனாலதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன்'' என்றார்.

தேன்மொழிக்கு என்ன ஆனது? அவளது அதிக சந்தோஷத்துக்கும், செயலுக்கும் காரணம் என்ன? உங்கள் பதில்களை எழுதி அனுப்புங்கள்.

டாக்டர் செந்தில்வேலன் பதில்...

மனமே நலமா?

'இளம் பெண் பேய்ப் படம் பார்த்த பயத்தினால், தூக்கத்தில் கத்தும் பிரச்னை ஆரம்பமாகி இருக்கிறது. இது ஒரு வகையான மன வியாதிதான். சிலருக்கு, தூக்கமின்மை ஒரு பிரச்னையாக இருக்கலாம். சிலர் நன்றாகத் தூங்குவார்கள், ஆனால் தூங்கும்போது சில பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பெண்ணுக்கு, தூக்கத்தில்தான் பிரச்னை. இப்படி, தூக்கத்தில் திடீரென அலறியடித்து எழுந்திருப்பது, பயத்தில் வியர்த்து மூச்சு வாங்குவதை, 'நைட் டெரர்’ என்போம். இவர்களுக்கு, தூங்க ஆரம்பித்த ஒன்று, இரண்டு மணி நேரத்தில் இது நடக்கும். என்ன நடந்தது என்று இவர்களுக்கே தெரியாது. சமாதானப்படுத்தினால் தூங்கிவிடுவார்கள். அடுத்த நாள் காலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவர்களுக்குத் தெரியாது. சிலருக்கு விடியற்காலையில் இதுபோன்று வரும். இதை, 'நைட்மேர்’ (Nightmare) என்போம். இவர்களுக்கு, கனவு தெளிவாகத் தெரியும். எதற்காக எழுந்தோம் என்று தெரியும். சிலர் தூக்கத்தில் நடப்பார்கள், பேசுவார்கள், சிறுநீர் கழிப்பார்கள், பல்லைக் கடிப்பார்கள். இதுபோன்ற தூக்கத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, 'பாராசோம்னியா’ என்று பெயர். இதை மனநல மருத்துவத்தில் குணப்படுத்த முடியும்.

இந்தப் பெண்ணுக்கு மருந்து மாத்திரைகளுடன், சப்போர்ட்டிவ் சைக்கோதெரப்பி அளிக்கப்பட்டது. அதாவது, 'சினிமாவில் பயங்கரமாகக் காட்டி இருப்பது எல்லாம் நடிப்புதான். நிஜ வாழ்வில் பேய், பிசாசு என்று எதுவும் இல்லை. பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும்’ என்று கவுன்சலிங் அளிக்கப்பட்டது. 'இதுபோன்று பயப்படக்கூடிய படங்களுக்கோ, இடங்களுக்கோ கூட்டிக்கொண்டு செல்வது, தனித்து அனுப்புவது கூடாது’ என்று பெற்றோருக்கும் ஆலோசனை கூறினோம். தொடர் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் காரணமாக அந்தப் பெண் தற்போது தூக்கத்தில் எழும் பிரச்னையில் இருந்து மீண்டுள்ளார்.

மனமே நலமா?

வாசகர் கடிதம்

பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த திகில், கொலைப் படத்தின் தாக்கத்தால்தான் அந்தப் பெண்ணுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ- மாணவிகள் சினிமாவில் வரும் கதாபாத்திரத்தை உண்மை என்று நம்பி, அதனுடன் ஒன்றி மகிழ்கின்றனர். அதனால், ஒரு குறிப்பிட்ட வயதுவரை அவர்களை, இதுபோன்ற படங்களைப் பார்க்க அழைத்துச்செல்லக்கூடாது. தகுந்த மனநல சிகிச்சையின் மூலம் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பயத்தைப் போக்கலாம்.

- ப.கிருஷ்ணமூர்த்தி, காட்டுப்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism