சிஃபிலிஸ் (SYPHILIS) என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவகையான பால்வினை நோய். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவருக்கு, பாலின உறவின் மூலம் இந்த நோய் பரவுகிறது. கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து சேய்க்கும் பரவக்கூடியது.

அறிகுறிகள்:

இந்த நோய் மூன்று நிலைகளாகக் காணப்படுகிறது. முதல் நிலையில் சிவந்த, வலியற்ற அரிப்பற்ற பொத்தான் வடிவில் இருக்கும் புண் ஆசனவாய், பிறப்புறுப்புப் பகுதிகளில் தோன்றும்.

இரண்டாம் நிலையில் படைகள், உடல் வலி, தொண்டைக் கரகரப்பு, காய்ச்சல், நெரிகட்டு ஏற்படும்.

மூன்றாம் நிலையில் விளைவுகள் பல வருடங்கள் கழித்தும்கூடத் தோன்றும். மூளை, நரம்பு, கண், இதயம், தோல் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலானவர்கள் இதன் அறிகுறிகளை பல மாதங்கள் வரை கவனிக்காமல் இருந்துவிடுகின்றனர். ஆரம்பநிலையிலேயே கண்டறிவதன் மூலம் இந்தப் பிரச்னையை எளிதில் குணப்படுத்திவிட முடியும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

ஒரு கிராம் வெள்ளைச் சங்கு புஷ்பத்தின் வேர்ப் பொடியைத் தேன் சேர்த்து உண்ணலாம்.

புங்கம்பூவை நெய்விட்டு வறுத்து சூரணமாக்கி, தினமும் சிட்டிகை அளவு 40 நாட்கள் உண்ணலாம்.

கால் ஸ்பூன் பரங்கிப்பட்டைத் தூளை மூன்று வேளை பாலில் கலந்து உண்ணலாம்.

கருங்குங்கிலியப் பொடி அல்லது சிவப்புக் குங்கிலியப் பொடி ஒரு கிராம் எடுத்து, பாலில் கலந்து உண்ணலாம்.

சிறுசெருப்படை, வேம்பின் பட்டை, பொன்னாங்கண்ணிச் சாறு இவற்றைச் சமஅளவு சேர்த்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.

2 கிராம் வேம்பின் பிசினைப் பொடித்து நீரில் கலந்து உண்ணலாம்.

2 கிராம் வால்மிளகுத் தூளுடன் 130 மி.கி. படிகாரம் சேர்த்து மூன்று வேளை உண்ணலாம்.

கீழாநெல்லி இலையை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு எடுத்து, பசுவின் தயிரில் கலந்து உண்ணலாம்.

ஆடையட்டி இலையை அரைத்து, அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து உண்ணலாம்

புளிவியாரைக் கீரையோடு மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

குடசப்பாலை பட்டைச்சாறு, இஞ்சிச்சாறு தலா அரை ஸ்பூன் அளவு எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

நெல்லி வற்றலைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

கால் ஸ்பூன் தேற்றான் விதைப்பொடியைப் பாலில் கலந்து உண்ணலாம்.

சந்தனத்தூள் 8 கிராம், 260 மி.லி. வெந்நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறிய பின் வடித்து 30 மி.லி. அருந்தலாம்.

அம்மான் பச்சரிசி இலையை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

வெள்ளெருக்கு இலை கொட்டைப்பாக்கு அளவு எடுத்து சிறிது மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.

வெளிப்பிரயோகம்:

சிவனார் வேம்பை எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பூசலாம்.

சேராங்கொட்டை குழித் தைலத்தைப் பூசலாம்.

நீரடி முத்துப்பருப்பைத் தயிரில் ஊறவைத்து, காடியில் அரைத்துப் பூசிக் குளிக்கலாம்.

ஓரிதழ் தாமரை, பச்சைக் கற்பூரம், கோரோசனை இவற்றைப் பசுவின் நெய் விட்டு அரைத்துப் பூசலாம்.

அழிஞ்சில் பட்டையை நீர் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

புன்னை விதையை, தயிர் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

பெருந்தேட்கொடுக்கு இலையை அரைத்துப் பூசலாம்.

குங்குமப்பூவைத் தேனில் அரைத்துப் பூசலாம்.

காட்டாமணக்கு பாலைத் தடவலாம்.

காட்டுக் கொள்ளு விதையைத் தேனில் அரைத்துப் பூசலாம்.

காட்டு எலுமிச்சைப் பழத்தோலை விளக்கெண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.

உணவு:

சேர்க்க வேண்டியவை:

பூண்டு, வெங்காயம், ஏப்ரிகாட், ப்ருக்கோலி, கேரட், எலுமிச்சை, ஆரஞ்சு.

தவிர்க்க வேண்டியவை:

துரித உணவுகள், அசைவ உணவுகள், கொழுப்பு, எண்ணெய். பாதுகாப்பற்ற பாலுறவு.