டாக்டர் சூசன் சாலமன்,  மனநல மருத்துவர்,

பிம்ஸ் மருத்துவமனை, புதுச்சேரி.

பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படிப்பவர்கள் செந்திலும் உமாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரே ஊர் என்பதால் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்றுவந்தனர். உமாவுக்கு, அப்பா இல்லை. அம்மாவும், அண்ணனும்தான், கஷ்டப்பட்டு உமாவைப் படிக்கவைத்தனர். உமா, தினமும் கல்லூரியில் நடந்த விஷயங்களை அம்மாவிடம் பகிர்ந்துகொள்வார். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது செந்திலுக்கும் உமாவுக்கும் காதல் மலர்ந்தது. செந்தில் முதலில் காதலைச் சொல்ல, செந்தில் தன்னைக் காதலிப்பதை அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் உமா. முதலில் இதெல்லாம் வேண்டாம் என்று மறுத்த அம்மாவும், பின்னர் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முதுநிலைப் பட்டம் முடித்ததும் இருவருக்கும் உள்ளூரிலேயே நல்ல வேலை கிடைத்தது. ஆனால், வேறுவேறு அலுவலகம். தினமும் அலுவலகம் முடிந்ததும் சந்திப்பதும், வெளியே எங்காவது சென்றுவிட்டு வீட்டுக்கு தாமதமாக வருவதும் வழக்கமானது. சில வருடங்களுக்கு முன்பு, செந்திலுக்கு வெளியூருக்கு இடமாற்றம் கிடைத்தது. தன் வேலையை உதறிய உமா, செந்தில் போன ஊரிலேயே புதிய வேலையைத் தேடிக்கொண்டார். இதேபோல, நான்கு ஐந்து முறை செந்தில் எந்த ஊருக்குப் போகிறாரோ, அந்த ஊருக்கே போய், வேலை பார்க்க ஆரம்பித்தார் உமா. செந்தில் வீட்டில் பேசி, திருமணத்தை முடிக்கலாம் என்று உமாவின் அம்மாவும் அண்ணனும் விரும்பினர். ஆனால், 'இப்போதைக்கு வேண்டாம். அவரது தங்கைக்கு கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம்'' என்று தடுத்து வந்திருக்கிறார் உமா.

காதலித்து ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில், திடீரென்று ஒருநாள் செந்தில், 'நாம ரெண்டு பேரும் வேறவேற ஜாதி. அதனால, எங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க. இனிமே நாம சந்திக்கிறதை நிறுத்திடலாம்' என்று கூற, அதிர்ந்த உமா, அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். உடனே, உமாவின் அம்மாவும் அண்ணனும் செந்தில் வீட்டுக்குப்போய் பேசினர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட செந்திலின் பெற்றோர், உமாவை ஏற்றுக்கொண்டு திருமணத்துக்கும் சம்மதித்தனர். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் உமா.

ஒருநாள் உமாவின் அம்மா, அண்ணாவை வீட்டுக்கு வரும்படி அழைத்தார் செந்திலின் அப்பா. 'ஜாதியை மீறிக் கல்யாணம் பண்ணினால் பிரச்னையாகிடும். எங்களை மன்னிச்சிடுங்க. எங்க பையனுக்கு வேற இடத்தில பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டோம். உங்க பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துக்குங்க'' என்று கூறி அனுப்பிவிட்டார். உமாவின் குடும்பம் நொறுங்கிப்போனது. 'இதைக் கேட்டால் உமா எப்படித் துடிப்பாளோ?’ என்று பயந்தபடி வீட்டுக்கு வந்தனர்.

உமாவிடம் நடந்ததைச் கூறினர். 'அவங்க அப்படி சொல்லியிருக்க மாட்டாங்க. நாங்க சேருவதைத் தடுக்க நீங்கதான் பொய் சொல்றீங்க' என்று கூறிச் சண்டைபோட்டதோடு, நேராக செந்திலை சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கே போனார்.

'எங்க வீட்டில் கல்யாணத்துக்குச் சம்மதிக்கலை, இனி நீ என்னைப் பார்க்க வராதே' என்று சொல்லிவிட்டார் செந்தில். உமா விடாமல், மீண்டும் மீண்டும் செந்திலைச் சந்திக்க அவர் அலுவலகம் செல்வதும், செந்தில், உமாவை சந்திக்க விரும்பவில்லை என்று திருப்பி அனுப்புவதுமாக இருந்தது.

மேலும், உமா தன் அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம், செந்தில் வீட்டுக்கு சென்று தகறாறு செய்வதும் வாடிக்கையானது. இந்த நிலையில் செந்திலுக்குத் திருமணம் நடக்க, 'இனி செந்திலைத் தேடிப் போகாதே, அவனைப் பற்றி நினைக்காதே' என்று உமாவின் அம்மா சொல்லியிருக்கிறார். ஆனால், அதைக் கேட்காமல் மீண்டும் செந்தில் வீட்டுக்குச் சென்று பிரச்னை செய்திருக்கிறார்.

திருமணம் ஆன ஒரு வருடத்தில் செந்திலுக்குக் குழந்தையும் பிறந்தது. இந்தத் தருணத்தில் செந்தில் வீட்டுக்கு உமா செல்ல, செந்திலின் குழந்தையைக் காண்பித்திருக்கின்றனர். ஆனாலும் உமா, 'இது செந்திலோட தம்பி குழந்தை. 'உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்’னு எனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கார்' என்று சண்டை போட்டிருக்கிறார். பொறுமை இழந்த செந்திலின் மனைவியும் அம்மாவும், உமாவை அடித்துக் கீழே தள்ளியதில், உமாவுக்குக் காயம் ஏற்பட்டது.

கடைசியில் செந்திலின் திருமண ஆல்பத்தைக் காட்டியிருக்கிறார்கள். 'ஆல்பத்தில் இருக்கிறது செந்தில் இல்லை, அவரோட தம்பி' என்று கூறியிருக்கிறார் உமா. இரு தரப்புப் பெற்றோரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உமா ஒப்புக்கொள்ளாதது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உறுத்தலாக இருக்கவே, உமாவை என்னிடம் அழைத்துவந்தனர். உமாவின் அம்மாவும் அண்ணனும் நடந்ததை விவரித்தனர்.

உமாவுக்கு 'டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ இருப்பதைக் கண்டறிந்தேன். இந்தப் பிரச்னைக்கு மூளையில் டோபோமைன் என்ற ரசாயனம் அதிகரித்ததே காரணம். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களை, 'நீங்கள் நம்புவது தவறு' என்று நிரூபித்தாலும், அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி நிரூபிக்க முயற்சிப்பது எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும். சில விஷயங்களை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். உமா விஷயத்தில் செந்திலுக்கு திருமணம் ஆனதன் அடையாளமாக திருமண ஆல்பத்தையே காட்டியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

உள் நோயாளியாகச் சேர்த்து உமாவுக்கு சிகிச்சை அளித்தோம். 'டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ பிரச்னைக்கு, மாத்திரை மருந்து மட்டுமே தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 'நீங்கள் நினைப்பது தவறு' என்று டாக்டரும் கவுன்சலிங் கொடுக்க ஆரம்பித்தால், நோயாளிக்கு டாக்டர் மீதும் நம்பிக்கை இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.

உமா 12 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். செந்திலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தவர், டிஸ்சார்ஜ் ஆகும்போது அவரைப் பற்றிப் பேசுவதைக் குறைத்திருந்தார். ஒரு மாதத்துக்குப் பிறகு வந்த அவரிடம் நல்ல முன்னேற்றம். 'செந்திலுக்குத் திருமணம் ஆனதை 100 சதவிகிதம் நம்புறேன் டாக்டர். இனி என் வாழ்க்கையை மட்டும்தான் நான் பார்த்துப்பேன். எனக்குத்தான் இப்போ எந்த பிரச்னையும் இல்லையே, இனி மாத்திரை வேண்டாமே' என்று அடம்பிடித்தார். 'இந்த அளவுக்கு நீங்க பேசுறதுக்கு மாத்திரைகள்தான் காரணம். இன்னும், நான் சொல்ற வரைக்கும் மாத்திரை போடுங்க' என்று அனுப்பிவைத்தேன்.

தற்போது நல்ல வேலையில் இருக்கும் ஒருவருடன் திருமணம் முடிந்து, மகிழ்ச்சியாக வாழ்கிறார் உமா.