Published:Updated:

மனமே நலமா? 24

பிரசவத்துக்கு பின் பிரளயம்!

மனமே நலமா? 24

ர்மிளாவுக்கு 25 வயது. ஆசிரியராக வேலை செய்து வருகிறார். ஷர்மிளாவின் கணவர் விஜய்க்கு, சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. ஷர்மிளாவும் விஜய்யும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள். விருப்பப்பட்ட வாழ்க்கை, நல்ல வேலை என்று சந்தோஷமாக இருந்தது வாழ்க்கை. ஷர்மிளா கர்ப்பம் ஆனார். வீட்டில் எந்த ஒரு வேலையையும் செய்யவிடாமல் அவரை தாங்குதாங்கு என தாங்கினார் விஜய்.

ஷர்மிளாவுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்தினர் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினர். இரண்டு நாட்கள் சென்றது. 'டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது டிஸ்சார்ஜ் எப்போது என்று சொல்வார், போய் குளித்து ரெடியாக இருங்கள்' என்று நர்ஸ் சொல்லிவிட்டு சென்றார். ஆனால், ஷர்மிளா எதையும் கேட்கவில்லை. குழந்தையைக் குளிப்பாட்டி கொடுத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷர்மிளா குழந்தையைக் கண்டுகொள்ளவில்லை. ''நேரமாயிடுச்சு. குழந்தைக்குப் பால் குடுங்க'' என்று நர்ஸ் சொல்லியும் கேட்காமல் அப்படியே சிலைபோல உட்கார்ந்திருந்தார். 'ஏன் இப்படி இருக்கே? ரொம்ப நேரம் ஆயிடுச்சு... குழந்தைக்குப் பால் குடு'' என்று ஷர்மிளாவின் அம்மா சொன்ன பிறகும் அமைதியாகவே இருந்தார்.

திடீரென்று ஷர்மிளா, 'ஓ’வென அழுதபடியே, 'நான் ரொம்ப மோசமானவ, இந்த குழந்தையைத் தொடக்கூட எனக்கு அருகதை இல்லை. என்னால குழந்தையை வளர்க்க முடியாது' என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். 'மீண்டும் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலையில், குழந்தையைத் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாதே!’ என்ற கவலையில் ஷர்மிளா அப்படிப் பேசுவதாக நினைத்த அவருடைய அம்மா அவளை சமாதானம் செய்தார்.

'இதெல்லாம் ஒரு பிரச்னையா... நாங்க இருக்கோம்மா... உனக்குத்தான் ஆறு மாசத்துக்கு லீவு குடுத்திருக்காங்களே... லீவ் முடிஞ்சு நீ வேலைக்குப் போனாலும் நான் பார்த்துக்கிறேன். அப்படியே முடியலைன்னாலும் வேலையை விட்டுடலாம். இதையெல்லாம் நினைச்சுக் கவலைப்படலாமா?' என்று சமாதானம் செய்தார். ஆனாலும், குழந்தையைத் தொட மாட்டேன், பால் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தார் ஷர்மிளா.

'நேத்து ராத்திரி நம்ம அம்மாதானே தங்கினாங்க. அவங்க ஏதாவது சொல்லியிருப்பாங்களோ?’ என்ற சந்தேகத்தில், தன் அம்மாடம் விஜய் கேட்கப்போக, பிரச்னை பெரிதானது.

''நாம எதுவும் செய்யலை... ஆனா மாமியார் கொடுமை மாதிரி எல்லாரும் என்னைத் திட்டுறீங்களே...'' என்று விஜய்யின் அம்மா  அழ, 'என்ன செய்வது?’ என்று தெரியாமல் விஜய் திகைத்துப்போனான். ரவுண்ட்ஸ் வந்த டாக்டரும், ஷர்மிளாவை சமாதானப்படுத்த, ஷர்மிளா சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லியிருக்கிறார். அதனால், தாய்ப்பாலுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு, ஷர்மிளாவுக்கு தூக்க மருந்து கொடுக்கப்பட்டது.

மறுநாளும் ஷர்மிளாவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கட்டத்தில், 'நான் வாழவே தகுதி இல்லாதவ.... எனக்குப்போய் குழந்தையாக பிறந்து இந்த பச்சை மண்ணும் பாவம் செஞ்சிடுச்சு... நான் சாகிறேன்...' என்று மாடியில் இருந்து குதிக்க ஓடினார். ஒருவழியாக அவருக்கு தூக்க மருந்து கொடுத்து அறையில் அடைத்துவைத்தனர். இனியும் ஷர்மிளாவைத் தனியாகவிடுவது ஆபத்தானது என்று உணர்ந்த மருத்துவர்கள், எனக்கு தகவல் தெரிவித்தனர். நான் ஷர்மிளா தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தேன். 'தப்பு செஞ்சுட்டேன்'' என்ற வார்த்தையையே திரும்ப திரும்ப சொல்லிக் களைத்துப் போயிருந்தார்.

மனமே நலமா? 24

மறுநாள், 'என்ன தப்பும்மா செஞ்சீங்க... குழந்தையை ஏன் தூக்க மாட்டேங்கறீங்க' என்று நான் கேட்டதும், 'நாய்க்கு சாப்பாடு போடாம விட்டுட்டேன் டாக்டர். பாவம் அது பசியில துடிச்சிருக்கும்'' என்று சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசினார்.

ஒரு சில பெண்களுக்கு மிக அரிதாக ஏற்படக்கூடிய பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு (றிஷீst பீமீறீவீஸ்மீக்ஷீஹ் பீமீஜீக்ஷீமீssவீஷீஸீ) நோய் ஷர்மிளாவுக்கு ஏற்பட்டிருந்தது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், 'செரட்டோனின்’ போன்ற மூளையில் உள்ள சில ரசாயனங்களின் அளவு குறைவதாலும் இந்தப் பாதிப்பு ஏற்படும். யாருக்கு ஏற்படும், எதனால் ஏற்படும் என்று உறுதியாகக் கூற முடியாது. தொடர்ந்து மாத்திரை மருந்து எடுத்துவந்தால், இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

மனமே நலமா? 24

அதைச் சரிசெய்ய அவருக்கு சில மருந்துகள் பரிந்துரைத்தேன். மேலும் அவருக்கு உள்ள பயம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கவும், அமைதிப்படுத்தவும் சில மருந்துகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து உள்நோயாளியாகவே இருந்து அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஒரு வாரத்தில், ஓரளவுக்கு முன்னேற்றம். ஆனால், குழந்தையிடம் நெருங்கவில்லை.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது, மூன்று வாரங்கள் சென்ற நிலையில் ஓரளவுக்கு தேறிவந்தார். குழந்தையிடம் பாசம் ஏற்பட்டு, கொஞ்ச ஆரம்பித்தார். 'எனக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னே தெரியலை டாக்டர். மனசுல என்னென்னவோ தோணுச்சு. நான் நல்லவ இல்லை. நான் பார்த்துக்கிட்டா, குழந்தை செத்துப்போயிடும்னு தோணுச்சு. வேதனையில் அழுகை அழுகையா வந்தது. அதனாலதான் குழந்தையைத் தொடலை. இப்பவும் எனக்கு தைரியம் இல்லை. நிச்சயமா நான் செத்துப்போயிடுவேன்னு தோணுது' என்றார். அவருக்கு பயத்தைப்போக்கி, தைரியம் அளிக்கும் வகையில் சப்போர்ட்டிவ் சைக்கோ தெரப்பி உள்ளிட்ட சில கவுன்சலிங் அளிக்கப்பட்டது.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம், பயம் போன்றவை விலகியதும், டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினோம். இருப்பினும் வாரத்துக்கு இரண்டு நாட்கள் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்று சொன்னோம். குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குப் பிறகு மெள்ளமெள்ள மாற்றம்,  குழந்தையிடம் நெருக்கம் என குழந்தையையும் கவனித்துக்கொண்டு தன்னையும் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தொடர்ந்து மாத்திரை மருந்துகள் எடுத்துவருகிறார். தற்போது கணவன், குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். பழையபடி பள்ளிக்கூட வேலைக்கும் சென்று வருகிறார்.