Published:Updated:

அலர்ஜியால் அவஸ்தை!

அலர்ஜியால் அவஸ்தை!

பிரீமியம் ஸ்டோரி

அம்சவேணி, கரூர்

'எனக்கு 30 வயதாகிறது. என் 23 வயதிலேயே முடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. நான் கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து தரமான 'ஹேர் டை’தான் உபயோகிக்கிறேன். ஆனாலும், சில நேரங்களில் முகத்தில் அரிப்பு ஏற்படுகிறது. 'டை’ அலர்ஜியாக இருக்குமோ என்று பயமாக உள்ளது. எப்படி உபயோகிக்க வேண்டும்? அலர்ஜிக்கு சிகிச்சை உண்டா?'

டாக்டர் கலையரசி

அலர்ஜியால் அவஸ்தை!

தோல் நோய் சிறப்பு மருத்துவர், திருநெல்வேலி

'தொடர்ச்சியாக ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஹேர் டையின் விலையை வைத்து அதன் தரத்தை நிர்ணயிக்க முடியாது. நீங்கள் உபயோகிக்கும் ஹேர் டை உங்களுடைய சருமத்துக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்து கொண்டு பயன்படுத்துங்கள். ஹேர் டையில் ரசாயனம் கலந்து இருக்கும் என்பதால், சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்க முடியாது. தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல், புண் ஏற்பட்டால் உடனடியாக ஹேர் டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவது நல்லது. குறைந்தது ஒரு மாதத்துக்கு ஹேர் டை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதன் மூலம் ஒவ்வாமை ஏற்படுத்தியது ஹேர் டை தானா என்பது தெரிந்துவிடும்.

இது தவிர, ஹேர் ஆயில், முகத்துக்கான கிரீம் போன்றவையும் அதிக ரசாயனம் கலந்து தயாரிக்கப்படுவதால் அவையும், பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. அதனால், நீங்கள் எதை உபயோகித்தாலும், அதனை சில காலம் நிறுத்திப் பார்த்து சோதித்துக் கொள்ளுங்கள். சாதாரண தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்துங்கள்.

மருதாணியைச் சேர்த்த எண்ணெயை சிலர் பயன்படுத் துவார்கள். அதுவும் சில நேரங்க ளில் அலர்ஜியை உருவாக்கலாம். அதனால் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதனைத் தவிர்க்க வேண்டும். அதிலும் பலன் கிடைக்கவில்லை என்றால், தோல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.'

அலர்ஜியால் அவஸ்தை!

கே.செல்வராணி, ராஜபாளையம்

'என் குழந்தைகள், எப்போதும் அக்கம்பக்கக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவார்கள். என் குழந்தைகளுக்கும், மேலும் சில சிறுவர்களுக்கும் கை மற்றும் கால் இடுக்குகளில் பொரிப்பொரியாக வருகின்றது. மணலில் விளையாடுவதால் இத்தகைய பிரச்னைகள் வரலாம் என்கிறார்கள். இது உண்மையா? பொரிப்பொரியாக வருவதற்கு என்ன காரணம்?'

டாக்டர் கி.அன்பு ராஜன்

குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், தேனி

'பொதுவாக இந்த பிரச்னை எல்லா வயதினருக்கும் வர கூடியதுதான். இது 'ஸ்கேட்டிஸ்’ எனப்படும் கிருமித் தாக்குதலால் வரக்கூடிய பிரச்னை. மணலில் விளையாடுவதும் ஒரு காரணம். பெரும்பாலும் விடுதியில் தங்கிப்படிக்கும் பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்னை வரும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருடன் அருகருகே தங்குதல், உரசுதல் போன்றவற்றால் இது பரவுகிறது. இந்தத் தொற்றின் காரணமாக இரவு நேரங்களில் அதிகமான அரிப்பும் ஏற்படும். சிலருக்கு தொடையின் இடுக்குப் பகுதிகளிலும்கூட இந்தத் தொற்று ஏற்படலாம். கவனத்துடன் இருந்தாலே இந்த கிருமித் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். இந்தப் பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர், பயன்படுத்திய துணிகளை தனியாகத் துவைக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று பேர் இந்தப் பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பின் மூவரும் ஒரே நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பிரச்னை வராமல் தடுக்க உங்கள் குடும்ப மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறுங்கள். கிருமிநாசினிக் களிம்புகளை (ஆயின்மென்ட்), டாக்டர் சொன்ன காலம் வரை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், பிரச்னையைத் தவிர்க்கலாம். தினமும் குளித்து சுத்தமாக இருந்தாலே, இந்த பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை. இதற்காக உங்கள் குழந்தைகள் வெளியில் விளையாடுவதைத் தடுக்க வேண்டாம்.'

அலர்ஜியால் அவஸ்தை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு