Published:Updated:

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

பிரீமியம் ஸ்டோரி

''என்ன உங்க ரெண்டு குழந்தைங்களும் கண்ணாடி போட்டிருக்காங்களே... சும்மா ஸ்டைலுக்கா?''

''இல்லை... அவங்களுக்கு ஷார்ட் சைட்...'' - இது சர்வசாதாரணமாகி விட்டது இன்று. ஏழு, எட்டு வயதுக் குழந்தைகள் கூட, கண்களில் ஏற்படும் குறைபாட்டால் கண்ணாடி அணியவேண்டியிருக்கிறது. இதற்கு வைட்டமின் ஏ சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணம்.  

நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத் திறன், செல்களுக்கு இடையேயான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளுக்குத் தேவைப்படக்கூடிய ஊட்டச்சத்து தான், வைட்டமின் ஏ. வைட்டமின் ஏ பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள், நிவர்த்தி செய்யும் வழிகள் ஆகியவை பற்றி, மூத்த டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.  

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

'ப்ரீஃபார்ம்டு வைட்டமின் ஏ (Preformed vitamin A ), புரோ வைட்டமின் ஏ கரோட்டினாய்ட்ஸ் (Provitamin A carotenoids) என்று இரண்டு வகைகளில் நமக்கு வைட்டமின் ஏ கிடைக்கிறது. ப்ரீஃபார்ம்டு வைட்டமின் ஏ என்பது பால் பொருட்கள், மீன் உள்ளிட்ட விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகள் மூலமாக கிடைக்கக்கூடியது. காய்கறிகளில் இருக்கும் பீட்டாகரோட்டின் மூலமாகவும் நமக்குக் கிடைப்பதை புரோ வைட்டமின் ஏ என்கிறோம். இதை நாம் சாப்பிடும்போது நம் உடல் இதை வைட்டமின் ஏ-வாக மாற்றிவிடுகிறது.

ஏன் தேவை?

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

வைட்டமின் - ஏ -யின்  முக்கியப் பணி, தெளிவான கண் பார்வையைத் தருவதுதான். புரதச்சத்துத் தயாரிப்பில் பங்குகொள்வதன் மூலம், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும், உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கூட்ட‌வும், ஈறுகளை வலுப்படுத்தவும்,  செரிமானத்துக்கும் உதவுகிறது. மேலும், சருமப் பாதுகாப்புக்கும்,  நரம்பு மற்றும் எலும்புகளை உறுதியாக்கவும் வைட்டமின் ஏ தேவை.

குறைவால் ஏற்படும் பாதிப்புகள்

வைட்டமின் ஏ குறைபாட்டால் கண்தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. அடுத்து தோல், எலும்பு, நரம்பு, செல்கள் பாதிக்கப்படும்.

சிறுநீர‌க நோய், கல்லீரல் சுருக்க நோய் மற்றும் அடைப்பு, காமாலை நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு. புற்றுநோய், மூச்சுக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டினால் வரக்கூடிய நோய்கள்.

மாலைக் கண்,  ஜெரோஸிஸ் கன்ஜக்டிவா (Xerosis conjunctivae) எனப்படும் கண் உலர்தல், விழித்திரை பாதிப்பு (xerosis cornea)  போன்ற கண் தொடர்பான பாதிப்புகளும் வைட்ட மின் ஏ குறைவால் வருகின்றன.

இதில், கெராட்ஸ் மலேசியா (Kerats Malaycia) எனப்படும் கண் நோய் வகை, கண் பார்வையை போக வைத்துவிடும் கடைசிக் கட்டம். இந்த வைட்டமின் உடலுக்குக் கிடைப்பது குறைந்தவுடனேயே நோய்கள் ஏற்படுவது இல்லை. சுமார் நான்கு மாதங்கள் தொடர்ந்து உடலுக்கு கிடைக்காமல், கல்லீரலில் சேமித்து வைத்த வைட்டமின் ஏ சத்தும் தீர்ந்து போன பின்தான் நோய்கள் தாக்கத் தொடங்கும்.

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள் என்ன?

ஈரல், முட்டை மஞ்சள் கரு, நண்டு, ஆட்டு மாமிசம், மீன் எண்ணெய், மீன் எண்ணெய், வெண்ணெய், பால், சீஸ் போன்ற உணவுகளில் அதிகம் இருக்கிறது.

கேரட், கீரைகள், முட்டைகோஸ், பரங்கிக்காய், முருங்கைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளிலும் மாம்பழம், கேரட், ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி போன்ற பழவகைகளிலும் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது.

கொஞ்சம் காலத்துக்கு முன்பு வருடா வருடம் 20,000 பேர் வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது நியூட்ரீஷியன் பிளைன்ட்னஸ் (Nutrition blindness) என்ற அமைப்பு மூலம் அரசாங்கம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கண்களுக்கு சொட்டு மருந்து விடுவது, வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புஉணர்வு மற்றும் வகுப்புகள் எடுப்பதன் மூலம் அவை கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு, 2 லட்சம் யூனிட்கள் சொட்டு மருந்து இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க...

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

  இது மாம்பழ சீசன்... இப்போது வாங்கிச் சாப்பிட்டால் நான்கு மாதத்துக்கு தேவையான வைட்டமின் ஏ உடலில் சேரும்.

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

  தினமும் 200 கிராம் கேரட், பால் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

  காய்கறி, பழங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரை, மருந்து கொடுக்கலாம்.

- கு.அஸ்வின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு