Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

பிரீமியம் ஸ்டோரி

'உடல் கட்டுமானத்துக்கு, வளர்ச்சிக்கு, வளர்சிதை மாற்றங்களுக்கு, கழிவுகளை வெளியேற்றுவதற்கு என நம்முடைய உடலின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஆதாரமாக இருப்பது நாம் உட்கொள்ளும் உணவு. உயிர் வாழ்வதற்கே அடிப்படைத் தேவையாக இருக்கும் உணவு எப்படி இருக்க வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும், யார் யார் எதை விலக்க வேண்டும், எதைச் சேர்க்க வேண்டும் என்பது போன்ற உணவு சார்ந்த விஷயங்களை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது நல்லது'' என்கிறார், ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன் விரிவுரையாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஷைனி சுரேந்திரன்.

நலம், நலம் அறிய ஆவல்!

'நம் உடல் ஆரோக்கியத்துக்கு, சரிவிகித உணவு மிக அவசியம். அது என்ன 'சரிவிகித உணவு’? அந்தந்த சீஸனில் விளையும் 2, 3 வகை நார்ச்சத்து மிக்க பழங்கள், நாட்டுக் காய்கறிகள், புரதச்சத்து மிக்க பருப்புகள், மாவுச்சத்து மிக்க தானியங்கள், வைட்டமின்கள் உள்ள கீரை, கால்சியம் உள்ள பால், தயிர், பனீர் போன்ற உணவுகள், கொழுப்புச்சத்துக்கு தேங்காய், சிறிது எண்ணெய், முழு தானியங்கள், முளைக்கட்டிய தானியங்கள்... இவை எல்லாம் சேர்ந்ததுதான் சரிவிகித உணவு. யாருக்கு எந்தச் சத்து தேவைப்படும் என்பது அவரவர் உடல் நிலையைப் பொருத்தே முடிவு செய்யப்படும்' என்கிறார் ஷைனி.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பற்றி, கூறுகையில், 'இந்தக் காலத்தில் பல தாய்மார்களின் கவலை, 'என் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது!’ என்பதுதான். குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தி, அதன் சுவையைப் பழக்கி, உண்ணவைப்பதே ஒரு கலைதான். ஓடி ஆடும் குழந்தைகளுக்கு கலோரி நிறைந்த உணவு தேவை. அவற்றை வீட்டிலேயே நம் பார்வையில் தயாரித்துக் கொடுப்பது நல்லது. முடிந்தவரை வெளியில் வாங்காமலும் ஜங்க் ஃபுட் வகைகளை அறிமுகப்படுத்தாமலும் இருப்பது நல்லது. சாப்பாட்டு விஷயத்தில், பெற்றோர் குழந்தைகளுக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும். உணவை நன்கு ருசித்து, மென்று சாப்பிடப் பழக்க வேண்டும். இளநீர், ஃப்ரெஷ் ஜூஸ், மோர் கொடுத்துப் பழக்கலாம்.

எந்த உணவாக இருந்தாலும் கலர்ஃபுல்லாக இருந்தால்தான், குழந்தைகள் விரும்புவார்கள். குறிப்பிட்ட உணவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை அப்படியே விட்டுவிடாமல், சில நாட்கள் கழித்து அதை வேறு ஒரு வடிவத்தில் செய்து கொடுக்கலாம். கண்டிப்பாக டி.வி. முன் உட்கார்ந்து சாப்பிடப் பழக்கக் கூடாது. என்ன சாப்பிடுகிறோம்... எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமல் அதிகமாகச் சாப்பிட்டுவிடுவார்கள். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

பள்ளி செல்லும் குழந்தைகளைக் கண்டிப்பாகக் காலையில் வெறும் வயிற்றோடு அனுப்பவே கூடாது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட நேரம் இல்லை எனில், ஒரு பெரிய கிளாஸ் பால் / பழங்கள் ஒரு கிண்ணம் / ஓட்ஸ் கஞ்சி / சத்துமாவுக் கஞ்சி / முட்டை தோசை - இப்படி ஏதேனும் ஒரு சத்தான டிஷ் செய்து, அவர்களைச் சாப்பிடச் சொல்லலாம்' என்கிறார் ஷைனி சுரேந்திரன்.

- பிரேமா,

படம்: ப.சரவணகுமார்

நலம், நலம் அறிய ஆவல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு