Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

மருந்தாகும் வைரஸ் கிருமி!

வைரஸ் என்றாலே மனிதனுக்கு நோய் பரப்பக்கூடிய கிருமி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், முதன்முறையாக ஒரு வைரஸ் கிருமியானது புற்றுநோயைக் குணப்படுத்த உதவி புரிந்துள்ளது!

அக்கம் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தட்டம்மையை ஏற்படுத்தும் 'மிசல்ஸ்’ என்ற வைரஸ் கிருமியைக்கொண்டு, முற்றிய நிலையில் இருந்த ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 49 வயதான பெண்மணி ஒருவருக்கு, மிசல்ஸ் கிருமியில் சில மாற்றங்களைச் செய்து உடலில் செலுத்தினர். மீண்டும், அந்த பெண்ணைப் பரிசோதனைசெய்ததில், புற்றுநோய் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதைக் கண்டறிந்தனர். ஆனால், நல்ல செல்களை இந்த வைரஸ் கிருமி ஏதும் செய்யவில்லை.

இது குறித்து, இந்த குழுவைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் ரஸ்ஸல் கூறுகையில், 'இதுவரை இரண்டு நோயாளிகளுக்கு இந்த வைரஸ் கிருமியைச் செலுத்தி சோதனைக்கு உட்படுத்தினோம். நல்ல பலன் கிடைத்துள்ளது. இதில் பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருந்தது. எதிர்காலத்தில், புற்றுநோயைக் குணப்படுத்த முக்கியமான கருவியாக மரபணு மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் சிகிச்சை இருக்கும்' என்றார். தற்போது ஆய்வில் உள்ள இந்த சிகிச்சைமுறை, நடைமுறைக்கு வரும்போது அதிகப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபிக்கு மாற்றாக இருக்கும்.

பன்றிக்காய்ச்சல் ரிட்டர்ன்

உலகையே அச்சுறுத்திய பன்றிக்காய்ச்சல் இந்தியாவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தானில் வேகமாகப் பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு, கடந்த மே இறுதி வரை 12 பேர்

அக்கம் பக்கம்

உயிரிழந்துள்ளனர். 156-க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட இந்தியாவில் பொதுவாக, வெயில் முடிந்து மழை ஆரம்பிக்கும்போது ஆகஸ்ட் மாதத்தில் பன்றிக்காய்ச்சல் பரவும். ஆனால், அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக முன்கூட்டியே பரவ ஆரம்பித்துவிட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில்தானே என்று அலட்சியமாக இருக்காமல், பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுப்பதன் மூலம் மற்ற மாநிலங்களில் இந்தக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியும்.

காசநோயை கண்டறிய புதிய பரிசோதனை

அக்கம் பக்கம்

காசநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, நோயாளியின் சளியை நுண்ணியிர் நோக்கியில் பரிசோதிப்பர். ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகளால், பெரியவர்களைப் போன்று சளியை எளிதில் வெளிக்கொணர முடியாது. மேலும் அவர்களின் சளியைப் பரிசோதிக்கும்போது, காச நோய் பாக்டீரியா மிகவும் குறைவாகவே காணப்படும். எனவே, அவர்களுக்கு காசநோய் இருக்கிறதா என்பதை சளிப் பரிசோதனையில் கண்டறிவது சிரமமாக இருந்தது. இதற்கு, சரியான தீர்வை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த சூசன் ஆண்டர்சன் மற்றும் அவரது குழுவினர் ரத்த பரிசோதனை மூலம், ரத்த அணுக்களிலுள்ள ஜீன்களில் காசநோய் பாக்டீரியாவின் ஆர்.என்.ஏ ட்ரான்ஸ்க்ரிப்ட்களால் (RNA transcript), குறிப்பிட்ட அடையாள மாற்றம் ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளனர். ரத்த அணுக்களில், 42 ஜீன்களுக்கு மேல் இந்த குறிப்பிட்ட அடையாள மாற்றம் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு காசநோயின் தாக்குதல் இருக்குமாம். .