Published:Updated:

குளிர்ச்சி தரும் மசாஜ்!

குளிர்ச்சி தரும் மசாஜ்!

குளிர்ச்சி தரும் மசாஜ்!

குளிர்ச்சி தரும் மசாஜ்!

Published:Updated:

த்தரி வெயில் முடிந்தாலும் கோடையின் கொடூரம் இன்னும் முடிந்துவிடவில்லை.  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என கோடையை ஜாலியாகக் கொண்டாடிவிட்டுத்

குளிர்ச்சி தரும் மசாஜ்!

திரும்பியவர்களுக்குத் இப்போது வீடுதான் சொர்க்கமாக இருக்கும். இயற்கையை ரசித்து மகிழ்ந்த நினைவுகளே மனதில் நிழலாடும். மேலும், அதீத அலைச்சல், உடல் சோர்வு இருப்பதால், மீண்டும் சமையலறைக்குள் செல்லவோ, அலுவலகத்துக்குப் போகவோகூட மனம் விரும்பாது. சுற்றுலா சென்று வந்த அசதியில் இருப்பவர்களுக்கும் சரி... செல்லாமல் வீட்டுக்கும் அலுவலகத்துக்குமாக ரன் எடுத்தவர்களுக்கும் சரி, 'ரெஃப்ரெஷ்’ செய்துகொள்வதற்குச் சரியான இடம்... 'ஸ்பா’!  

''சுற்றுலாவில் கிடைக்கும் புத்துணர்ச்சி மனதை வருடும் அனுபவம்... உள்ளூரிலேயே இருக்கும் மசாஜுடன் கூடிய 'ஸ்பா’ தருவது, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு. வேலைச் சுமை தெரியாமல், சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் வலம் வரச் செய்யும்'' என்கிறார் சென்னை ’வொயிட் விங்ஸ் ஸ்பா’ உரிமையாளர்களில் ஒருவரான ராஜேஷ்.

ஹேர் ஸ்பா (Hair spa)

குளிர்ச்சி தரும் மசாஜ்!

பெண்கள் அதிக அளவு விரும்பும் 'ஹேர் ஸ்பா’ இது. தலைக்குச் சிறந்த மருத்துவக் குணங்களைத் தருவதுடன் உடலைத் தளர்த்தவும் இது உதவி புரிகிறது. 'அவகேடோ’ என்ற பழத்தை அரைத்துத் தயாரிக்கப்படும் க்ரீம் கொண்டு இந்த ஹேர் ஸ்பா செய்யப்படுகிறது. தலைக்கு மட்டுமல்லாது தலை முடி, வேர்க்கால் முழுவதற்கும் மசாஜ் செய்யப்படும். கிரீம் தடவப்பட்டு, மசாஜ் செய்யப்பட்ட பிறகு, தலைக்கு நீராவி கொடுக்கப்படுகிறது. பழத்தில் உள்ள அதிக அளவு புரதம் தலை முடி வளர்ச்சியைத் தூண்டும். 'ஸ்ட்ரெஸ்’ நீங்கும். பேன், தலைமுடி உதிர்தல், தலையில் கட்டி போன்றவற்றையும் இதன் மூலம் குணப்படுத்தலாம். இதைச் செய்து கொள்ள, அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். மாதம் ஒரு முறை செய்துகொள்வது ரொம்பவே நல்லது.

எண்ணெய் மசாஜ் (Oil massage)

குளிர்ச்சி தரும் மசாஜ்!

அரிய வகை மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத எண்ணெயைப் பயன்படுத்தி, தலையிலும், முடியின் வேர்களிலும் முதலில் மசாஜ் செய்யப்படும். இதனால், தலைவலி, மன அழுத்தம் மறையும். தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக தலைக்கு மசாஜ் செய்து வர, உடல் சூடு தணியும். மாதம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்துகொள்வதன் மூலம் சோர்வு நீங்கி, உடலும் மனமும் குளிர்ச்சியாக இருக்கும்.

பாத மசாஜ் (Feet massage)

குளிர்ச்சி தரும் மசாஜ்!

உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் பாதத்துடன் தொடர்பில் இருப்பதால், பாதத்துக்கான மசாஜ் அவசியமான ஒன்று. பாதத்தில் பல நரம்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு நரம்பை அழுத்தும்போதும், அது ஒரு மருத்துவ முறையாகப் பின்பற்றப்படுகிறது. ஃபீட் ரெஃப்லெக்சாலஜி (Foot Reflexology) முறையுடன், வலி நீக்கும் எண்ணெய்களைக்கொண்டு பாதத்தில் அழுத்தம் கொடுக்கப்படும். பிறகு பாதத்துக்கு மசாஜ் செய்யப்படும். 40 நிமிடங்கள் செய்யப்படும் இந்த மசாஜினால் பாத வலி நீங்கும். உடலைச் சுறுசுறுப்பாக்கும்.

ஃபேஷியல் (Facial)

குளிர்ச்சி தரும் மசாஜ்!

முகமலர்ச்சிதான் ஒருவரின் தோற்றத்தை அழகாகக் காட்டும். அந்த முகப் பொலிவுக்காக ஃபேஷியல் செய்யப்படுகிறது. இது முகத்திலிருக்கும் பழைய செல்களை நீக்கி முகம் பொலிவு பெற வழிவகுக்கிறது. ஆயுர்வேத முறைகளைப் பின்பற்றிச் செய்யப்படும் இந்த ஃபேஷியலில் பழங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில், 'சிக்னேச்சர் கொலாஜ்’ signature collaage என்ற ஃபேஷியலையே அதிகம் விரும்பிச் செய்துகொள்கின்றனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்துகொண்டாலும், சருமம் சுத்தமாகி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும். இந்த ஃபேஷியலுக்கு குறைந்தது 1100 முதல் 3000 வரை வாங்குகின்றனர்.

மனதையும் உடலையும் எப்போதும் சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள மசாஜுடன் கூடிய 'ஸ்பா’ ஒரு சிறந்த வழி. கூடவே நிம்மதியான தூக்கமும், ஆரோக்கியமான உணவும் இருந்தால், உற்சாகத்துக்குக் குறைவே இருக்காது.

- இ.லோகேஸ்வரி, படங்கள்: க.பாலாஜி