
முகத்துக்கு அழகு... முத்து போன்ற பற்கள்தான். மழலையின் சிரிப்பில் மின்னும் பற்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கற்றுக்கொடுப்பது ஒன்றுதான் அவர்களின் ஆரோக்கியத்துக்கான முதலீடு. குழந்தைகளுக்கு பல் துலக்குவது என்பது எப்போதுமே சற்று கடினமான காரியம். சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களும் பற்களைப் பாதிக்கின்றன. குழந்தைகள் தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் ஒழுங்காக பல் துலக்குகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அப்படி அவர்கள் சரியாக செய்யாதபோது அம்மா கூடவே இருந்து, பல் துலக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பல்லில் ஒட்டக்கூடிய சாக்லெட், கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தவிர்த்து பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். அப்படியே பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாலும், வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பதன் மூலம் சொத்தைப்பல் வராமல் தடுக்க முடியும்' என்கிறார் சென்னை பல் மருத்துவர் ஜெ.உதயராஜா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'பெற்றோருக்கு தங்கள் குழந்தையை, முதன்முறையாக எப்போது பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கிறது. பலர், பால் பற்கள் எல்லாம் வளர்ந்த பிறகு டாக்டரை சந்தித்தால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால், அதற்குள் சொத்தைப்பற்கள், பல் விழுதல், பல் விழுந்த இடத்தில் உள்ள இடைவெளியை சரிசெய்ய பக்கத்தில் உள்ள பற்களின் நகர்வு என்று நிறையப் பிரச்னைகள் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் நிலையான பற்கள் முளைக்கும்போது, பற்கள் அமைப்பு சீரற்றதாகிவிடுகிறது. இவற்றை எல்லாம் தவிர்க்கும் பொறுப்பு அம்மாவுக்குத்தான் இருக்கிறது' என்ற டாக்டர் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னை பற்றி விவரித்தார்.
'பற்களுக்கு இடையே உணவுத் துகள்கள் மாட்டிக்கொள்வது, சரியாக பிரஷ் செய்யாதது போன்ற காரணத்தால் சொத்தைப் பற்கள் ஏற்படுகின்றன. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும். 95 முதல் 98 சதவிகிதம் வரை ஈறுகளில் பிரச்னை ஏற்படுவதற்கு, நாம்தான் காரணம். சரியாக பிரஷ் செய்யாதது, பிரஷ்ஷில் பேஸ்ட்டை வைத்துக்கொண்டு 10-20 நிமிடங்களுக்கு ஏதோ சிந்தனையோடு ஒரே பக்கம் தேய்த்துக்கொண்டே இருப்பது என்று நாம் செய்யும் தவறுகளால்தான் பல்லில் காரை படிந்து, எலும்பு தேய்மானம் ஏற்பட்டு பிரச்னை ஏற்படுகிறது. ஆனால் இதை நம்மால் மிக எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். பற்கள்தானே என்று அலட்சியப்படுத்தும்போது, அது நம் உடல் ஆரோக்கியத்தையும் பாதித்துவிடுகிறது. ஆரோக்கியமான பற்கள் இருக்க குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பல்லில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று ஆலோசனை வழங்குகிறார் டாக்டர் உதயராஜா.
- பா.பிரவீன் குமார்,
படம்: ஜெ.வேங்கடராஜ்


பல் பராமரிப்பு அவசியம் ஏன்?

பல் சொத்தை ஏற்படக் காரணம் என்ன?


குழந்தையின் பல் பராமரிப்பில் அம்மாவின் பங்கு என்ன?

ஈறு நோய்களுக்கு எது காரணம்?

உடலின் மற்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

இம்பிளான்ட் சிகிச்சைமுறையில் நிரந்தரமாக பல் கட்டலாமா?

கோனல் பற்கள் வரக் காரணம் என்ன?

பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க வழி உண்டா?

எந்த வயதில் பல் கிளிப் போடலாம்?

வாய் துர்நாற்றத்துக்கு காரணம் என்ன?