Published:Updated:

தொற்றூ நோயா மெட்ராஸ் ஐ!

தொற்றூ நோயா மெட்ராஸ் ஐ!

தொற்றூ நோயா மெட்ராஸ் ஐ!

தொற்றூ நோயா மெட்ராஸ் ஐ!

Published:Updated:
தொற்றூ நோயா மெட்ராஸ் ஐ!

டி.பிரியதர்ஷிணி, சேலம்

'என் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதும் பாராசிட்டமால் மாத்திரை கொடுப்பேன். இது தவறா? ஆங்கில மருந்துகளைக் காட்டிலும், ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக்கொள்வது சிறந்தது என்று என் தோழி சொல்கிறார். இதுபற்றி எனக்குத் தெளிவான தகவல் வேண்டும்.'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் மதி செந்தில்குமார்,

ஹோமியோபதி மருத்துவர், சென்னை.

'மக்களை அச்சுறுத்தும் பாதிப்புகளில் காய்ச்சல் மிக முக்கியமானது. காய்ச்சல் ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறிதான். நம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை ரத்த வெள்ளை அணுக்கள்

தொற்றூ நோயா மெட்ராஸ் ஐ!

அளிக்கிறது. கிருமிகள் உடலுக்குள் நுழையும்போது, அதை இந்த அணுக்கள் அடையாளம் கண்டு மூளைக்கு சிக்னல் அனுப்புகிறது. அதைத் தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பெரும்பாலான வீடுகளில், குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் உடனே பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கின்றனர். இந்த மருந்து காய்ச்சலைக் குறைக்கும் நேரத்தில், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வெகுவாகக் குறைத்துவிடுகிறது. இதனால் குழந்தையின் காய்ச்சல் குறையுமே தவிர, உடலில் ஏற்பட்ட நோய்த்தொற்று பலம் பெற்றுவிடும். எதனால் உங்கள் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பது நல்லது.

எந்த மருத்துவமுறை சிறந்தது என்று நான் கூறுவது சரியாக இருக்காது. ஹோமியோபதி மருந்துகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற குறுகிய கால நோய்களில் மிக விரைவாக நலம் அளிக்கின்றன. இந்த மருந்துகள் காய்ச்சலில் உடலின் வெப்பத்தைக் குறைப்பது இல்லை. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, அதன் மூலம் கிருமியின் செயல்பாட்டைத் தடுத்து, அவற்றை அழிக்கின்றன. மற்ற மருந்துகள் வயிற்றில் செரிக்கப்பட்டு கல்லீரலால் உட்கிரகிக்கப்பட்டு செயல்பட ஆரம்பிக்கின்றன. ஆனால், ஹோமியோபதி மருந்துகள் ஆற்றல் வடிவில் இருப்பதால் உடனடியாக ரத்தத்தில் கலந்து செயல்படத் தொடங்குகின்றன. எனவே, ஹோமியோபதி மருந்தைக் கொடுத்த அரை மணி நேரத்திலேயே நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, மிக விரைவாக காய்ச்சல் குணமாவதைக் காணலாம்.

எம்.கேசவன், சென்னை - 40

'கோடையில் பலருக்கு 'மெட்ராஸ் ஐ’ பிரச்னை வருகிறது. பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும்போது எனக்கும் 'மெட்ராஸ் ஐ’ வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. 'மெட்ராஸ் ஐ’ பிரச்னை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?'

டாக்டர் சௌந்தரி,

கண் நல மருத்துவர், சென்னை.

'ஒவ்வாமை, கிருமித் தொற்று, ரசாயனங்கள் படுவதால் கண் இமைப்படல அழற்சி ஏற்படுகிறது.

தொற்றூ நோயா மெட்ராஸ் ஐ!

இதைத்தான் 'மெட்ராஸ் ஐ’ என்கிறோம். பொதுவாக, கோடைக்காலத்தில் அடினோ வைரஸ் கிருமி மற்றும் பாக்டீரியா தொற்றாலும் 'மெட்ராஸ் ஐ’ ஏற்படுகிறது. தற்போது அதிக அளவில் காணப்படுவது வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய கண் நோய்தான். கிருமித்தொற்றால் 'மெட்ராஸ் ஐ’ ஏற்பட்டிருப்பவர்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய கைக் குட்டைகள், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்துதல் காரணமாக மற்றவர்களுக்கும் கிருமித் தொற்று ஏற்படும். 'மெட்ராஸ் ஐ’ உள்ளவரை நேரடியாகப் பார்த்தாலும் வராது; காற்றில் பரவாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கண்ணில் உள்ள சுரப்பு மூலமாகத்தான் இந்தக் கிருமி பரவுகிறது.

'மெட்ராஸ் ஐ’ வந்தால், கண் எரிச்சல், மங்கலான பார்வை, வெளிச்சத்தைப் பார்க்கும்போது அதிகமாகக் கண் கூசுதல், கண்களில் அதிக அளவில் அழுக்கு வெளிப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். முதலில் ஒரு கண்ணில்தான் வரும். அடுத்த கண்ணுக்கும் வர வாய்ப்புகள் மிகமிக அதிகம். பொதுவாக ஒரு வாரம் அல்லது 10 நாளில் மறைந்துவிடும். 'மெட்ராஸ் ஐ’ வராமல் தடுக்க, பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வது, பழகுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களைத் தொடாதீர்கள், கை குலுக்காதீர்கள். ஒரு நாளைக்குப் பல முறை தண்ணீரால் கைகளையும், கண்களையும் கழுவுங்கள். மற்றவர்கள் பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்கள், பெட்ஷீட், தலையணை, துண்டு போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள். வெயிலில் செல்லும்போதும், இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தரமான கூலிங்கிளாஸ் அணியுங்கள். ஒருவேளை உங்களுக்கு மெட்ராஸ் ஐ வந்துவிட்டால், எந்த வகை இமைப்படல அழற்சி என்பதைக் கண்டறிய, டாக்டரை அணுகுவது நல்லது.

தொற்றூ நோயா மெட்ராஸ் ஐ!