Published:Updated:

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

Published:Updated:

'தூங்கும் குழந்தையை எழுப்பாதே... தூக்கத்தில்தான் குழந்தை ஆரோக்கியமாக வள‌ரும்’ என்பார்கள் பெரியவர்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை விவரிக்கும் மருத்துவ நூல் 'தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!’

தூக்கத்தில்தான் உடல் வள‌ர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன் சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும்.  உடல் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

பிறந்த குழந்தை 20 மணி நேரம் தூங்கும். ஒன்று அல்லது ஒன்றரை வயதில் தூக்கம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும். எல்.கே.ஜி படிக்கும் குழந்தை இரவில் தொடர்ச்சியாக 10 முதல் 12 மணி நேரம் தூங்கினால், மதியம் குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது தூங்கி எழுவது இயல்பு. ஐந்து வயதிலிருந்து இரவுத் தூக்கம் மட்டும் போதும் என்ற நிலைக்கு வருகிறது. எந்தவிதத் தடங்கலுமின்றித் தூங்கும் குழந்தைக்கு சரியான உடல் வளர்ச்சி, எந்த ஒரு விஷயத்தையும் ஊன்றிக் கவனிக்கும் திறன் வளரும். ப‌டிப்பிலும் கவனம் அதிகரிக்கும்' என்று குழந்தைகளின் தூக்கத்தைப் பற்றி விவரித்திருக்கும் நூல் ஆசிரியர் டாக்டர் என் ராமகிருஷ்ணன், இள வயதில் சரியாகத் தூங்கினால் முதுமையில் தவிர்க்கக் கூடிய பிரச்னைகள், பகல் தூக்கத்தினால் ஏற்படும் கெடுதல்கள் மற்றும் குட்டித் தூக்கம் பற்றிய விளக்கம் என்பன போன்ற ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அலசியிருக்கிறார்.  

முதியவர்களுக்கு ஏற்படும் மனச் சோர்வால் எப்படித் தூக்கம் குறைகிறது, அதை நிவர்த்திசெய்யும் வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றியும் விளக்கியிருக்கிறார்.

தூக்கத்தைக் குறைத்துக்கொண்டு வாழ்ந்தால் மூளை பாதிப்பு அடைவதற்கும், மூளை வளர்ச்சி அடைவது குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கும் நூல் ஆசிரியர், ''இளமையில் தூக்கம் முதுமையில் நினைவாற்றலைப் பெருக்கும்'' என்று ஆலோசனை தருகிறார்.    

தூக்கம் கெடாமல் எப்படிப் பாதுகாத்துக்கொள்வது, அதிகம் தூங்குபவர்கள் அதை எப்படி நிவர்த்திசெய்து கொள்ளலாம், மதியம் தூங்குபவர்கள் அதைத் தவிர்க்க வழிகள் என எல்லாவற்றுக்கும் டிப்ஸ்களாகத் தந்திருப்பது, மிகவும் பயனுள்ளவை!

டாக்டர் விகடனில் தொடராக வந்து பெரும் வ‌ரவேற்பைப் பெற்ற இந்த நூல், பலரும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்!