சிறுகுடலும், பெருங்குடலும் சேரும் இடத்தில், விரல் போன்று நீண்டிருக்கும் உறுப்பு குடல்வால்.

இந்த உறுப்பின் பயன்பாடு என்ன என்பது இதுவரை புரியாத புதிர். இதனால், எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்பது இல்லை. செரிக்கப்பட்ட உணவு, குடல்வாலில் உள்ளே மாட்டிக்கொள்ளும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. குடல்வாலில் கிருமித் தொற்றுக் காரணமாகச் சீழ் ஏற்பட்டு வெடிக்கும் அளவுக்கு நிலை முற்றலாம். இந்த வீக்கத்தை 'அப்பன்டிசைடிஸ்’ என்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காரணங்கள்:

அடைப்பு

உணவு துகள் அல்லது கழிவு, குடல் வாலில் சிக்கி அடைப்பை ஏற்படுத்துவது
நோய்த் தொற்று
வயிற்றுப் பகுதியில் ஏற்படக்கூடிய வைரஸ், பாக்டீரியா நோய்த் தொற்று காரணமாகவோ, புழுத் தொற்று காரணமாகவோ குடல்வாலில் வீக்கம் ஏற்படலாம். இந்த இரண்டு சூழ்நிலையிலும், உள்ளே உள்ள பாக்டீரியா கிருமியானது மிக வேகமாகப் பெருக்கம் அடைந்து குடல்வாலை வீக்கம் அடையச் செய்கிறது. இதனால் குடல்வாலில் சீழ் ஏற்படுகிறது. இதைச் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிடில், வெடித்துவிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அறிகுறிகள்

நடு வயிற்றில் அல்லது வலதுபக்க வயிற்றில் வலி ஏற்படும்.

சில மணி நேரத்தில் வலி உச்சத்தை அடையும்.

வலதுபக்க கீழ் வயிற்றைத் தொட்டாலே மிகக்கடுமையான வலி இருக்கும்.

நடந்தாலோ, இருமினாலோ வலி இன்னும் அதிகரிக்கும்.

குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்

பசி இன்மை

குறைந்த அளவில் காய்ச்சல்

மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு

வயிற்றில் வீக்கம்


வலியைக் குறைக்கக் குனிந்தபடி நடப்பது

ரத்த பரிசோதனையில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
எப்போது டாக்டரை சந்திக்க வேண்டும்?
வலி ஏற்பட்டால், அலட்சியம் செய்யாமல் உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும். அவர் ரத்தம், சிறுநீர் மற்றும் அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே பரிசோதனை செய்து குடல்வால் பிரச்னையை உறுதிப்படுத்துவார்.
தடுக்க
நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வது குடல்வால் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கும். முழுதானியங்கள், பச்சைக் காய்கறிகள், பழங்களை தினசரி உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்வது நல்லது.