'வயதாகிவிட்டாலே சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னை... என நோய்கள் வரிசைக்கட்டி வந்துவிடுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அந்தந்தச் சிறப்பு நிபுணர்களைப் பார்த்து அவர்கள் தரும் மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். நாள் ஒன்றுக்கு, சுமார் 20-25 மாத்திரைகள்கூட எடுக்க வேண்டியிருக்கும். இதில் ஒரு சில மருந்துகளையும் ஊட்டச்சத்து மாத்திரைகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பார்கள். இது தெரியாமல் பலரும், டாக்டர் பரிந்துரைத்தது என்பதற்காகவே அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். பொதுவாக, ஒரு சிறப்பு மருத்துவரை அணுகும்போதே அவரிடம், தான் எடுத்துவரும் மாத்திரைகள் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டும். மாத்திரைச் சீட்டைக் காட்டினாலே போதும். முடியாதவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் தேவையற்ற மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம்'' என்கிறார் பொது மருத்துவர் சிவராஜ்.

'இன்றைக்குச் சுய மருத்துவம் அதிகரித்துவிட்டது. அதிலும், குறிப்பாக வயோதிகர்களுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், உடல் வலி, தலைவலி போன்ற எந்தப் பிரச்னைகள் வந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருந்து கடைக்குச் சென்று மாத்திரை வாங்கிப் போட்டுக்கொள்கின்றனர். 'சாதாரணத் தலைவலி’ என்று நினைத்திருப்போம். ஆனால், தலைவலி ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. எதனால் தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும். சுயமாக மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வதால் சிறுநீரகச் செயல்திறன் பாதிப்பு பிரச்னைகள் ஏற்படலாம்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர்.

ஊட்டச்சத்து குறைபாடு பற்றிப் பேசும்போது, 'இதில் முக்கியமானது வைட்டமின் டி குறைபாடு. இதற்குக் காரணம், வெயிலுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே இருப்பது, வெயில் படாமலேயே இருப்பதுதான். சூரிய ஒளி நம் உடலில்படும்போது நம்முடைய உடல் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கிறது. இந்த வைட்டமின் டி-தான் எலும்பின் வலிமைக்கு உதவுகிறது. மேலும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாயில் கொழுப்புப் படியாமல் தடுக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது. எனவே, வைட்டமின் டி போதுமான அளவில் உள்ளதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். அப்படி, வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரிந்தால் டாக்டரின் பரிந்துரையின்பேரில் மாத்திரையாகவோ, பவுடராகவோ கிடைக்கும் ஹைடோஸ் வைட்டமின் டி சத்து மருந்தை வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் சிவராஜ்.

பா.பிரவீன் குமார்,

படம்: ப.சரவணக்குமார்

அன்பு வாசகர்களே,

ஜூன் 16 முதல் 30ம் தேதி வரை... தினமும் 044 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து தவிர்க்கும் வழிகள், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்களில் இருந்து தப்பிக்கும் வழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பொது நலம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பி.சிவராஜ்.

வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன?

பாலிபார்மசி பிரச்னை என்றால் என்ன?

சுய மருத்துவத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

முதுமையில் மன அழுத்தம், மறதி ஏன் ஏற்படுகின்றன?

பக்கவாதம் பாதிப்பில் இருந்து தப்ப வழி என்ன?

முதியவர்கள் நிலைத்தடுமாறி விழுவதற்கு காரணம் என்ன?

வைட்டமின் டி குறைபாட்டைக் கண்டறிவது எப்படி?

ரத்தச் சோகை எதனால் ஏற்படுகிறது?

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரகம் ஏன் பாதிக்கிறது?

சர்க்கரை நோயாளிகள் ஏன் கண் பரிசோதனை செய்ய வேண்டும்?