Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

வயிற்றில் வளர்ந்த விபரீதக் கட்டி!

10 மாதம் குழந்தையைச் சுமந்து பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுஜென்மம்.

அக்கம் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, தன் கர்ப்பபையில் 15.6 கிலோ எடையுள்ள கட்டியை சுமந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 52 வயதான ஒரு பெண்மணி. கட்டி பெரிதாகும்போது வயிறும் பெரிதாகியிருக்கிறது. கட்டியின் அழுத்தம் காரணமாக ரத்தப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மூச்சு விடவும் சிரமப்பட்டிருக்கிறார். ஆனாலும், வயிறு தொப்பை போட்டிருக்கிறது என்று கவனக்குறைவாகவே இருந்திருக்கிறார். கடைசியில் வலி அதிகரிக்கவே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். பரிசோதித்த டாக்டர், அவரது கர்ப்பபையில் கட்டி இருப்பதைக் கண்டறிந்தார். உடனடியாக அவருக்கு சென்னை குமரன் மருத்துவமனை வயிறு மற்றும் குடல் சிறப்பு மருத்துவர் எஸ்.பி.சிவகுமார் டாக்டர் மணிமேகலை குழுவினர் மூன்றரை மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து அந்தக் கட்டியை அகற்றினர். இதுவரை 9.6 கிலோ கட்டி அகற்றப்பட்டதுதான் உலகச் சாதனையாக இருந்தது. இந்தப் பெண்ணின் கர்ப்பபையில் இருந்து 16.6 கிலோ கட்டியை அகற்றியதன் மூலம், புதிய சாதனை படைத்துள்ளனர் டாக்டர்கள்.

அங்கீகாரம் பெற்ற அதிநவீன ரோபோ!

அக்கம் பக்கம்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெர்பின்ட் நிறுவனம் தயாரித்த அதிநவீன ரோபோ கருவிக்கு அமெரிக்காவின் எப்.டி.ஏ அனுமதி கிடைத்துள்ளது. இதுகுறித்து, இந்த நிறுவனத்தின் இயக்குநர் நந்தகுமார் மற்றும் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ராய் கூறுகையில், 'பெர்பின்டின் அதிநவீன மேக்சியோ கருவியானது சி.டி இமேஜைப் பயன்படுத்தி மருத்துவர் கட்டுப்பாட்டில் இயங்கும் கருவி. இது நோயாளியின் புற்றுநோய் தாக்கியுள்ள இடங்களைத் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. இதன்மூலம், அவருக்கு என்னமாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்று டாக்டர்கள் திட்டமிட முடியும். அதன் அடிப்படையில் அந்தப் புற்றுநோய் செல்களை ரேடியோ ஃப்ரீக்குவன்சி அலையைச் செலுத்தி அழிக்க முடியும். அதன்பிறகு நோயாளி குணமாகியுள்ளாரா என்பதையும் இந்தக் கருவியைக் கொண்டே ஆய்வு செய்யமுடியும். மேலும், இந்தக் கருவியை வலி நீக்க மருத்துவத் துறையிலும் பயன்படுத்தலாம். இதன்மூலம் நோயாளிக்கு மிக விரைவான மருத்துவ உதவி கிடைக்கும்' என்றனர்.

வந்தாச்சு... கையடக்க ஸ்கேன் கருவி

அக்கம் பக்கம்

பொதுவாக, மருத்துவமனைகளில் ஒரு டேபிள் அளவுக்கு அல்ட்ரா சவுண்ட் கருவியை வைத்திருப்பார்கள். இதை இயக்கவும் சற்றுக் கடினமாக இருக்கும். ஆனால், அதைவிட நவீன, உயர் திறன் கொண்ட 'விசிக்’ என்ற அல்ட்ரா சவுண்ட் கருவியை ராயல் பிலிப்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியது. இதன்மூலம் மிகத் தெளிவான உருவங்களையும், கருவில் இருக்கும் குழந்தையின் விரல்களையும்கூடத் துல்லியமாகப் பார்க்க முடியும். கையடக்கக் கருவி என்பதால், இதை எங்கும் வேண்டுமானாலும், கொண்டு செல்ல முடியும். ஸ்கேன் கருவியை இயக்க, ஒரு சில விநாடிகளே போதும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் வரை இயங்கும். இதன்மூலம், கிராமப்புறங்களில் உள்ளவர்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கும் அவர்கள் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கவும் இந்தக் கருவி பெரிதும் உதவியாக இருக்கும்'' என்கிறார் இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் சுஜித் குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism