'அங்காடித் தெரு’ படம் பார்த்தவர்களுக்குப் பரிச்சயமான வார்த்தைதான் 'வெரிகோசிஸ்’. ரத்தக் குழாய் விரிவடைந்து, பெரிதாவதைத்தான் 'வெரிகோசிஸ் வெயின்’ என்கிறோம். உடலில் உள்ள எந்த ஒரு ரத்தக்குழாயும் விரிவடையலாம். ஆனால், பாதம் மற்றும் காலில் உள்ள ரத்த நாளங்கள்தான் பெரும்பாலும் விரிவடைகின்றன. காலில் நரம்புகள் சுருண்டு, பாம்புபோல் வளைந்தும் நெளிந்தும் வேர் போல் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும்.

இதன் அறிகுறிகள்...

எந்தவித வலியும் இருக்காது.

காலில் தோலுக்கு அடியில் உள்ள ரத்தக் குழாய் பர்பிள் அல்லது நீல நிறத்தில் தெரியும்.

காலில் எடை அதிகரித்த உணர்வு ஏற்படும்.

நீண்ட நேரம் உட்கார்ந்தாலோ, நின்றாலோ, மிகக் கடுமையான வலி ஏற்படும்.

காலில் எரிச்சல், தசைப்பிடிப்பு, கால் வீக்கம் ஏற்படும்.

பெரிதாகிய ரத்தக் குழாய் உள்ள பகுதியில் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படும்.

கணுக்கால் பகுதியில் ஏதேனும் புண் வந்தால், மிக மோசமான நிலையில் உள்ளதாக அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

காரணங்கள்

இதயத்தில் இருந்து ரத்தம் உடல் முழுக்கப் பாய்கிறது. இப்படி காலுக்கு வந்த ரத்தமானது மீண்டும் இதயத்துக்குப் பயணிக்க வேண்டும். இதற்காக, காலில் உள்ள ரத்தக் குழாய், புவிஈர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்பட வேண்டும். காலில் உள்ள எலாஸ்டிக் தன்மை கொண்ட ரத்தக் குழாயானது ரத்தத்தை மேலே தள்ளி, மீண்டும் கீழே வராதபடி மூடிக்கொள்கிறது. ஆனால் ஹார்மோன் பாதிப்பு, வயது அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களால் ரத்தக் குழாயின் வால்வுகள் பாதிக்கப்படும். இதனால் ரத்தம் காலில் உள்ள ரத்தக் குழாயில் தேங்கிவிடும்.

பாலினம்

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் ஏற்படும். இதற்கு கர்ப்பகாலம், மாதவிலக்கு, மெனோபாஸ் காலங்களில் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள்தான் காரணம். பெண் ஹார்மோனானது ரத்தக் குழாய் சுவற்றைத் தளர்வுறச் செய்யும். ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரப்பி மற்றும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் வெரிகோசிஸ் வெயின் பாதிப்பை அதிகரிக்கலாம்.

குடும்பப் பின்னணி

குடும்பத்தில் ரத்த உறவில் வெரிகோசிஸ் வெய்ன் பிரச்னை ஒருவருக்கு இருந்தால், மற்றவர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது.

உடல் பருமன்

அதிக உடல் எடை ரத்தக் குழாயில் அழுத்தத்தை ஏற்படுத்தி, பாதிப்பை உண்டாக்கும்.

தவிர்க்க

காலில் ரத்த ஓட்டத்தை சீராகவைத்திருப்பதன் மூலம் வெரிகோசிஸ் வெய்ன் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். இதற்கு செய்ய வேண்டியது:

தினசரி உடற்பயிற்சி

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல்

அதிக நார்ச்சத்துள்ள உணவை உண்ணுதல்

உணவில் உப்பைக் குறைத்தல்

ஹைஹீல்ஸ் அணிவதைத் தவிர்த்தல்

அவ்வப்போது கால் மற்றும் பாதத்தைப் பரிசோதித்தல்

நீண்ட நேரம் உட்கார்ந்தோ, நின்ற நிலையிலோ இருப்பதைத் தவிர்ப்பது.