Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

பிரீமியம் ஸ்டோரி
நலம், நலம் அறிய ஆவல்!

'நாணத்தையும் கூச்சத்தையும் பெண்கள் எதில் விலக்க வேண்டுமோ இல்லையோ, தங்கள் உடல் சார்ந்த பிரச்னைகளை வெளியில் சொல்வதில் கண்டிப்பாக விலக்கவேண்டும்'' என்கிறார்  யுரோகைனக்காலஜிஸ்ட் டாக்டர் கார்த்திக் குணசேகரன்.

''அதிலும் சிறுநீர் கசிவு தொடர்பான சில பிரச்னைகளை வெளியே சொல்ல கூச்சப்பட்டு, அப்படியே சகித்துக்கொண்டு வாழப் பழகிவிடுகின்றனர். ஆனால், இவற்றை மருத்துவ உதவியுடன் சரிசெய்துவிடலாம் என்ற விழிப்பு உணர்வு பெண்கள் மத்தியில் துளியும் இல்லை' என்ற ஆதங்கத்துடன் விரிவாகப் பேசத் தொடங்கினார்.

'பெண்களுக்கு இடுப்பு எலும்பு பகுதி மிக முக்கியமானது. கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, மலக்குழாய், சிறுநீர்க் குழாய்கள் போன்ற முக்கிய உறுப்புகளை இந்த இடுப்பு எலும்புதான் பாதுகாக்கிறது. இந்த உறுப்புகளில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சரிசெய்வதற்காக முன்பு மகளிர் மருத்துவர், சிறுநீரகவியல் மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணர் என்று தனித்தனியாக மருத்துவர்களைப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் ஒரே மருத்துவரிடம் சிகிச்சை பெறும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் யுரோகைனக்காலஜி.

நலம், நலம் அறிய ஆவல்!

பிரசவத்தின்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக இடுப்பு எலும்புப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள், நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக சுகப் பிரசவத்துக்குப் பிறகு 40 சதவிகிதப் பெண்களுக்கு அடி இறக்கம் ஏற்படுகிறது. மேலும் வயது அதிகரிப்பு, இடுப்பு எலும்புப் பகுதியில் தசைகள் தளர்வடைவது உள்ளிட்ட வேறு சில காரணங்களாலும் அடி இறக்கம் ஏற்படலாம். அடி இறக்கத்தினால் தும்மல், சிரிப்பு உள்ளிட்ட உடலில் ஏற்படக்கூடிய சிறு அழுத்தங்கள் காரணமாகக்கூட சிறுநீர் கசிந்துவிடும்.

அடி இறக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், சில உடற்பயிற்சிகள் மூலம் தசைகள் தளர்வுற்று இருப்பதை சரிசெய்யலாம். பிரச்னை சற்று அதிகமாக இருந்தால் ஸ்லிங் (Sling) அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும்.

உடல் பருமன், நீண்ட கால இருமல், எடை அதிகமான பொருட்களைத் தூக்குவது போன்றவை அடி இறக்கம், சிறுநீர் கசிவுக்கு வழிவகுத்துவிடும். இதுபோன்ற விஷயங்களில் கவனத்துடன் இருந்து, பிரசவத்துக்கு முன்பிருந்தே பயிற்சிகளைச் செய்துவந்தால் இந்தப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பை வெகுவாகக் குறைக்க முடியும்' என்கிறார் டாக்டர் கார்த்திக் குணசேகரன்.

சரிதானே?

- எஸ்.விஜயஷாலினி  படம்: சொ.பாலசுப்பிரமணியன்

அன்பு வாசகர்களே, ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை... தினமும் +(91)-44-66802904 என்ற எண்ணுக்கு

நலம், நலம் அறிய ஆவல்!

போன் செய்தால், பெண்களுக்கு ஏற்படக்கூடிய அடிஇறக்கம், சிறுநீர் கசிவு மற்றும் பெண்கள் வெளியே சொல்ல கூச்சப்படுகின்ற சில பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தருகிறார் யுரோகைனக்காலஜிஸ்ட் டாக்டர் கார்த்திக் குணசேகரன்.

நலம், நலம் அறிய ஆவல்!

  யுரோகைனக்காலஜி என்றால் என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏன் ஏற்படுகிறது?

நலம், நலம் அறிய ஆவல்!

  சிசேரியன் செய்வதன் மூலம் அடிஇறக்கப் பிரச்னையைத் தவிர்க்க முடியுமா?

நலம், நலம் அறிய ஆவல்!

  சிறுநீர் கசிவுப் பிரச்னையைக் கண்டறிவது எப்படி?

நலம், நலம் அறிய ஆவல்!

  சிறுநீர் கசிவுக்கான சிகிச்சைமுறைகள் என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  பெல்விக் ஃபுளோர் பயிற்சிகள் என்றால் என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  குடல் இறக்கம், அடி இறக்கத்துக்கான சிகிச்சை என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க முடியுமா?

நலம், நலம் அறிய ஆவல்!

  உணவுப் பழக்கத்தால் சிறுநீர் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய முடியுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு