Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

'யாரும் ரிமோட்டைப் பிடுங்கிவிடுவார்களோ?’ என்ற பயத்தில் ரிமோட்டைக் கெட்டியாகப்

அக்கம் பக்கம்

பிடித்துக்கொண்டு, தொலைக்காட்சி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பவரா நீங்கள்? அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கும் பழக்கம் வாழ்நாளை சுருக்கிவிடும் என்கிறது அமெரிக்க இதயக் கூட்டமைப்பின் ஆய்வு. நீண்ட நேரம் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் பார்க்கும்போது உடல் உழைப்பு குறைகிறது. இதனால் இதய நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறதாம். ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக டி.வி. பார்ப்பவர்களைவிட, மூன்று மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக டி.வி பார்ப்பவர்களுக்குப் பாதிப்பு அதிக அளவில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அப்புறம் என்ன, டி.வி.யை ஆஃப் பண்ணுங்க பாஸ்!

அக்கம் பக்கம்

இளம் வயதினர்தான் அதிக அளவில் சிகரெட் உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். இதைத் தடுக்கப் புகையிலைப் பொருட்களை வாங்குவதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 25 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 25 வயதுக்குள் சிகரெட் பொருட்களை வாங்க முடியாதபோது அவர்களுக்கு அதுபற்றிய நாட்டமே இல்லாமல் போய்விடுவதற்கான உளவியல் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்டுக்கிட்டீங்களா முகேஷ்களா?

அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்ய அமெரிக்கா சென்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அங்குள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஓர் பேட்டி அளித்திருந்தார். அதில், 'எய்ட்ஸை ஒழிக்க

அக்கம் பக்கம்

ஆணுறை மட்டும் போதாது. இந்திய கலாச்சாரப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்பதைப் பின்பற்றினாலே எய்ட்ஸை விரட்டி அடிக்கலாம்' என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் எய்ட்ஸ் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள என்.ஜி.ஓ-க்கள் மத்தியில் அதிருப்தி கிளம்பியது. 'நாங்கள் என்ன முறைகேடான செக்ஸ் நடவடிக்கையை ஊக்குவிக்கிறோமோ' என்று என்.ஜி.ஓ-க்கள் போர்க்கொடி தூக்கினர். எதிர்ப்புகள் கிளம்பவே, 'தான் கூறியது தவறான பொருள்படும்படி வெளியாகிவிட்டது' என்று மறுத்துள்ளார் அமைச்சர். இதற்கிடையே,  'ஆணுறையை ஊக்குவிப்பதற்குப் பதில், இந்திய கலாச்சார நெறிமுறைகளை ஊக்குவியுங்கள்' என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாம். 'பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறோம். அவர்களிடம் கலாச்சாரம், சமூக நெறிகளைப் பற்றிப் பேசுவது எந்த அளவுக்கு உதவும்’ என்று தெரியவில்லை என்கின்றனர் என்.ஜி.ஓ-க்கள்.

எப்படியோ, அந்த எய்ட்ஸை ஒழிங்க சார்!

அக்கம் பக்கம்

தோலைக் கிழித்தல், தையல் போடுதல் போன்ற எந்தத் தொல்லைகளும் இல்லாமல் லேசர் சிகிச்சை மூலமாகவே காயங்களைச் சரிசெய்யும் புதிய முறையைச் சென்னையில் அறிமுகப்படுத்தினர் 'தி மெடிக்கல் பார்க்’ மருத்துவர்கள். லேசர் கருவியை அறிமுகப்படுத்தி டாக்டர் ஜெயப்பிரகாஷ் பேசியபோது, 'விபத்து, காயம், எலும்புமுறிவு ஏற்பட்ட இடங்களில் தோல் பகுதியில் சிராய்வு ஏற்பட்டு மிகவும் கோரமாக இருக்கும். இதற்கு நிறையப் பணம் செலவழித்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யாமல் லேசர் சிகிச்சை மூலம் குறைந்த செலவில் சிகிச்சை பெறலாம். லேசர் சிகிச்சையைப் பெறுவதற்காக அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை, வலியும் குறைவு. இந்தச் சிகிச்சைமுறையைப் பயன்படுத்தித் தீக்காயம், அறுவைசிகிச்சை காயங்கள், விபத்துக் காயங்கள், புற்றுநோயால் ஏற்பட்ட காயத்தழும்புகள் என அனைத்தையும் சரிப்படுத்த முடியும்' என்கிறார் டாக்டர்.

லேசா முடிக்கணும்னா, லேசருக்குப் போங்க!