Published:Updated:

வாய் துர்நாற்றம் போக்க வழி என்ன?

வாய் துர்நாற்றம் போக்க வழி என்ன?

வாய் துர்நாற்றம் போக்க வழி என்ன?

வாய் துர்நாற்றம் போக்க வழி என்ன?

Published:Updated:
வாய் துர்நாற்றம் போக்க வழி என்ன?

ஜி.சுரேஷ், காட்டான்குளத்தூர்

'எனக்கு வயது 19. அடிக்கடி உதடு வறண்டு, கருப்பாக மாறிவிடுகிறது. பீடா, சிகரெட் போன்ற எந்தப் பழக்கமும் எனக்கு இல்லை. ஆனால், உதடு கருப்பாக இருப்பதால், பலரும் என்னைத் தவறாக நினைக்கிறார்கள். உதட்டில் வறட்சி, கருமை போக நான் என்ன செய்ய வேண்டும்?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் ஆச்சல், தோல் மருத்துவர், வேலூர்

வாய் துர்நாற்றம் போக்க வழி என்ன?

'இன்றைய தலைமுறை இளைஞர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்னை இது.  உதட்டில் உள்ள தோல் வறண்டு போகும்போது, வெடித்துச் செதில்களாக வெளியே வரும். சிலர் அதனைப் பிய்த்து எரிவார்கள்.  இன்னும் சிலர் உச்சக்கட்டமாகப் பற்களால் உதட்டுத் தோலைக் கடித்து எடுப்பார்கள். இவற்றால் தோல் கருப்பாக மாற வாய்ப்புஉள்ளது. இந்தப் பழக்கம் பலருக்கும் உண்டு. நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகளால்கூடத் தோல் கருப்படையலாம். எனவே சரியான காரணத்தை அறிந்து பிரச்னைக்குத் தீர்வு காண, உடனடியாகத் தோல் மருத்துவரை அணுகுங்கள். உதட்டு தோலின் நிறத்தை வைத்து மட்டுமே ஒருவர் சிகரெட் பிடிப்பவரா... இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

தோல் வறண்டுபோகும் சமயத்தில் உதட்டை ஈரப்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது தேங்காய் எண்ணெய் தடவலாம். மிக முக்கியமாக, பற்களால் உதட்டின் மேல் உள்ள தோலைப் பிய்த்து எடுக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனடியாக நிறுத்தவும்.''

செல்வி, திண்டுக்கல்

'நான் ஒரு பள்ளி மாணவி. என் வாயில் இருந்து எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், என் கீழ்வரிசைப் பற்களின் பின்புறம் கருப்பாக இருக்கிறது. தினமும் மூன்று வேளை பல் துலக்கினாலும்கூடத் துர்நாற்றமும், கறையும் போவது இல்லை. இதனால் நண்பர்களுடன் சகஜமாகப் பேச சங்கடமாக இருக்கிறது. இதற்கு தீர்வு தாருங்கள்!'

டாக்டர் இளங்கோ, பல் மருத்துவர், கோவை

'பல் மற்றும் ஈறுக்கு இடையில் பாக்கெட் போன்ற அமைப்பு உள்ளது. இதை 'கம் பாக்கெட்’ என்போம். உணவுத் துகள்கள் இந்தப் பாக்கெட்டில் போய் சிக்கிக்கொள்ளும். என்னதான் பிரஷ்

வாய் துர்நாற்றம் போக்க வழி என்ன?

செய்தாலும் இதை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. வாய் துர்நாற்றம் ஏற்பட, இதுவே முக்கியக் காரணம். ஈறில் சேரும் இந்த அழுக்கை பல் மருத்துவரால் தான் சுத்தம் செய்ய முடியும். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்ய முடியும்.

தவிர, எச்சில் சுரப்பு குறைவாக இருப்பது, வாய் உலர்ந்துபோவது, சைனஸ், தொண்டை மற்றும் காதில் நோய்த் தொற்று ஏற்படுவதால் கூட, வாய்த் துர்நாற்றம் ஏற்படுகிறது. பசியினால்கூட வாய் துர்நாற்றம் ஏற்படலாம். வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ள வேண்டும். பற்களில் கருப்புக் கறை ஏற்படுவதற்கு டீ, காபி அதிகமாக அருந்துவதும் முக்கியக் காரணம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள கறை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துதான் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க முடியும். உடனடியாக உங்கள் அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.'

வாய் துர்நாற்றம் போக்க வழி என்ன?