Published:Updated:

அடுப்படியே ஒரு மருந்தகம்

அடுப்படியே ஒரு மருந்தகம்

அடுப்படியே ஒரு மருந்தகம்

அடுப்படியே ஒரு மருந்தகம்

Published:Updated:

'விருந்தை மருந்தாக்கினால் மருத்துவமனையே தேவை இல்லை’ என்பதை அழுத்தமாகச் சொல்கிறது 'அடுப்படியே ஒரு மருந்தகம்’ என்ற புத்தகம். மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலின் காரணமாக, அஞ்சறைப் பெட்டியை மறந்து மாத்திரை, மருந்து டப்பாக்கள் அதிகரித்துவிட்ட காலத்தில் வாழ்கிறோம் நாம். இந்த நிலைமையை மாற்றவேண்டும் என்ற வேட்கை கொண்டோருக்கான ஆறுதலாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம்.

அடுப்படியே ஒரு மருந்தகம்

'அடுப்படியில் பயன்படுத்தும் பொருட்களே... நோய் தீர்க்கும் மருந்து’ என்று அடித்துச் சொல்கிறார் நூலின் ஆசிரியர் ச.சிவ-வல்லாளன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூண்டு, இஞ்சி, மஞ்சள்தூள், வெந்தயம், லவங்கப்பட்டை, சமையல் எண்ணெய் போன்ற அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களுமே ஏதேனும் ஒருவகையில் நோய் தீர்க்கும் மருந்துகளே!

உதாரணத்துக்கு, பூண்டுப் பற்களில் 60 சதவீத 'அல்லிசின்’ என்ற ஆற்றல்மிக்க நுண்ணுயிர்க் கொல்லி நிறைந்துள்ளது. மாரடைப்பைத் தடுக்கும் ஆஸ்பிரியன் மாத்திரைகளைவிட, வெள்ளைப் பூண்டு பக்கவிளைவு இல்லாத ஆற்றல்மிக்க மருந்து. அதேபோல், இஞ்சியில் ஃபிளவனாய்டு வகை ஆன்டிஆக்சிடன்ட், ஃபிரி ராடிக்கல் தாக்குதலைத் தடுத்து உடல் செல்களைப் பாதுகாக்கிறது.

சிவப்பு மிளகாயின் மணம், காரம், சுவை அனைத்துக்கும் காரணமான 'கேப்சைசின்’, மாரடைப்பைத் தடுக்க உதவுகின்றன. சிவப்பு மிளகாயில், போதுமான அளவில் உயிர்ச்சத்து உள்ளதால், உடல் செல்களின் கொழுப்புப் பகுதியில் நிறைந்து ஃபிரி ராடிக்கல் தாக்குதலை முடக்கி செல்களைப் பாதுகாக்கும்.

அடுப்படியே ஒரு மருந்தகம்

இப்படி ஒவ்வோர் உணவுப் பொருளின் உன்னதமான சத்துக்களைச் சொல்லி, அவை எந்தெந்த நோய்களைத் தீர்க்க வல்லது என்பதையும், உலக அளவில் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள சமையல் பொருட்களின் சிறப்புகளையும் தொகுத்து நம் முன் வைக்கிறது இந்த நூல்.

காலங்காலமாகச் சமைக்கப் பயன்படுத்தும் அடுப்பங்கரை உணவுப் பொருட்கள் சுவையூட்டவும், மணமூட்டவும் மட்டுமே அல்ல... உடலுக்கு ஊட்டத்தைத் தரக்கூடியவை என்பதை அலசி ஆராய்ந்து தெளிவாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். மஞ்சளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவர், ஒரு கைப்பிடி மஞ்சள் தூள், ஒரு பிடி தங்கத் தூளுக்குச் சமம் என்று குறிப்பிட்டதைப் போல... இனி, நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் இந்தப் பொருட்கள் அனைத்தும் நிறைந்துள்ள அடுப்படிதான், நமக்குப் பாதுகாப்பான மருந்தகம்.