Published:Updated:

காப்போம் கருப்பையை!

காப்போம் கருப்பையை!

காப்போம் கருப்பையை!

காப்போம் கருப்பையை!

Published:Updated:

பெண்ணுக்கான தனித்துவ உறுப்பு... கருப்பை. குழந்தை என்னும் மனித மகத்துவத்தை உண்டாக்கித் தருகிற அற்புதமான உறுப்பு. ஆனால் காலங்காலமாகக் கருப்பையைப் போற்றிப் புகழ்ந்து வந்திருக்கிறோமே தவிர, அதைக் காப்பதற்கான விழிப்பு உணர்வு பெண்களுக்கு இல்லை!

கருப்பைப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல்

காப்போம் கருப்பையை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலட்சியமாக இருப்பதனால் சமயங்களில், கருப்பையையே அகற்ற வேண்டிய நிலை சிலருக்கு நேரும்.  கருப்பையில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் கருப்பை அகற்றப்படுவதற்கான காரணங்கள் குறித்து திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிரியல் நோய் மருத்துவர் டாக்டர் ஜெ. அமலா தேவி விரிவாக விளக்குகிறார்.

'பெண்களின் நீர்ப்பைக்கும், மலக்குடலுக்கும் இடையில் அமைந்துள்ள கருப்பை உடல், கழுத்து என்று இரண்டு பகுதிகளை உடையது. வயதான பெண்களுக்கு கருப்பையின் உடல் பகுதிகளைவிட கழுத்துப் பகுதிகளில் (CERVIX) தான் அதிகமாக புண்களும் புற்றுநோயும் வரும் வாய்ப்பு உண்டு.

பெண்கள் அடிக்கடி கருத்தரித்து பிரசவம் நிகழ்வதால், கருப்பை, ஜனனப்பாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தசைநார்கள் தளர்ச்சியடையும். பிரசவத்துக்குப் பின்பு சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால் ரத்தசோகை ஏற்பட்டு, உடல் பலவீனமாகும். இதனால் வயிற்றின் அடியிலுள்ள கருப்பை, நீர்ப்பை உறுப்புகள் ஜனனப் பாதை வழியாக இறங்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு, 'கருப்பைக் கீழிறக்கம்’ - என்று பெயர்.

காப்போம் கருப்பையை!

பிரசவத்துக்குப் பிறகு, ஆறு வார இடைவெளியுடன் முறையான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமும் கருப்பை கீழிறங்குவதைத் தடுக்கலாம். வயதானவர்களுக்கு ஏற்படுகின்ற கருப்பை கீழிறக்கத்தினை, அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யலாம்.  

கருப்பை நீக்கப்படுவதற்கான காரணங்கள்:

காப்போம் கருப்பையை!

1. பெரும்பாலும் கருப்பையின் சதைப் பகுதியில் கட்டிகள் உருவாகின்றன. திருமணம் ஆகாத பெண்களுக்கும் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சின்னச் சின்னக் கட்டிகள் இருந்தால், பிரச்னை இல்லை. அதிக எடையுடன் பெரிய கட்டிகள் இருந்தால், கருப்பையை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

2. கருப்பையின் கழுத்துப் பகுதியைச் சுற்றி புற்றுநோய் பாதிப்பு இருந்தால், கருப்பையையும் அருகில் இருக்கும் சினைப்பையையும் (கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு) எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

3. பிரசவத்தின்போது ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கை வேறு எந்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்தியும் சரிசெய்ய முடியாதபோது கருப்பையை நீக்க நேரிடும். இது வேறு வழிகளே இல்லாத நெருக்கடி நிலையின்போதுதான் நிகழ்கிறது.

4. கருப்பையின் அருகிலுள்ள சினைப்பையில் கட்டிகளோ அல்லது புற்றுநோயோ இருந்தால், கண்டிப்பாக சினைப்பையோடு சேர்த்து கருப்பையை எடுக்க வேண்டும்..

கருப்பை எடுப்பதால் ஏற்படும் பிரச்னைகள்:

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு கருப்பை அகற்றப்படுமானால், எந்தவிதமான பின் விளைவுகளும் ஏற்படாது. ஆனால், இளம் வயதில் கருப்பையோடு சினைப்பையும் சேர்த்து எடுக்கும்போது பெண்களுக்கு அதிகமான நெஞ்சுப் படபடப்பு, உடலில் திடீரென சூடு பரவுதல், அதிகமான வியர்வை, எலும்புத் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது பிரசவங்கள் பெரும்பாலும் சிசேரியன் முறையில் நடைபெறுவதால், கர்ப்பப்பை எடுக்கும் நிலை வர வாய்ப்பு இல்லை.  40 வயது வரை உள்ள பெண்களுக்கு கருப்பையில் பிரச்னை இருந்தால், பெரும்பாலும் அறுவைசிகிச்சை இன்றியே சரிசெய்யப்படுகின்றன. அதே சமயம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குழந்தைப்பேறு முடிந்தவுடன் கருப்பையில் ஏற்படும் நோய்களுக்காக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கருப்பை நீக்கப்படுகிறது. லேப்ராஸ்கோப்பி முறைகளைப் பயன்படுத்தி, கருப்பையிலுள்ள கட்டிகள் நீக்கப்படுகின்றன.

காப்போம் கருப்பையை!

சிகிச்சை முறைகள்!

* சினைப்பையும் கருப்பையும் சேர்த்து எடுக்கும்போது தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு HRT (HARMONE REPLACEMENT THERAPY) சிகிச்சை வழங்கப்படவேண்டும்.

தேயிலைத் தோட்டப் பெண்களுக்குத் தேவை விழிப்பு உணர்வு!

கடந்த 10 வருடங்களில் தேயிலைத் தோட்டத் தொழிலில் ஈடுபடும் பெண்களில் 1,000 பேருக்கும் மேலாக கருப்பை எடுக்கப்பட்டுள்ளது என்கிறது சமீபத்திய சர்வே. அங்கு பணிபுரிகின்ற பெண்கள் அதிக பளுவை சுமப்பதும், குழந்தைகளை மடியில் கட்டிக்கொள்வதால் வயிற்றினுள் ஏற்படும் அதிகப்படியான அழுத்தமும் முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் வருடத்துக்கு சுமார் 1,30,000 பெண்கள் கருப்பை கழுத்துப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 70,000 பேர் வருடத்துக்கு இறப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிரவைக்கின்றன.  

உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்