Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

'அல்சைமர்’ என்னும்  நோய் ஒருவருக்கு வரவிருப்பதை முன்கூட்டியே கண்டறியக்கூடிய

அக்கம் பக்கம்

வழிமுறையை நெருங்கிவிட்டதாக பிரிட்டனில் இருக்கும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 'அல்சைமர்’ என்பது ஞாபகமறதி நோயின் ஆரம்ப நிலை. தற்போதைய சூழ்நிலையில் இந்த 'அல்சைமர்’ நோய் முற்றிய நிலையில்தான், அந்த நோய் வந்திருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதன் பிறகு சிகிச்சை அளிப்பது என்பது இயலாத காரியம். ஆனால், 'அல்சைமர்’ நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான வசதிகள் வந்துவிட்டால், அதை முற்றிலும் குணப்படுத்துவதற்கான மருந்தையும் கண்டுபிடித்துவிட முடியும்’ என்கின்றனர் விஞ்ஞானிகள். உலக அளவில் நான்கரைக் கோடி பேர், 'அல்சைமர்’ நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியே லாங் டைம்,  ஷார்ட் டைம் மெமரி லாஸையும் ஒழிச்சிட்டீங்கன்னா சில சினிமாக்கள் வரவே வராது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்கம் பக்கம்

சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனை 12 மணி நேரத்தில் ஐந்து உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளைச் செய்து ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. சமீபத்தில் மூளைச் சாவு அடைந்தவரிடமிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 12 மணி நேரத்தில் பொருத்தியுள்ளனர். பொதுவாக மூளைச் சாவு அடைந்தவரிடமிருந்து பெறப்படும் கல்லீரல், இரண்டு பேருக்கு மட்டுமே பொருத்தப்படும். ஆனால், இதில் முதன்முறையாக ஒரு கல்லீரலை மூன்று பேருக்குப் பொருத்தி சாதனை படைத்துள்ளார் டாக்டர் முகமது ரிலா. மேலும், உயிருடன் உள்ள ஒருவர், தன்னுடைய உறவினருக்கு தானமாகக் கல்லீரலைக் கொடுத்தார். அதுவும் அதே தினத்தில் அறுவைசிகிச்சை செய்து பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்து உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை உள்பட மொத்தம் எட்டு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன. 11 கல்லீரல் அறுவைசிகிச்சை நிபுணர்களும், 7 சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்களும் இந்த அறுவைசிகிச்சையில் ஈடுபட்டு ஐந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். நோயாளிகள் அனைவரும் நலமாக உள்ளதாக  தலைமையேற்று நடத்திய டாக்டர் முத்துவீரமணி தெரிவித்துள்ளார். கிரேட் டாக்டர்ஸ்!

அக்கம் பக்கம்

கேரளா என்றவுடன் நம் நினைவுக்கு வரும் விஷயங்களுள் திருச்சூர் யானைத் திருவிழாவும் ஒன்று! திருச்சூரைச் சேர்ந்த யானை நல விரும்பிகள், யானைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிய ஆய்வுக்கூடம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் 500-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. கேரளா கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மருத்துவமனையைத் தொடங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்கள் ஆர்வலர்கள். யானைகள் தும்பிக்கையால் வாழ்த்துமே!

அக்கம் பக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் படாதபாடு படுத்திய காய்ச்சல், டெங்கு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூன் 30 வரை நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது, தேசிய பூச்சிகள் மூலம் பரவக்கூடிய நோய்கள் தடுப்பு திட்ட அமைப்பு (NVBDCP). இதில், மகாராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்துக்குதான் இரண்டாம் இடம். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 677 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும், வரும் மழைக் காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசு மூலம் பரவக்கூடிய டெங்கு, நேரடியாகத் தொற்றக்கூடிய நோய் அல்ல. ஆனால் யாருக்கு வரும் என உறுதியாகச் சொல்ல முடியாது. கடும் காய்ச்சல், தலைவலி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால், உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். உஷாரய்யா உஷாரு...!

அக்கம் பக்கம்

இந்த ஆண்டு உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புகையிலைப் பொருட்கள் மீதான வரியைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியிருந்தது. தற்போது மத்திய பட்ஜெட்டில் சிகரெட் மீதான வரி, அதன் அளவைப் பொருத்து 12 சதவிகிதத்தில் இருந்து 72 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல புகையிலைப் பொருட்கள் மீதான வரியும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த அதிக வரிவிதிப்பால் புகையிலைப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிக்கிறது. விலைக்குப் பயந்தே, பலரும் இனி சிகரெட் புகைப்பதை நிறுத்த வாய்ப்பு உள்ளது. சிகரெட் மீதான வரியை 100 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தாராம். ஆனால், அது நிராகரிக்கப்பட்டு 72 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புகை நமக்குப்பகை!