Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

குட்டீஸ்களுக்கு கண்ணாடியா?

நலம், நலம் அறிய ஆவல்!

குட்டீஸ்களுக்கு கண்ணாடியா?

Published:Updated:

''முன்பெல்லாம் 'என் மூக்குக் கண்ணாடியைத் தேடி எடுத்துத் தாயேன்’ என்று பாட்டிகள் சொல்வதும், குழந்தைகள் எடுத்துத் தருவதும்தான் வழக்கமாக இருந்தது. ஆனால் இன்றோ, ஐந்து வயதிலேயே கண்ணாடி போடவேண்டிய சூழலுக்குக் குழந்தைகளும் ஆளாகி விட்டனர். பிறந்த ஆறே வாரங்களில் குழந்தையால் ஒரே இடத்தில் கூர்ந்து பார்க்க முடியும். ஆனால், சில குழந்தைகளுக்குக் கண் விழிகள் உருண்டுகொண்டே இருக்கும். பிறவிக் கண் புரை, பார்வைக் குறைபாடு, சேதம், மாறுகண் போன்ற பாதிப்புகளே இதற்குக் காரணம்' என்கிறார் மூத்த கண் நல மருத்துவர் ரஜினிகாந்தா.

குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு வர என்ன காரணம்?

'எப்போதாவது 103- டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கண்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக, குழந்தைக்குக் கண் பார்வை மங்கலாம். எனவே, குழந்தையை இரண்டு முதல் மூன்று வயதுக்குள், ஒருமுறையாவது கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வையைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்' என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றைக்கு டி.வி, கம்ப்யூட்டர், மொபைல் போன் என எப்போதும் ஒளிர்திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பது அதிகரித்துவிட்டது.  'குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் இமைக்காமல் கம்ப்யூட்டரே கதியாகக் கிடக்கின்றனர். இதனால், கண் எரிச்சல், வீக்கம், அரிப்பு, நீர் வடிதல், இறுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், கண்களில் நீர் சுரப்பதும் குறைந்துவிடும். இதை 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்போம். இதிலிருந்து தப்பிக்க, கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்காரும் நிலை ஏற்பட்டால், இடையிடையே வேறு இடத்துக்குப் பார்வையை நகர்த்துவது, அடிக்கடி கண்களைச் சிமிட்டுவது, கம்ப்யூட்டர் எழுத்துக்களைப் பெரிதாக்கிப் பார்ப்பது, கண்களைச் சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கழுவுவது ஆகியவற்றின் மூலம் பாதிப்பின் வீரியத்தைக் குறைக்கலாம். வைட்டமின் ஏ சத்து நிறைந்த மாம்பழம், பப்பாளி, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பசலைக்கீரை, பால், கேரட், மீன் எண்ணெய், முட்டை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்' என்று ஆலோசனை வழங்குகிறார்.

நலம், நலம் அறிய ஆவல்!

கண்ணாடிக்குப் பதில் கான்டாக்ட் லென்ஸ் அணிவது அதிகரித்து வருகிறது. லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி டாக்டர் கூறுகையில், 'மூக்குக் கண்ணாடி அணிய விரும்பாதவர்களுக்காக, கான்டாக்ட் லென்ஸ் வகைகள் நிறையவே வந்துவிட்டன. கான்டாக்ட் லென்ஸ் எந்த வயதினரும் பயன்படுத்தலாம். ஆனால், மிகவும் கவனமாகக் கையாளவேண்டும். லென்ஸ் சொல்யூஷனைத் தினமும் மாற்றவேண்டும். ஒவ்வொரு முறை லென்ஸை எடுத்துப் பொருத்தும்போதும் கைகளைத் தரமான சோப்பு போட்டுக் கழுவவேண்டும். 10 மணி நேரம் மட்டுமே லென்ஸைப் பயன்படுத்தலாம். ஒருவர் அதிக நேரம் லென்ஸ் போட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்களுக்கென எக்ஸ்டென்டட் வேர் கான்டாக்ட் லென்ஸ், டாரிக் கான்டாக்ட் லென்ஸ் போன்றவை உள்ளன' என்கிறார் டாக்டர் ரஜினிகாந்தா.

- ரேவதி படம்: தி.குமரகுருபரன்

 அன்பு வாசகர்களே, ஜூலை 16 முதல் 31ம் தேதி வரை... தினமும் 04466802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், கண்களைப் பாதிக்கும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் கண் நல மருத்துவர் ரஜினிகாந்தா.

நலம், நலம் அறிய ஆவல்!

 கண் புரை குறைபாடு எதனால் ஏற்படுகிறது? போக்க வழி என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

 குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு இருப்பதை எப்படிக் கண்டறியலாம்?

நலம், நலம் அறிய ஆவல்!

 லாசிக், லேசர் சிகிச்சைகள் பற்றி?

நலம், நலம் அறிய ஆவல்!

 கண் அழுத்த நோய்க்கு என்ன தீர்வு?

நலம், நலம் அறிய ஆவல்!

 கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?

நலம், நலம் அறிய ஆவல்!

 சர்க்கரை நோயாளிகள் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

நலம், நலம் அறிய ஆவல்!

 தலைவலிக்கும் பார்வைக் குறைபாட்டுக்கும் சம்பந்தம் உண்டா?

நலம், நலம் அறிய ஆவல்!

 எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்?

நலம், நலம் அறிய ஆவல்!

 கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பிரச்னையை எப்படித் தவிர்ப்பது?