Published:Updated:

பக்கவிளைவை ஏற்படுத்துமா ஸ்டீராய்டு மருந்துகள்

பக்கவிளைவை ஏற்படுத்துமா ஸ்டீராய்டு மருந்துகள்

பக்கவிளைவை ஏற்படுத்துமா ஸ்டீராய்டு மருந்துகள்

பக்கவிளைவை ஏற்படுத்துமா ஸ்டீராய்டு மருந்துகள்

Published:Updated:
பக்கவிளைவை ஏற்படுத்துமா ஸ்டீராய்டு மருந்துகள்

டி.கோமதி, உடுமலைப்பேட்டை

. என் நண்பர், 'ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக்கொண்டால், பக்க விளைவுகள் ஏற்படும். உயிருக்கே ஆபத்து’ என்று பயமுறுத்துகிறார். இது உண்மைதானா? விளக்குங்கள் ப்ளீஸ்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் ஹரி மெய்யப்பன், காது-மூக்கு-தொண்டை நிபுணர், திருச்சி

பக்கவிளைவை ஏற்படுத்துமா ஸ்டீராய்டு மருந்துகள்

'மருத்துவ உலகில் மிகவும் முக்கியமானவை, ஸ்டீராய்டு  மருந்துகள். வலி, நரம்பு தொடர்பான பிரச்னை, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் மற்றும் விபத்தில் அடிபட்டவர்கள் எனப் பலருக்கும் உடனடி நிவாரணத்தைக் கொடுக்கிறது இது. ஸ்டீராய்டில் பக்கவிளைவு இருப்பதை மறுக்க முடியாது. அதே சமயம், எந்த அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு எடுத்துகொள்ள வேண்டும் என்ற டாக்டரின் பரிந்துரையைச் செயல்படுத்தினால், எந்தப் பிரச்னையும் ஏற்படாது.  

ஆனால், சிலர், தங்களின் பிரச்னைகளுக்கு தாங்களாகவே 'ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொண்டால் சரியாகிவிடும்’ என்று மருத்துவரின் பரிந்துரை இன்றி, மருந்தகளில் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதுதான் மிகவும் ஆபத்தானது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளவே கூடாது. மேலும், நாசி ஒவ்வாமை  உள்ளவர்கள் மாத்திரை தவிர்த்து இன்ஹேலர் (Nasal spray) மூலமாக ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

மருத்துவர் பரிந்துரைப்படி ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர் எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.'  

ஆர். வெற்றிவேல், நாமக்கல்

'எனக்கு 20 வயதாகிறது. சின்ன வயதில் இருந்தே அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். காலையில் எழுந்தவுடன் தும்மல் பயங்கரமாக வரும். இதயமே நின்றுவிடும்போல, தொடர்ந்து 10, 15 தும்மல் போடுகிறேன். இரண்டு மணி நேரத்தில் சரியாகிவிடுகிறது. ஆனால் மூச்சிரைப்பு, மூக்கடைப்பு போன்றவை இல்லை. என் பிரச்னைக்கு என்ன தீர்வு டாக்டர்?'

பக்கவிளைவை ஏற்படுத்துமா ஸ்டீராய்டு மருந்துகள்

டாக்டர் ஆ.அறிவுச்செல்வன், காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், கிருஷ்ணகிரி

''உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னைக்கு ஒவ்வாமைதான் (Allergy) காரணம். சிலருக்கு இந்த அலர்ஜி, உண்ணும் உணவால் ஏற்படலாம். சிலருக்குப் பருவநிலை மாற்றத்தால்

பக்கவிளைவை ஏற்படுத்துமா ஸ்டீராய்டு மருந்துகள்

ஏற்படலாம்.  கத்திரிக்காய், அவரைக்காய், மீன், கருவாடு, வெங்காயம், தக்காளி போன்றவற்றால் ஏற்படலாம். தூசியாலும் (Dust)  கூட இந்தப் பிரச்னை வரலாம். பொதுவாக, எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அலர்ஜி ஏற்படும். புகையிலை போடுபவர்கள் மற்றும் சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் நிற்பதாலும் வரலாம்.  அல்லது பரம்பரையாகக்கூட இது வரலாம். தும்மல், மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, கண் அரிப்பு, காதில் அரிப்பு போன்றவை அலர்ஜிக்கான அறிகுறிகள். இதைக் கவனிக்காமல்விட்டால், சைனஸ், மூக்கில் சதை வளர்தல், ஆஸ்துமா வரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. உங்களுக்கு எதனால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தேவையெனில் அலர்ஜி டெஸ்ட் எடுக்கவேண்டியிருக்கும். ஒருவேளை உங்களுக்குத் தூசியால் அலர்ஜி ஏற்படுகிறது என்றால், மாசு நிறைந்த பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. குறிப்பாகச் சாக்குப் பை துகள்கள் இருக்குமிடம், காய்கறி மார்க்கெட் பகுதி ஆகியவை. புகை வரக்கூடிய பகுதிகளுக்குப் போக நேர்ந்தால், மூக்கை மறைக்குமாறு 'மாஸ்க்’ வாங்கிப் பயன்படுத்தவும். உடனடியாக உங்கள் அருகில் உள்ள காது, மூக்கு, தொண்டை அல்லது ஆஸ்துமா - அலர்ஜி நிபுணரைக் கலந்து ஆலோசித்து மாத்திரைகள் (Anti histamane tablets), நாசல் ஸ்ப்ரே எடுத்துக்கொள்வது நல்லது.'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism