Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

விவாகரத்து செய்தால்  ரத்த அழுத்தமா?

அக்கம் பக்கம்

இந்தியாவில் விவாகரத்து கேட்டு, கோர்ட் படி ஏறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகம், விவாகரத்து செய்த 118 பேரை வைத்து ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. 16 வாரங்கள் முறையே ஆய்வுசெய்த குழு, விவாகரத்து செய்தவர்கள் இரவில் ஒழுங்காகத் தூங்குவது இல்லை என்றும் ரத்த அழுத்தம் அதிகரித்து இருக்கிறது என்றும் கண்டறிந்துள்ளது. டைவர்ஸ் செய்தவர்களில் பெரும்பாலும் மீண்டும் தனது துணையை நினைத்து ஆதங்கமோ கவலையோ கொள்வதுதான் இதற்குக் காரணமாம். அன்பே அருமருந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முறைகேடுக்கு முற்றுப்புள்ளி!

அக்கம் பக்கம்

தலைவலி என்று மருத்துவமனைக்குச் சென்றால்கூட நான்கு ஐந்து டெஸ்ட் எடுத்து வரும்படி சொல்வார்கள். ஏன் எடுக்கச் சொல்கிறார்கள், எதற்காக எடுக்கவேண்டும், உண்மையில் டெஸ்ட் எடுப்பது அவசியமா என்று நோயாளிகள் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் எழும்பும். டாக்டர்களுக்கும், நோய் பரிசோதனை மையங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், கமிஷனுக்காக இதுபோன்று டெஸ்ட் எடுக்க வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. டெல்லியில், இதுபோன்று டெஸ்ட் எடுக்க டாக்டர் பரிந்துரைப்பதும், அதற்கு கமிஷன் பெறுவதையும் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்தியது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் கட்டணத்தில் 50 சதவிகிதம் வரை டாக்டருக்கு கமிஷன். இதுபற்றி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் 'டாக்டர்கள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் இதுபோன்று முறைகேடாக நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் இனி மருத்துவத் தொழில் செய்ய முடியாதபடி தடை விதிக்கப்படும்’ என்று உறுதியளித்துள்ளார். அது வழக்கமான உறுதிமொழியா முடிஞ்சுடக் கூடாது!

ஒரு பல் பிடுங்கினா 200 பல் இலவசம்!

அக்கம் பக்கம்

மும்பையைச் சேர்ந்த 17 வயது ஆஷிக் என்பவருக்கு கடுமையான  பல்வலி. பரிசோதித்தபோது தாடையில் பெரிய வீக்கம் இருப்பதைக் கவனித்த டாக்டர், அதை அகற்ற சிகிச்சை மேற்கொண்டார். தாடையில் இருந்த இயல்புக்கு மீறிய வளர்ச்சி கொண்ட பல் பிடுங்கப்பட்டது. பல்லைப் பிடுங்கியதும், அதற்குக் கீழ், வளரக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான சிறிய பற்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிடுங்கப் பிடுங்க பற்கள் வந்துகொண்டே இருந்தன. இப்படி 7 மணி நேரம் தொடர்ந்து போராடி 232 சிறிய பற்கள் பிடுங்கப்பட்டன. ப்ப்ப்ப்ப்ப்ப்பா!

வீடு தேடி வரும் பரிசோதனை

கடந்த 20 வருடங்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சென்னை மந்தைவெளியில் உள்ள 'பெண் நலம்’ என்ற பெண்களுக்கான புற்றுநோய் மருத்துவமனை, அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பம் கொண்ட 'நடமாடும் கண்டறிவுப் பரிசோதனை ஊர்தி’ ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மருத்துவமனையின் நிறுவனர் ராதிகா சந்தானகிருஷ்ணன்,

அக்கம் பக்கம்

''புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்கு வருவதைக்கூட பெரும்பாலான பெண்கள் விரும்புவது இல்லை. பாதிக்கப்படும் வரையில் தாங்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்கின்றனர். இந்த நிலையை முற்றிலும் மாற்றவே நடமாடும் கண்டறிவுப் பரிசோதனை ஊர்தி திட்டத்தைக் கொண்டுவந்தோம். பெண்களின் வீட்டு வாசலிலேயே இந்தச் சேவையை அறிமுகப்படுத்தினோம். இந்த ஊர்தியில், அதி நவீன மேமோகிராம் கருவி, கர்ப்பப்பைவாய் புற்றுநோயைக் கண்டறியும் பாப்ஸ்மியர் பரிசோதனைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பரிசோதனை மேற்கொள்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுவதுடன் கண்டறிவு டேட்டா மற்றும் மாதிரிகள் சென்னையிலுள்ள ஆய்வகத்துக்குக் கொண்டுவரப்பட்டுத் துரித கதியில் ஆய்வின் முடிவுகள் அனுப்பப்படும்'' என்கிறார்.

எச்சமும் மருந்து!

அக்கம் பக்கம்

பறவைகள் உங்கள் வீட்டைச் சுற்றிலும், தோட்டத்தில் எச்சமிட்டு அட்டகாசம் செய்கிறதா? சந்தோஷப்படுங்கள்... புதுச்சேரியில் உள்ள நோய் பரப்பும் பூச்சிகள் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம் (வி.சி.ஆர்.சி) பறவைகளின் எச்சத்தை ஆராய்ச்சி செய்ததில், அதில் உள்ள பாக்டீரியா கிருமி, கொசுக்களை அழிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். பறவைகள் வெவ்வேறு நிலப்பரப்பில் பூச்சிகள், பழங்கள், தானியங்களை உண்கின்றன. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து 1,000 பறவைகளின் எச்சம் சேகரிக்கப்பட்டு, அந்த எச்சத்தில் உள்ள பாக்டீரியா கிருமியானது டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். தற்போது இந்தக் கழிவில் இருந்து கொசு ஒழிப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism