
'குழந்தை பிறந்தது முதல்... அதன் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறோம். ஆனால், அந்தந்த மாதம், வயதுக்கேற்ப அதன் செயல்பாடு இருக்கிறதா என்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் கூர்ந்து கவனிக்கத் தவறிவிடுகின்றனர். குழந்தையைக் கண்காணிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பது பெற்றோரின் கடமை. குழந்தைக்கு வரும் சாதாரணக் காய்ச்சல்கூட, வலிப்பு நோய்க்கு வழிவகுத்துவிடும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்தால் பெற்றோர்களுக்குப் பேரதிர்ச்சிதான். குழந்தைகளுக்குக் காய்ச்சலோடு வரும் வலிப்பு நோய் சற்று பயத்தைத் தருமே தவிர, மூளையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஜூரம் சார்ந்த வலிப்பு நோயைத் தடுக்கமுடியும்' என்கிறார் மூளை நரம்பியல் மருத்துவர் வி.முருகன்.
'குழந்தைக்கு முதலில் இருமல், சளி ஏற்படும். அதையொட்டி, காய்ச்சலும் வரும். உடனே, டாக்டரை பார்த்து, மருந்து மாத்திரைகள் கொடுப்பது, ஈரத்துணியை நெற்றியில் வைப்பது எனக் காய்ச்சலின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். காய்ச்சல் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டாலே... இந்த வலிப்பு வருவதைத் தவிர்க்கலாம்' என்கிறார் டாக்டர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டுபிடித்து, அதற்கான தெரப்பிகள், பயிற்சிகளை மேற்கொண்டால், பாதிப்புகளை வருமுன் காத்து, பல்வேறு நோய்களின் பாதிப்புகளிலிருந்து குழந்தையை மீட்டெடுக்கலாம். குழந்தை ஒரு வயதில் நடக்காமல் இருப்பதற்கும், நான்கு வயதில் நடக்காததற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் டாக்டரின் ஆலோசனையைப் பெறுவது குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு நல்லது'' என்கிறார்.
தலைவலி பற்றிக் கூறுகையில், 'இன்றைக்குப் பலருக்கும் இருக்கிற மிக முக்கியமான பிரச்னை தலைவலி. எப்போதாவது ஒன்று இரண்டு நாள் வரும் தலைவலியைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. அதுவே ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த தலைவலியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சிலருக்கு மாதக்கணக்கில் தலைவலி இருந்தாலும் மருத்துவரிடம் செல்லாமல் சுய மருத்துவம் எடுத்துக்கொண்டிருப்பார்கள். மன அழுத்தம், மூளையில் கட்டி, கண் வலி என்று தலைவலி ஏற்பட ஆயிரம் காரணங்கள் உள்ளன. இன்றைக்கு மன அழுத்தத்தால்தான் நிறையபேருக்குத் தலைவலி ஏற்படுகிறது. மூளைக் கட்டியால் ஏற்படக்கூடிய தலைவலி மிகவும் ஆபத்தானது' என்று எச்சரிக்கைவிடுக்கிறார் டாக்டர்.
- ரேவதி படம்: சொ.பாலசுப்ரமணியன்



ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்ன? தடுக்க என்ன வழி?

கழுத்து வலியைத் தவிர்க்க வழி உண்டா?

பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?

குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வரக் காரணம் என்ன?

நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் என்ன? எந்த வயதில் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்?

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? பயிற்சிகள் உள்ளதா?

மன அழுத்தத்தால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுமா?

சிலர் அடிக்கடி மயக்கம் போட்டு விழுவதற்கு என்ன காரணம்?

மூளைக்கும் கண்ணுக்கும் என்ன தொடர்பு?
அன்பு வாசகர்களே.. ஆகஸ்ட் 1 முதல் 15-ம் தேதி வரை...தினமும் +(91)-44-66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், தலைவலி, முதுகு வலி, கழுத்து வலிக்கான காரணங்கள், தவிர்க்கும் வழிகள், குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் மூளை நரம்பியல் மருத்துவர் வி.முருகன்..