Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

ரத்தத்தின் ரத்தமே!

நலம், நலம் அறிய ஆவல்!

ரத்தத்தின் ரத்தமே!

Published:Updated:

'நம் எலும்பு மஜ்ஜையில்தான் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டு அணுக்கள், பிளாஸ்மா என்ற மஞ்சள் நிற திரவம் ஆகியவை உற்பத்தியாகின்றன. தொடர்ந்து இந்த உற்பத்தி நடந்துகொண்டே இருக்கிறது. நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை செல்களுக்குக் கொண்டுசெல்வதும், அது வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை சுமப்பதும் ரத்த சிவப்பு அணுக்களின் வேலை. வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாக இருக்கிறது. ரத்தம் உறைவதற்குத் தட்டு அணுக்கள் தேவை. இவற்றில் ஒன்றின் உற்பத்தி குறைந்தாலும் உடலின் இயக்கத்துக்குப் பாதிப்புதான்.

ஏபிளாஸ்டி அனிமியா என்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த செல்கள் உற்பத்தி முற்றிலுமே தடைபட்டுவிடும். இந்த ஏபிளாஸ்டி அனிமியா உள்ளிட்ட ரத்தம் தொடர்பான நோய்கள் வருவதற்கு நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்துகொள்வதுதான் முக்கியக் காரணம்' என்கிறார் குழந்தைகளுக்கான ரத்த நோய் சிகிச்சை நிபுணர் ரேவதி ராஜ்.

மற்றொரு முக்கியமான நோயான தலசீமியா பற்றிக் கூறுகையில், 'ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி குறைவதால் ஏற்படக்கூடிய நோய் தலசீமியா. தமிழ்நாட்டில் தர்மபுரி, சித்தேரி மற்றும் மதுரை பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடமும் காணப்படுகிறது. பெற்றோருக்கு இந்த மரபணுக் குறைபாடு, அவர்கள் அறியாமலே இருக்கலாம். இதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால், இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பிரச்னை வரலாம். இந்த மரபணுக் குறைபாட்டை எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும். ஒருவேளை பெற்றோரில் ஒருவருக்கு மரபணுக் குறைபாடு இருந்தது என்றால், தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு தலசீமியா பாதிப்பு உள்ளதா என்பதை மூன்றாவது மாதத்தில் பரிசோதனை மூலம் கண்டறியலாம். அப்படிக் குறைபாடு இருந்தால் அதை நவீன சிகிச்சையின் மூலம் சரிப்படுத்த முடியும். ஆனால், இதுபற்றிய விழிப்பு உணர்வு மக்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது. மேலே சொன்ன பகுதியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தலசீமியா பாதிப்புள்ள மரபணு தங்களுக்கு உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்' என்கிறார்்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நலம், நலம் அறிய ஆவல்!

'ஒரு முறை ரத்த தானம் செய்வதன் மூலம் மூன்று பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும்' என்ற டாக்டர், ஸ்டெம்செல் தானம் அதைவிடச் சிறந்தது என்கிறார். 'இந்தியாவில் தாத்ரி என்ற ஓர் அமைப்பு உள்ளது. இதில் சேர்பவர்களின் ஸ்டெம்செல் எந்த வகை என்று அறிய எளிய பரிசோதனை செய்யப்படும். எதிர்காலத்தில் யாருக்கேனும் உங்களின் ஸ்டெம்செல் வகை பொருந்தினால், அவர்களுக்கு தானமாகக் கொடுக்க முடியும். இதுவும் ரத்த தானம் போலதான். ரத்தத்தில் இருந்து ஸ்டெம்செல் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் ரத்தம் நமக்கு செலுத்தப்

பட்டுவிடும்.  கண்முன்னே ஒருவர், நம் ஸ்டெம்செல் மூலம் உயிர் வாழ்வதைக் காண முடியும்' என்கிறார் டாக்டர் ரேவதி ராஜ். அப்புறம் என்ன... தானம் கொடுக்கத் தயாராகுங்கள்!

பா.பிரவீன் குமார்

படம்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism