தூக்கத்தின்போது மூச்சு தடைபட்டு பின்னர் இடைவெளி விட்டு மீண்டும் சுவாசிக்கும் நிலையை, 'மூச்சுத் தடை நோய்’ என்கிறோம். இதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், தூக்கத்தின்போது தொண்டைத் தசைகள் தளர்வுற்று மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்வதே முக்கியமான காரணம்.அறிகுறிகள்:

பகல் நேரத்தில் அதிகப்படியான தூக்க உணர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பகலில் தூங்கிவழிதல்

இரவில் அதிக சப்தத்தில் குறட்டை


தூக்கத்தில் மூச்சு தடைபடுதல்

தொண்டை அல்லது வாய் வறண்டு உறக்கம் தடைபடுதல்

நெஞ்சு வலியால் விழித்தல்

காலையில் தலைவலி

பகல் நேரத்தில் கவனச்சிதறல்

போதிய தூக்கமற்ற மனநிலை

ரத்த அழுத்தம் அதிகரிப்பு
மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்

நோயின் அறிகுறிகள் இருந்தால்...

அதிகப்படியான குறட்டை சப்தம் காரணமாக மற்றவர்களின் தூக்கம் தடைபட்டால்...

அடிக்கடி மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல் காரணமாக விழித்தல்

பகலில் அதிகப்படியான தூக்க உணர்வு

அலுவலக வேலை, வாகனம் ஓட்டுதல், தொலைக்காட்சி பார்த்தல் என எந்த வேலையும் செய்ய முடியாதபடி தூங்கிவிழுதல்
வராமல் தடுக்க...

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மது மற்றும் தூக்க மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுக்காமல், ஒருபக்கமாகவோ, குப்புறவோ படுக்கலாம்.