
பி.கோமதி, நாமக்கல்
'என் அலுவலகத்துக்குத் தினமும் மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்கிறேன். 'நடப்பது நல்லதுதான். ஆனால், அதிக தூரம் நடப்பது நல்லதல்ல... எலும்புகள் வலுவிழக்கலாம்’ என்கின்றனர் சிலர். ஆரோக்கியமாக இருப்பவர்கள் எவ்வளவு தூரம் வரை நடக்கலாம்?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டாக்டர் ஜி.பாலசுப்ரமணியன், எலும்பு மூட்டு் சிகிச்சை நிபுணர், கோவை.

'நடைப்பயிற்சி மேற்கொள்வது கண்டிப்பாக உடலுக்கும் மனதுக்கும் நல்லது. தினமும், மூன்று முதல் ஆறு கி.மீ நடப்பது இயல்பானதுதான். ஒரு நாளைக்கு, உங்களின் நடைவேகத்துக்கு ஏற்ப காலை, மாலை என 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடக்கலாம். சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள்கூட, தினமும் காலை, மாலை என ஆறு கிலோமீட்டர் நடப்பது நன்மையே தவிர, உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை. இதனால் எடை குறைவது மட்டுமல்ல. உடலையும் ஃபிட்டாக, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும், காலையோ, மாலையோ நடைப்பயிற்சி மேற்கொள்
வதால், வைட்டமின் டி தொடர்பான எந்தவொரு பிரச்னையும் ஏற்படாது. 30 வயதுக்குப் பிறகு எலும்பின் அடர்த்தி (Bone Density) குறைய ஆரம்பிக்கும். அதிலும் ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி் குறைய அதிக வாய்ப்புள்ளது. எலும்பின் அடர்த்தி குறையும் சதவிகிதத்தைக் குறைக்கத் தான், நடைப்பயிற்சி முதலிய பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டுமே தவிர, நடைப்பயிற்சிக்கும் எலும்பு வலுவிழப்புக்்கும் எந்தத் தொடர்புமில்லை.'
தமிழ்ச்செல்வி, திண்டுக்கல்
'நான் ஹவுஸ்வொய்ஃப். காலில் கட்டைவிரல் நகம் மட்டும் கருத்துப்போய் அசிங்கமாக இருக்கிறது. மற்ற நகங்கள் நன்றாகவே இருக்கின்றன. ஒரு நகம் மட்டும் கருத்துப்போக என்ன காரணம்? ஏதாவது நோயின் அறிகுறியா?'
டாக்டர் எஸ். கயல்விழி மணி, தோல் மருத்துவர், திருச்சி.

'கால் கட்டைவிரல் கருத்து இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பூஞ்சைத் தாக்குதலாக இருக்
கலாம். இது உங்களுக்கு வலி தராமல் இருந்தால், பயப்பட வேண்டியது இல்லை. மாறாக வலி ஏற்பட்டால், மருத்துவரை அணுகவேண்டும். மற்ற விரல்களும் கருப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கால் விரல் நகத்தில் அடிபட்டு இருந்
தாலும், இதுபோலக் கருத்துப்போக வாய்ப்பு உள்ளது. மேலும், இறுக்கமாக ஷூ அணிதல், அடுத்தவர்களின் ஷூ மற்றும் சாக்ஸ் அணிதல், கால் நகங்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருத்தல், நகச்சாயம் பூசுதல், காலனி அணியாமல் பொதுக் கழிப்பிடம் செல்லுதல், மிக வெப்பமான இடத்தில் இருத்தல், அதிக நேரம் தண்ணீரில் இருத்தல், துண்டு, நகம் வெட்டும் கருவி போன்றவற்றைப் பகிர்தல் இவையெல்லாம் உங்கள் கால்விரல் நகம் கருத்துப்போகக் காரணமாக இருக்கலாம். இது மட்டும் இன்றி், சர்க்கரை நோய், உடல் பலவீனமாக இருப்பவர்

களுக்கும்கூட இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு உடனடித் தீர்வு இல்லை. நீண்ட நாட்கள் மாத்திரை மருந்து எடுத்து கொள்ளவும் நேரிடும். உதாரணமாக ஒரு வருடம்கூட ஆகலாம். உடனடித் தீர்வு தேவையெனில் நகத்தை ஆபரேஷன் மூலம் நீக்கிக்கொள்ளலாம். உடல் பலவீனமாக உள்ளவர்களுக்கு இது எளிதில் வர வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் பூஞ்சை (Fungal test) பரிசோதனை எடுத்து, அதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனை பெற்று சரிசெய்துகொள்ளுங்கள். ஆரம்பத்திலே நீங்கள் இதைச் சரி செய்தால் மட்டுமே மீண்டும் வராமல் தடுக்கலாம். இல்லை எனில் இந்தப் பிரச்னை மீண்டும் வரும். இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க நகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.'
படம்: ரா. வருண் பிரசாத்