Published:Updated:

பசியாற்றும் பாரம்பரியம்

சிறுதானிய உணவு செய்முறைகள்

பசியாற்றும் பாரம்பரியம்

சிறுதானிய உணவு செய்முறைகள்

Published:Updated:

பசியாற்றும் பாரம்பரியம்  சிறுதானிய உணவு செய்முறைகள்

பாரம்பரிய உணவு என்றாலே கேப்பைக் கூழ், கம்பங்கூழ்தானா?’ என்று கொஞ்சம்

பசியாற்றும் பாரம்பரியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலட்சியத்துடன் அலுத்துக்கொள்வோம். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்தால் கண்டிப்பாக உங்கள் நினைப்பை மாற்றிக்கொள்வீர்கள்.சிறுதானியங்களைப் பயன்படுத்தி பிரியாணி, புலவு, சூப் என விதவிதமான, சுவையான உணவுகளைச் செய்யமுடியும் என்று அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கி்றார் 'பசியாற்றும் பாரம்பரியம்’ நூலின் ஆசிரியர் செஃப் க.ஸ்ரீதர்.

வெறுமனே சமையல் புத்தகமாக மட்டுமல்லாது, ஒவ்வொரு உணவுக்கும் பின்னால் உள்ள உடல் நலன் சார்ந்த விஷயங்களையும் எழுதியிருப்பது அற்புதம். ’கம்பில் கண் பார்வைக்கு அவசியமான பீட்டா கரோட்டீனும் கேழ்வரகில் உடல் எடையைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் ட்ரிப்டோஃபேன் என்ற அமினோ அமிலமும் உள்ளன’, 'எலும்புத் தசைகள் வலிமை பெறச் செய்யும் சாமை’,  ’ரத்தசோகையைக் குணப்படுத்தும் சோளம்’, ’வாதம் சம்பந்தமான நோய்களுக்குத் தினை நல்லது’ என்று ஆரோக்கியப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறார்.

சிறுதானியக் கஞ்சியை எந்தப் பதத்தில் காய்ச்சினால் சுவையாக இருக்கும் என்பதில் தொடங்கி, வாய்க்கு ருசியான வரமிளகாய்த் துவையல், உடலை இளைக்கச் செய்யும் கொள்ளு ரசம், கமகம வாசனையுடன் குதிரைவாலிக் கிச்சடி என  நாக்கு ஊறும் வகையில், நலமாக வாழ்வதற்கான வழிகளைத் தந்திருக்கிறது இந்த நூல்!

பலமும் நலமும் ஒருங்கே பெற, படிக்கவேண்டிய புத்தகம் இது.

பசியாற்றும் பாரம்பரியம்

சிறுதானிய உணவு செய்முறைகள்

நூல் ஆசிரியர் செஃப் க.ஸ்ரீதர், விலை

பசியாற்றும் பாரம்பரியம்

180/

விகடன் பிரசுரம் 04442634283/84

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism