Published:Updated:

மனமே நலமா?-31

மனமே நலமா?-31

மனமே நலமா?-31

மனமே நலமா?-31

Published:Updated:

36 வயது ஸ்வேதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவருடைய அப்பாவும் உறவினர் ஒருவரும் என்னிடம் அழைத்துவந்திருந்தனர். அளவுக்கு மீறிய உற்சாகத்துடன் காணப்பட்ட ஸ்வேதா, மருத்துவமனையில் இருந்த செக்யூரிட்டி முதல் டாக்டர் வரை எல்லோரிடமும் சத்தமாக சிரித்து, அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஏன் இப்படிப் பேசுகிறார் என்று மற்றவர்கள் முகம்சுளிக்கும் வகையில் இருந்தது அவரது அதீதமான நடவடிக்கைகள். ஸ்வேதாவைப் பற்றி அவரது உறவினர் சொல்ல ஆரம்பித்தார்.

மனமே நலமா?-31

'ஸ்வேதாவுக்கு அம்மா இல்லை. அப்பாவுக்கு வெளியூரில் வேலை. வீட்டில் ஒரே பெண். செல்லமா வளர்ந்தாள். நல்லாப் படிக்கவைச்சாங்க. 22 வயதில் கல்யாணம் செய்துவைத்தோம். குடும்பம், ரெண்டு குழந்தைங்கனு ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்தா. ஆனால், இரண்டு வருஷமா அவளோட நடவடிக்கைகள் சரியில்லை. அறிமுகம் இல்லாத ஆண்களோடு பேச ஆரம்பி்த்தாள். கணவர் வேலைக்குப் போனதும் இவளும் வெளியே கிளம்பிவிடுவாள். எங்கே போறாள்னு யாருக்கும் தெரியாது.  மணிக்கணக்கில் போனில் பேசிட்டிருப்பாள். எதையாவது கேட்டால் காட்டுக்கத்தல் கத்தி சண்டைபோடுவாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணவர், ஆரம்பத்தில் இதைப் பெருசாக் கண்டுக்கலை. ஆனால், போகப் போக இவள் நடவடிக்கைகள் எல்லைமீறிப் போச்சு. நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். கேட்கலை. ஆனா, திடீர்னு ஒரு சில மாதங்கள் கழிச்சு, அப்படியே மொத்தமாக மாறிப்போனாள்.  எல்லோர்கிட்டயும், சிரிச்சுப் பேசிட்டிருந்தவ, யார்கிட்டயும், பேசாம வீட்டுக்குள்ளேயே இருந்தாள்.  

திடீரென ஒருநாள், மாப்பிள்ளையிடமிருந்து போன் .  'உங்க பொண்ணு தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கா...' என்றார்.  பதறிட்டோம்.  ஐ.சி.யூ வார்டில் வென்டிலேட்டர்ல வெச்சிருந்து,   உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்த அவளை ஒருவழியாகக் காப்பாத்தினோம். ''ஏன் இப்படிச் செஞ்சே? உனக்கு என்ன குறைச்சல்?'னு கேட்டதுக்கு, 'நான் பெரிய தப்பு செஞ்சுட்டேன். வாழவே பிடிக்கலை'னு சொன்னா.கொஞ்சம் கொஞ்சமாக விசாரிச்சபபதான், அவ நிறைய ஆண்களோட பழகி,  எல்லை மீறி நடந்துக்கிட்டதையும் சொன்னா.   'நான்   ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கே தெரியலை’னு கதறிக் கண்ணீர் விட்டாள். இனிமே திட்டி, அடிச்சு, ஒண்ணும் ஆகப்போறது இல்லைனு தெரிஞ்சு... அவ மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செஞ்சுடக் கூடாதேன்னு கண்டிக்காம விட்டுட்டோம். அவளும், 'நான் இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்கிட்டேனே... பெரிய தப்பு செஞ்சிட்டேனே'னு புலம்பிக்கிட்டே இருந்தா.

மனமே நலமா?-31

'நீ ஏதோ தெரியாம செஞ்சிட்டே. எல்லாத்தையும் மறந்திடு... இனி நடக்கப்போறதைப் பார்ப்போம்'னு மாப்பிள்ளையும் ஆறுதலாப் பேசினார். ஆனா திரும்பத் திரும்ப, ஸ்வேதா தற்கொலைக்கு முயற்சிக்கிறதும், அவ உயிரைப் பாதுகாக்கறதுமே எங்களுக்குப் பெரிய வேலையாப் போயிடுச்சு. சில மாதங்களுக்குப் பிறகு, சகஜ நிலைக்கு வந்தாலும், வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா, ஸ்வேதா ஆண்கள்கிட்டே பேசுறது, பழகுறதுன்னு மறுபடியும் ஆரம்பிச்சிட்டா.  மாப்பிள்ளையும், ''இவ உயிரைக் காப்பாத்தி, மன்னிச்சு இவ்வளவு செஞ்சிருக்கேன்.  திரும்பவும் பழையபடி ஆரம்பிச்சிட்டாளே'னு மனசு உடைஞ்சு போயிட்டாரு. இனி இவகூட வாழ முடியாதுனு குழந்தைகளை மட்டும் கூட்டிக்கிட்டு, வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிட்டார்' என்று நீளமாகத் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

ஸ்வேதாவின் நடவடிக்கைகளைப் பார்க்கையில் அவருக்கு

மனமே நலமா?-31

பைபோலார் டிஸ்ஆர்டர்’ என்ற மனநோய் இருப்பது புரிந்தது.  இந்த வகையான மனநோயில் ஆறு மாதத்துக்கு மேனியா பிரச்னை உச்சத்தில் இருக்கும். அடுத்த ஆறு மாதத்துக்கு 'டிப்ரஷன்’ எனப்படும் மனஅழுத்தத்தில் இருப்பார்்கள். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மேனியா பிரச்னை இருக்கும்

போது அதிகம் பேசுவார்கள்; உற்சாகம் பீறிடும், உச்சபட்ச சந்தோஷத்தில் மிதப்பார்கள், அதிகம் செலவு செய்வார்கள், தங்களை அழகுபடுத்திக்கொள்வார்கள், குறைவாகத் தூங்குவார்கள். சிலருக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். இது சில மாதங்களோ, சில வாரங்களோதான் நீடிக்கும்.  

மனமே நலமா?-31

அதன் பிறகு அப்படியே தலைகீழாக மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார்கள்.அப்போது அதிகமான சோகத்தில் இருப்பார்கள். அழுதுகொண்டே இருப்பார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும் போது தற்கொலைக்கு முயற்சிப்பார்கள். மூளையில் செரட்டோனின் உள்ளிட்ட சில  ரசாயனங்கள் சுரப்பில் ஏற்படக்கூடிய மாற்றம், மரபியல் காரணிகள், சுற்றுச்சூழல் என்று பல்வேறு காரணங்களால் இந்த

மனமே நலமா?-31

பைபோலார் டிஸ்ஆர்டர் ஏற்படுகிறது. ஆனால், இதனால்தான் ஏற்படுகிறது என்று உறுதியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் மாத்திரை மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியும். நல்ல வேளையாக ஸ்வேதாவுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் முற்றிய நிலைக்குச் செல்லவில்லை. நோயாளிகள் மேனியா பகுதி அல்லது மன அழுத்தப் பகுதி என எதில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சிகிச்சை  தொடங்கப்படும். ஸ்வேதா மேனியா பகுதியில் இருந்ததால் அவருக்கு மாத்திரைகள் அளிக்கப்பட்டன. சப்போர்ட்டிவ் சைக்கோ தெரப்பி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் கணவரிடம் ஸ்வேதாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை எடுத்துச்சொல்லி அவரை வரவழைத்தோம். முதலில் வர மறுத்தவர், பிறகு ஸ்வேதாவின் நிலைமையைப் புரிந்துகொண்டு வந்தார். அவருக்கும் கவுன்சலிங் கொடுத்தோம். ஸ்வேதா தொடர்ந்து மருந்துகளை எடுத்துவருகிறார். தற்போது எந்தப் பிரச்னையும் இன்றி, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism