Published:Updated:

மழை நேரம் கதகத டிப்ஸ்!

மழை நேரம் கதகத டிப்ஸ்!

மழை நேரம் கதகத டிப்ஸ்!

மழை நேரம் கதகத டிப்ஸ்!

Published:Updated:

வெயிலோடு விளையாடி மழையோடு உறவாடி மகிழ்ந்ததெல்லாம் சென்ற தலைமுறையோடு நின்று விட்டது. மழைக்காலத்தில், சிறப்பு மருத்துவமனை அமைக்கும் அளவுக்கு இன்று சளி, இருமல், காய்ச்சல் என  பருவத்துக்கான நோய்களின் பாதிப்புகள் அதிகரக்கின்றன.

மழைக்காலத்தில் அடிக்கடி வரக்கூடிய நோய்கள், அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் பற்றிச் சென்னையைச்  சேர்ந்த பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டி.வேல்முருகனிடம் கேட்டோம்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'காலநிலை மாற்றம், இடம்பெயர்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, நகரமயமாக்கல் ஆகிய இந்த நான்கு காரணங்களால்தான் மழைக்காலத்தில் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மக்கள் சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்புசக்தி குறைகிறது.  தற்போது குறைமாதப் பிரசவம் அதிகரித்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு சரியாகத் தாய்ப்பால் கொடுப்பது இல்்லை. அதனால், குழந்தைகளுக்கு எளிதில் சுவாசப் பிரச்னைகள் வந்துவிடுகின்றன. இவை எல்லாம் மழைக் காலத்தில் அடிக்கடி நோய் ஏற்படுவதற்கான நீண்ட காலக் காரணிகள். இது தவிர வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமித் தொற்றுகளும் மழைக்காலத்தில் பாடாய்ப்படுத்துகின்றன.

வைரஸ் காய்ச்சலைவிட பாக்டீரியாவால் வரும் காய்ச்சல் மிகவும் அவதிக்குள்ளாக்கும். வைரஸ் பாதிப்பால் வரும் சாதாரண காய்ச்சல், சளி, இருமல், தொண்டையில் ஏற்படும் பிரச்னையைத் தவிர, மழைக்காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலும் கீழ்காணும் காய்ச்சல்கள்தான் அதிகம் வருகின்றன.

நிமோனியா காய்ச்சல்:

பாக்டீரியா கிருமியால் வரலாம். பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய நியூமோகோக்கல் நிமோனியா மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். 102 டிகிரி காய்ச்சல், பசியின்மை, அடிக்கடி மூச்சு வாங்குதல், கடுமையான தலைவலி, தசைகளில் வலி ஏற்பட்டு நடக்கச் சிரமப்படுதல்... போன்றவை நிமோனியா காய்ச்சலுக்கான அறிகுறிகள். வயிற்றுப்போக்கு:

நீர் மற்றும் உணவு மாசு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சாலைகளில் தேங்கியுள்ள நீரில் சாக்கடை நீரும் கலந்துவிடுகிறது. வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழையும்போது ஒழுங்காகக் கால்களை சுத்தம் செய்யாமல் போனால், கிருமி வீட்டுக்குள் தங்கிவிடும். வீட்டில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்

களையும் குழந்தைகளையும் எளிதில் நோய் தாக்கும். ரோட்டா வைரஸால் தான் வயிற்றுப்போக்கு வருகிறது. அதே போல அசுத்தமான நீரைப் பருகுவதாலோ அல்லது அந்த நீர் கலந்த உணவை உண்ணும்போதோ அதில் உள்ள பாக்டீரியா கிருமியால் காலரா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

கொசுக்களால் பரவும் நோய்கள்:

கொசுக்களில் இரண்டு வகைகள் உள்ளன. இரவு நேரத்தில் கடிக்கும் அனோபீலஸ் (ANOPHELES) கொசுவால் மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. விட்டுவிட்டு காய்ச்சல், குளிர்காய்ச்சல் இருந்தால் அது மலேரியா காய்ச்சலாக இருக்கலாம்.

சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் வகை ஏடிஸ் எஜிப்டி (AEDES AEGYPTI) கொசுவால் தான் டெங்கு காய்ச்சல் வருகிறது. ஏடிஸ் கொசு கடித்தால் உடம்பில் சிவப்பு சிவப்பாக தடிப்பு காணப்படும். தொடர்ந்து அதிகபட்சக் காய்ச்சல் வரும். சில நேரங்களில் மூக்கில் இருந்து ரத்தம் வெளியே வரலாம். டெங்குவைப் பொறுத்தவரை சளி, இருமல், தொடுதல் என எந்த வகையிலும் மனிதர்கள் மூலமாக மற்றொருவருக்குப் பரவாது, கொசுக்கள் மூலமே பரவும்.

உண்ணிகளால் டைபஸ் (TYPHYUS) காய்ச்சல் வரலாம். மிகச் சிறிய புள்ளி வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த உண்ணிகள் மரம், செடி, கொடிகள் அருகில் அதிகமாக வசிக்கும். இவை பெரும்பாலும் அக்குள், கை, கால் மடிப்புகள், தொடை அருகே கடிப்பதால் அந்த இடங்களில் கருமை நிறத்தில் புள்ளி போன்று தோன்றும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் இனி மழைக்காலமும் மகிழ்ச்சியானதாக மாறும்.

மழைக் காலம் மகிழ்ச்சியாக மாற வழிகள்:

மழை நேரம் கதகத டிப்ஸ்!

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் உடனடியாக கை மற்றும் கால்களை சோப்புப் போட்டு் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 நன்றாக சோப் போட்டுக் கைகளைக் கழுவிவிட்டுத்தான் குழந்தைகளைத் தூக்க வேண்டும்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 எப்போதும் கையோடு குடை அல்லது ரெயின் கோட் எடுத்துச்செல்வது நல்லது.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 நன்றாகக்  கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரைப் பருக வேண்டும்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. பதப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், சாலையோர உணவுகளைத் தவிர்க்கவும்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 வீட்டு ஜன்னல், படுக்கையறையைச் சுற்றிலும் கொசு வலையைப் பொருத்தலாம்.  

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 தினமும் சாதாரண நீரில் குளிக்கலாம். அதிகக் குளிராக இருந்தால், வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 இருமல், தும்மல் வரும்போது, கட்டாயம் சுத்தமான கைக்குட்டையைப் பயன் படுத்த வேண்டும்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டுச் சுவர்களில் டி.டி.டி  மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும்.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 தேங்காய் ஓடு, டயர், தகரம், பிளாஸ்டிக் டப்பாக்கள், ஜன்னல் ஓரங்கள் ஆகியவற்றில்தான் டெங்குவை உண்டாக்கும் கொசுக்கள் வசிக்கும். ஆகையால் தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் போடக் கூடாது.

மழை நேரம் கதகத டிப்ஸ்!

 குழந்தையை முத்தமிடு்வதைத் தவிர்க்க வேண்டும். முத்தமிடும்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிருமிகள் குழந்தைகளுக்குப் பரவ வாய்ப்பு இருக்கிறது.

பு.விவேக் ஆனந்த்,  

படம்: ர.சதானந்த் மாடல்கள்: நிரு ஸ்ரீதர், வசீகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism