Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

மனிதனைக் கொல்லும் மிகப் பெரிய சக்தியாக கோழி இறைச்சி மாறிக்கொண்டிருக்கிறது’ என்று

அக்கம் பக்கம்

இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் (CSE), சமீபத்தில் ஓர் அதிர்ச்சியான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் கோழிகளுக்கு நோய் தாக்காமல் இருப்பதற்கும், எடை அதிகரிக்கவும் ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்துகின்றனர். டெட்ராசைக்ளின் (Tetracyclin), ஃப்ளுரோகு  வினோலோன் (Fluroquinolone), அமினோகிளைகோஸைடு (Aminoglycoside) ஆகிய மூன்று விதமான ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் கோழிகளுக்கு அதிகம் செலுத்தப்படுகின்றன. கோழியைச் சமைத்தாலும் இந்த மருந்துகள் வீரியம் இழப்பது இல்லை. கொஞ்சம்  கொஞ்சமாக நம் உடலுக்குள் ஊடுருவி, பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள்  அதிகமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்கன் சாப்பிடறதில் சிக்கல் இருக்கு பாஸ்!

அக்கம் பக்கம்

திருச்சி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் ஹிந்து மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச செயற்கைக் கால்கள் அளிக்கும் முகாம் கடந்த இரண்டு வருடங்களாக் நடந்துவருகிறது. கால்களை எப்படி இழந்தார்கள் என்பதை ஆராய்ந்து, மருத்துவப் பரிசோதனையுடன் அங்கேயே கால் அளவைக் குறித்துக்கொண்டு அதற்கேற்ப வடிவமைத்துத் தருகிறார்கள்.

அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

செயற்கைக் கால்களின் விலை சுமார் 5000 ருபாய். ஏழைகளுக்குப் பயன்படவேண்டும் என்பதற்காக, இலவசமாகச் செய்து தருகிறோம். இதில், பக்க விளைவுகள் ஏதும் இருக்காது. பழுதடைந்த செயற்கைக் கால்களையும் இலவசமாகவே பழுது நீக்கித் தருகிறோம். ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை இந்த இலவச முகாம் நடக்கிறது' என்கிறார் தொண்டு நிறுவனச் செயலாளர் சுப்பிரமணியம்.

ஊன்றி நடக்க... 'கால்’ கொடுத்த உள்ளங்கள்! 

அக்கம் பக்கம்

'ஆரோக்கியமான வாழ்வுக்கு அதிகத் தண்ணீர்... அதுவே அனைத்து நோய்களுக்கும் முற்றுப்புள்ளி'  இப்படி ஒரு ஸ்லோகனை முன்வைத்து  

அக்கம் பக்கம்

டிரிங்க் அப்’ என்ற விழிப்பு உணர்வு நிகழ்ச்சியின் மூலம், தண்ணீர் குறித்த விழிப்பு உணர்வைப் பரப்பிவருகிறார் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா. குழந்தைகளின் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது, ஆரோக்

கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது, உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது போன்ற உடல் நலனுக்கான பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுவதும் செய்து வருகிறார்.  

நல்ல விஷயம்! 

அக்கம் பக்கம்

சமீபத்தில்  லைஃப் செல்’ நிறுவனத்தின் ஸ்டெம் செல் வங்கி தொடக்க விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்தார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.அவர் மகள் ஆராத்யாவின் ஸ்டெம் செல் பாதுகாக்கப்படும், கேளம்பாக்கத்தில் உள்ள லைஃப் செல் ஸ்டெம் செல் மையத்துக்குச் சென்று பார்வையிட்டவர், 'அனைவருமே ஸ்டெம் செல் சேமித்துவைப்பது நல்லது. நம் ஆரோக்கியமான எதிர்கால வாழ்வுக்கு ஸ்டெம் செல்தான் பலமான அடித்தளத்தை உருவாக்கும்' என்றார்.  

ஐஸ் சொன்னாக் கேட்டுக்குவோம்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism