Published:Updated:

கையில் தவழும் இன்குபேட்டர்

பு.விவேக் ஆனந்த், படங்கள்: வி.செந்தில் குமார், ஆ.முத்துக்குமார்

கையில் தவழும் இன்குபேட்டர்

பு.விவேக் ஆனந்த், படங்கள்: வி.செந்தில் குமார், ஆ.முத்துக்குமார்

Published:Updated:

ஓர் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடி குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கின்றன. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாகப் பிறக்கிறது. இ்வ்வளவு குழந்தைகளையும் இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாப்பதும், போதுமான இன்குபேட்டர்களை உருவாக்குவதும் இயலாத காரியம். போதிய மருத்துவ வசதிகள் இருந்தால் மட்டுமே, இந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். ஆனால், மிகவும் குறைவான செலவில், கைக்கு அடக்கமாக ஒரு பை வடிவத்தில் இன்குபேட்டரைத் தயாரித்து எடைக் குறைவாக பிறக்கும் குழந்தைகளின் பாதுகாவலராக மாறியிருக்கிறார் சென்னை ஐ.ஐ.டியில் படித்த ராகுல் அலெக்ஸ் பணிக்கர்.

கையில் தவழும் இன்குபேட்டர்

இன்குபேட்டருக்குள் இருக்கும் குழந்தையை கண்ணாடி வழியே ஏக்கத்துடன் பார்த்து, அதன் அசைவுகளை ரசித்து, கையில் அள்ளியெடுத்து கொஞ்சமுடியாமல் பரிதவிக்கும் தாயின் வேதனைக்கு 'கை மேல்’ பலனைத் தந்து, மருத்துவ மேதைகளையே வியக்கச் செய்திருக்கிறது இவரது சாதனை. இந்தச் சாதனையைப் பாராட்டிய வர்களில் முக்கியமானவர் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது, பெங்களூரில் 'எம்ப்ரேஸ் இன்னோவேஷன்’ என்ற நிறுவனத்தை நிறுவி, தனது நண்பர்களுடன் இணைந்து கை அடக்க இன்குபேட்டரைத் தயாரித்து, உலகம் முழுவதும் சப்ளை செய்துவருகிறார் ராகுல்.  

நான் பிறந்தது கேரளா. அப்பாவுக்கு துபாயில் பொறியாளர் வேலை. அதனால் அங்கே  குடும்பத்துடன் குடியேறிவிட்டோம். நான் இந்தியாவில் ஐ.ஐ.டி படிக்க

வேண்டும் என்பது அப்பாவின்  ஆசை. சென்னை ஐ.ஐ.டியில் சேர்ந்து, எலெக்ட்ரிக் இன்ஜி னீயரிங் முடித்தேன். பிறகு, அமெரிக்காவின் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றேன். பிறகு சிலிக்கன் வேலியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வேலை செய்பவர்கள் பொதுவாக இணையம் தொடர்பான ஆராய்ச்சிகளிலேயே ஆர்வம் காட்டுவார்கள்.

கையில் தவழும் இன்குபேட்டர்

ஆனால் நான், லினஸ் லியாங், ஜேன் சென், நாகானந்த் மூர்த்தி ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து புதிதாக ஏதேனும் ஒரு மருத்துவப் பொருளை வடிவமைக்கத் திட்டமிட்டேன். அமெரிக்காவில், எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளின் உயிர்்காக்கும் இன்குபேட்டரின் விலை  கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய். அப்போதுதான் இந்த இன்குபேட்டர் ஐடியா வந்தது. எங்களுக்கு முன்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் விலை குறைவாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு தரத்தில் சொதப்பி

யிருந்தார்கள். அதனால் விலையைப் பற்றி கவலைப் படாமல் இன்குபேட்டரை வேறு வடிவத்தில் உருவாக்கு வதில் மட்டும் கவனம் செலுத்தினோம். நாங்கள் விரும்பிய இன்குபேட்டரை வடிவமைக்க நான்கு ஆண்டுகள் பிடித்தது.  ஆனால் யாருமே நாங்கள் வடிவமைத்த இன்குபேட்டரை வாங்கவில்லை. மற்ற கண்டுபிடிப்புகள்போல இதுவும் மூலையில் முடங்கிவிடக்கூடாது என்பதால், தரத்தில் சமரசம் செய்யாமல் லாபத்தைப் பற்றி கவலைப்படாமல் குறைந்த விலையில் நாங்களே இன்குபேட்டர்களைத் தயார் செய்தோம்.

இப்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 14 மாநிலங்களிலும், சீனா, சோமாலியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளிலும் எங்களின் இன்குபேட்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனால் இதுவரை சுமார் 80 ஆயிரம் குழந்தைகள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்.

கையில் தவழும் இன்குபேட்டர்

இந்தியாவில் சராசரியாகப் பிறக்கும் 30 சதவிகிதக் குழந்தை களுக்கு இன்குபேட்டர் தேவைப்படுகிறது. வசதியான வர்களுக்குப் பிரச்னையில்லை.  ஆனால் ஏழைகள், கிராமப் புறங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்்தால் அவர்களைக் காப் பாற்ற முடியவில்லை. அதை எங்கள் கண்டுபிடிப்பு போக்கும்' என்றவர், பழைய இன்குபேட் டருக்கும் புதிய வடிவ மைப்புக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்தும் பேசினார்...

'்இப்போது நடைமுறையில் இருக்கும் இன்குபேட்டருக்கு 24 மணி நேரமும் மின்சாரம் தேவை. பிறந்தவுடனேயே குழந்தையின் உடல் முழுவதும் வயர்கள் பொருத்தப் பட்டிருக்கும். பால் கொடுக்க மட்டும் தாய்க்கு அவ்வபோது அனுமதி அளிக்கப்படும். தாயைத் தவிர மற்றவர்கள் குழந்தையை நேரில் பார்க்கக் கூட முடியாது. தவிர, இந்த இன்குபேட்டரில் குழந் தையைப் பராமரிக்க நிறைய செலவும் ஆகும். ஆனால் நாங்கள் வடிவமைத்துள்ள இன்குபேட்டருக்குத் தொடர்ச்சியாக மின்சாரம் தேவை இல்லை. வயர்களை உடல் முழுவதும் பொருத்த வேண்டியதும் இல்லை. அவ்வப்போது மெழுகை சார்ஜ் செய்து கொண்டால் போதும்.

இந்த இன்குபேட்டருக்கு ஏ.சி அரங்கு தேவையில்லை. தாயின் மடியிலேயே வைத்துக் கொள்ளலாம். இன்குபேட்டர் பையில் ஒரு மெழுகுப்பை வைக்கப்பட்டிருக்கும். மூடிய உறையில் பாதுகாப்பாக இருக்கும் இந்த மெழுகுதான் குழந்தையைப் பாதுகாக்கத் தேவையான வெப்பநிலையை தருகிறது. மெழுகுப் பையை சூடேற்ற மின்சார உதவியுடன் இ்யங்கும் பிரத்யேக சார்ஜர் இருக்கிறது. இதன் மூலம் அரை மணி நேரத்தில் மெழுகுப் பையை சார்ஜ் செய்துவிட முடியும். இன்குபேட்டரின் பக்க வாட்டில் இருக்கும் பச்சை விளக்கு எரிந்தால், மெழுகுப்பை தயார் நிலையில் இருக்கிறது  என்பதை அறிந்துகொள்ளலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் நான்கு முதல் ஆறு மணிநேரம் வரை இன்குபேட்டரில் மெழுகு போதிய சூட்டில் இருக்கும். இந்த புதிய இன்குபேட்டரை ரூ.15 ஆயிரத்துக்குத் தருகிறோம்.'

'இதை எப்படிப் பயன்  படுத்த வேண்டும்?'

'புத்தகப்பை வடிவத்தில் இருக்கும் இந்தப் பையின் ஒரு பாதியில் மெழுகு நிரப்பட்ட பை இருக்கும்.  இந்த மெழுகுப் பைக்கு மேல் உள்ள உறையில் குழந்தையை வைத்து பையை மூடி விடவேண்டும். குழந்தை மெழுகின் சூட்டில் கதகதப்பு டன் பாதுகாப்பாக இருக்கும். 4 மணி நேரத்துக்குப் பிறகு இன்குபேட்டரின் பக்க வாட்டில் இருக்கும் விளக்கின் மூலம் மெழுகின் சூடு குறைந் திருக்கிறதா எனப் பார்த்து ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இன்குபேட்டர் பையின் மீது தூசி, தண்ணீர் படாதவாறு பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

கையில் தவழும் இன்குபேட்டர்

இந்த இன்குபேட்டரைப் பற்றி அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா எங்கள் குழுவைப் பாராட்டினார். தற்போது இந்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் இந்த இன்குபேட்டரைப் பற்றி விளக்கி அறிக்கை கொடுத்திருக்கிறோம். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறோம். இந்த இன்குபேட்டரில் உள்ள ஒரே குறைபாடு, 4 மணி நேரம் வரை மட்டுமே இதைப் பயன்படுத்தமுடியும். பிறகு திரும்பவும் ரீசார்ஜ் செய்துதான் உபயோகப்படுத்த முடியும்.      8 10 மணி நேரம் ரீசார்ஜ்   செய்யாமல் இந்த இன்கு பேட்டரைப் பயன்படுத்தவும், அதே நேரம் உற்பத்தி விலை அதிகரிக்காமல் இருக்கவும், தொடர் ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகிறோம்' என்றார் ராகுல் அலெக்ஸ் பணிக்கர்.

இன்குபேட்டர் இந்தியனுக்கு ராயல் சல்யூட்!

பரிந்துரையின்றி பயன்படுத்த வேண்டாம்!

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் குமுதாவிடம் இந்த இன்குபேட்டர் பற்றி கேட்டோம். 'குழந்தை பிறக்கும்போது குறைந்தபட்சம் 3 கிலோ எடையாவது இருக்கவேண்டும். 1.5 கிலோவுக்குக் கீழ் எடை இருந்தால் இன்குபேட்டரில் குழந்தையை வைத்துக் கண்காணிக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 20 சதவிகித குழந்தைகள் போதிய எடை இன்றி பிறக்கின்றன.

கையில் தவழும் இன்குபேட்டர்

தற்போதைய மருத்துவமனைகளில் இருக்கும் இன்குபேட்டரில் குழந்தையை வைத்துக் கண்காணிப்பது பாதுகாப்பான முறையாக இருந்தாலும் அதற்கான செலவு மிக அதிகம். தவிர குழந்தையை டெஸ்ட் எடுப்பதிலும் சிரமங்கள் உண்டு. எம்ப்ரேஸ் நிறுவனத்தின் இந்த இன்குபேட்டர் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ்களிலும் அரசாங்க மருத்துவமனைகளிலும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த இன்குபேட்டர்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு மிகச் சிறந்த வடிவமைப்பு. எடை குறைவான குழந்தைகள், குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்க தாராளமாக இந்த இன்குபேட்டரைப் பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவர் பரிந்துரை மிக முக்கியம்' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism