Published:Updated:

குட் நைட்

இல்லற வாழ்வு இனிக்க....

குட் நைட்

இல்லற வாழ்வு இனிக்க....

Published:Updated:

எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட அபாயமானது, அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்துவைத் திருப்பதுதான். இந்தியாவில் பாலியல் குறித்த அறிவும் அப்படித்தான். அரை குறையாகக் கேட்டு, அரைகுறையாகப் புரிந்துகொண்டு, அதை அரைகுறையாகச் செயல்படுத்துவதாகவே பெரும்பாலா னோரின் வாழ்க்கை இருக்கிறது. இதற்கு மாறாக, இல்லற வாழ்வின் ரகசியங்களை இளம் தம்பதிகள் எளிதில் புரிந்து, அதற்கு ஏற்ப நடந்து, மகிழ்ச்சியின் உச்சத்தை அடையும் சாத்தியக்கூறுகளை எளிமையாகத் தந்திருக்கிறது இந்தப் புத்தகம்.

டாக்டர் விகடன்’ இதழில் தொடராக வந்து, வாசகர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இப்போது புத்தகமாக மாறியிருக்கும் குட் நைட்’, புது மணத் தம்பதிகளுக்கு மட்டுமின்றி, இனி திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களுக்கும், அவசியமான தகவல்களையும், ஆலோசனைகளையும், நல் வழிகாட்டுதல்களையும் எளிய தமிழில் சொல்லியிருக்கிறது.

''பசி எடுத்தால் சாப்பிடு வதையும், தூக்கம் வந்தால் தூங்குவதையும் நாம் தள்ளிப் போடுகிறோமா... ஆனால், செக்ஸ் தேவைகளை மட்டும் சுலபமாகத் தள்ளிவைத்து விடுகிறோம். பசியும், தூக்கமும் ஏறக்குறைய உடல் சம்பந்தப் பட்ட விஷயம்தான். ஆனால், தாம்பத்ய உறவு மட்டும் மனம், உடல் இரண்டோடும் தொடர்புடையது. இதில் சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் கூட, வாழ்வு சின்னா பின்ன மாகிவிடும்' என்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் டி.நாராயண ரெட்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட் நைட்

கர்ப்பகாலத்தில் தாம் பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா, அறியாப் பருவத்தில் ஏற்படும் ஆபத்துகள் எவை,  குழந்தை யின்மைக்கு  எது காரணம், தாம்பத்ய உறவுக்குப் பகை யாகும் புகையின் கேடுகள்... என, தன்னைச் சந்தித்து வாழ்வை சந்தோஷமாக மாற்றிக் கொண்டவர்களின் அனுபவம் கலந்த அலசல்களைக் கதையாகச் சொல்லி, இல்லற உறவின் உன்னதத்தை மருத்துவ ஆசானாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் டாக்டர் டி. நாராயண ரெட்டி.

அறியாமை இருளை அகற்றும், ஆனந்தத்தின் பரி மாணத்தை அகலப்படுத்தும் ஆலோசனைகள் அடங்கிய குட்நைட் புத்தகம், புதுமணத் தம்பதிகளுக்கும் இளை ஞர்களுக்கும் சங்கடம் தீர்க்கும் ஒரு வரப்பிரசாதம்.                                            

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism