Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

அறிவோம் மழலை நலம்! பு.விவேக் ஆனந்த், படங்கள்: என்.ஜி.மணிகண்டன், சி.சுரேஷ்பாபு

நலம், நலம் அறிய ஆவல்!

அறிவோம் மழலை நலம்! பு.விவேக் ஆனந்த், படங்கள்: என்.ஜி.மணிகண்டன், சி.சுரேஷ்பாபு

Published:Updated:

''குழந்தைகள் பிறந்தவுடன், ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏராளமான சந்தேகங்கள்  உண்டாகும். உடனே, வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனை ஒருபுறம், உற்றார் உறவினர்களின் யோசனைகள் மறுபுறம் எனக் கேட்டுக் குழம்புவார்கள் பெற் றோர்கள். குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து, முன்னரே மருத்துவரிடம் கேட்டுத்ெதரிந்துகொள்வது நல்லது' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த, மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டி.செங்குட்டுவன். குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்கள், அதற்கான தீர்வுகளைப் பட்டியலிடுகிறார் டாக்டர்.

'சுகப்பிரசவம் என்றால், பிரசவமான அரை மணி நேரத்தில் இருந்தும், சிசேரியன் என்றால் குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில் இருந்தும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சீம்பால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் என்பதால் இதை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது. குழந்தை பிறந்து 24 மணி நேரம் வரை மலம் கழிக்காமலும், 48 மணிநேரம் வரை சிறுநீர் கழிக்காமலும் இருக்கலாம். உடனே பதற்றப்படத் தேவை இல்லை.

தொப்புள் கொடிக்குள் காற்றுப் போகிறது என்ற தவறான புரிதல் காரணமாக, துணி கட்டி வைப்பதோ, சாம்பிராணி வைத்து அடைப்பதோ கூடவே கூடாது. குழந்தை பிறந்த 2 நாளிலேயே தொப்புள் கொடி காய ஆரம்பித்து ஆறாம் நாளில் உதிர்ந்து விடும். மருத்துவர் ஆலோசனையுடன் அந்த இடத்தில் களிம்புகள் மட்டும் தடவினால் போதும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நலம், நலம் அறிய ஆவல்!

குழந்தை பிறந்தவுடன் சாம்பிராணி காட்டுவது கூடாது. குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற் படுத்திச் சளி பிடிக்கக் காராணமாகிவிடும். குழந்தைக்கு இறுக்கமான ஆடைகள், எடை அதிகமான ஆபரணங்கள், அரைஞாண் கொடி இவற்றை அணிவிக்கக் கூடாது' என்று கூறும் டாக்டர் செங்குட்டுவன் சற்று வளர்ந்த குழந் தைகள் பராமரிப்பு பற்றியும் பேசினார்.

''கொழுப்பு சார்ந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குழந்தைகளுக்கு அடிக் கடி கொடுத்துப் பழக்கக் கூடாது. சிறுவயதிலேயே, கம்பு, கேழ்வரகு, சிறு தானியங்களைச் சாப்பிட பழக்க வேண்டும். குழந் தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அந்தக் குழந்தைக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது. மற்ற வர்களுடன் ஒப்பிட்டும் அந்தக் குழந்தை முன்னி லையில் பேசக்கூடாது. குழந்தைகளுக்குச் சிறு

வயதில் நாம் கற்றுத் தரும் நல்ல பழக்கங்கள்தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் பெற்றோர்களின் கை களில்தான் இருக்கிறது' என்கிறார்.

நலம், நலம் அறிய ஆவல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism