Published:Updated:

மனமே நலமா?-32

அதிக பொசசிவ்னெஸ் ஆபத்து! டாக்டர் அபிலாஷா

மனமே நலமா?-32

அதிக பொசசிவ்னெஸ் ஆபத்து! டாக்டர் அபிலாஷா

Published:Updated:

ன்ஜினீயரிங் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி நேகா. சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர் நித்தின். இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இடையில் பிரச்னை ஏற்படவே, கவுன்சலிங் பெறுவதற்காக என்னிடம் வந்திருந்தனர். முதலில் நேகா சொல்லத் தொடங்கினார்.

மனமே நலமா?-32

'நாங்க ரெண்டு பேரும் ஒரே பகுதியில் வசிக்கிறோம். காதலைச் சொல்றதுக்கு முன்னாடி என்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனமே நலமா?-32

பின்னாலேயே சுத்திட்டிருப்பார். நான் காதலை ஏத்துக்கிட்டப்புறம் நிறைய கிஃப்ட் வாங்கித் தந்தார். பாசமா நடந்துக்கிட்டார். இவரோட அன்பான கவனிப்பில் உருகிப்போயிட்டேன். தினமும் காலையில எழுந்ததும் குட்மார்னிங் சொல்றதுல இருந்து, தூங்கப்போற வரைக்கும் எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிப்பார். எனக்கு காதல் எவ்வளவு முக்கியமோ, அதே போலத்தான் படிப்பும். வீக் டேஸ்ல வீட்டுக்கு முன்னாடியே காலேஜ் பஸ் வந்து நிக்கும். அதனால் இவரை மீட் பண்றது ரொம்ப கஷ்டம். வீக் எண்டுலதான் மீட் பண்ணுவோம். ஆனா, தினமும் என்னைப் பார்க்கறதுக்கு, காலையிலேயே வந்திடுவார். அதேபோல சாயங்காலமும் வர ஆரம்பிச்சார். 'ஏன் இப்படி செய்யுறீங்க?’னு கேட்டேன்.  'உன்னை பார்க்காம இருக்க முடியலை’னு சொன்னார். காதல்ல இதெல்லாம் சகஜம்னு அப்ப இதை நான் பெருசா எடுத்துக்கலை. ஆனா, நான் படிக்கிற காலேஜுக்கே வர ஆரம்பிச்சிட்டார்.

'என்கூட மட்டும்தான் பேசணும்’னு கண்டிஷன் போட்டார். யார்கூடவாவது பேசினா, சிரிச்சாக்கூட இவருக்கு கோபம் வந்திடும். சண்டை போட ஆரம்பிச்சிடுவார். 'நான் உன்மேல அதிகப் பாசம் வெச்சிருக்கேன். நீ வேற யார்கூட பேசினாலும், என்னால பொறுத்துக்க முடியலை’

ன்னார். இந்த பொசசிவ்னெஸ் எங்களுக்குள்ள பிரச்னை வரக் காரணம் ஆயிடுச்சு. ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கிட்ட சொல்லிட்டுத்தான் செய்யணும்கிற நிலைமை. நான் புராஜெக்ட் விஷயமா நிறையப் பேரோட பேச வேண்டி இருக்கும். வெளியில் போக வேண்டி இருக்கும். அதை எல்லாம் கண்காணிக்க ஆரம்பிச்சார். ரொம்ப சந்தேகப்படுவார்... எது கேட்டாலும் பொசசிவ்னெஸ்னு சொல்லுவார்.

நான் ஆசையா வெச்சிருக்கிற பொருட்கள், புத்தகங்களைக்்கூட எடுத்து மறைச்சுவெச்சுப்பார். இவரைப் பார்க்க வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அந்தப் பொருள் என்கிட்டதான் இருக்கும். ஆனா, அதுக்கு அப்புறம் அது காணாமல் போயிடும். நான் ரொம்ப சீரியஸாத் தேடிக்கிட்டு இருப்பேன். இவர் ரொம்பக் கூலா, 'எங்கேயாச்சும் மறந்துவெச்சிருப்ப... இல்லைன்னா வேற யாராவது எடுத்திருப்பாங்க’னு சொல்வார். இப்படி காணாமப்போன எல்லாத்தையும் இவர்கிட்ட இருக்கிறதைப் பார்த்துட்டு ஒருநாள் கேட்டப்போ, 'சும்மா உன் ஞாபகமா இருக்கட்டும்னுதான் எடுத்தேன்’னு சொன்னார். எதையாவது செய்துட்டு, என்னோட ரெஸ்பான்ஸ் என்னன்னு பார்க்கிறது இவருக்கு வேடிக்கை. இதுபோல நிறைய செஞ்சிருக்கார்.

ஒருநாள் நான் என் ஃப்ரெண்டுகூட பேசிட்டு இருந்ததைப் பார்த்து சண்டைக்கு வந்துட்டார். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கேட்கலை. ஒரு கட்டத்துல அவர் மேல இருந்த லவ் போயி, வெறுப்பு வர ஆரம்பிச்சிடுச்சு. ஆளைவிட்டா போதும்டா சாமின்னு, 'என்னை மறந்திடு்’னு சொல்லிட்டேன். 'என்னைக்காவது ஒருநாள் நீ இப்படித்தான் செய்வேன்னு நினைச்சேன். அதேபோல நடந்துகிட்ட’னு  தன்னை நியாயப்படுத்திக்கிறார். சரி, நமக்குள்ள பிரச்னையைப் பேசித் தீர்த்துக்குவோம்னுதான் கவுன்சலிங்குக்கு உங்ககிட்ட வந்தோம்’ என்றார்.

மனமே நலமா?-32

நேகா சொல்லியதை வைத்துப்பார்க்கும்போது நித்தினுக்கு 'பேரனாய்ட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் சிண்ட்ரோம்’ இருப்பது தெரிந்தது. 'காதல் கொண்டேன்’ படத்தில் சோனியா அகர்வால் மீது தனுஷ் கொண்டிருப்பாரே அதுபோலத்தான். இன்று நிறையப் பேர் இதுபோன்ற செயல்பாடு

களை 'பொசசிவ்னெஸ்’ என்று நினைத்து விட்டுவிடுகின்றனர். திருமணத்துக்குப் பிறகுகூட இதுபோன்று, கணவன் அதிக பொசசிவ்வாக இருப்பதாக நிறையப் பேர் கவுன்சலிங்குக்கு    வருகின்றனர். இதற்கு சிகிச்சை பெறவில்லை என்றால், ஒன்று மற்றவர்களைத் தாக்கும். அல்லது தன்னைத்தானே தாக்கிக்கொள்ளும், தற்கொலைக்கும்  தூண்டும். வன்முறை, குற்றச் செயலில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை விபரீதமாகிவிடும். தன்னை மற்றவர்கள் நடத்திய விதம், குடும்பம் மற்றும் வாழ்ந்த சூழ்நிலை, சமூகத்தின் மீதான பதற்றம், சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், தாழ்வு மனப்பான்மை, தான் விரும்பியப் பொருள் தன்னைவிட்டுப் போய்விடக் கூடாது என்ற எண்ணம் இப்படிப் பல்வேறு காரணங்களால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். எனவே, நித்தினுக்கு உடனடியாக 'சைக்கோதெரப்பி சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தோம். சைக்கோதெரப்பியில் 'காக்னிட்டிவ் பிஹேவியர் தெரப்பி’ (Cognitive behaviour therapy) போன்று பல வகையான தெரப்பிக்கள் உள்ளன. ஆரம்ப நிலையிலேயே அவர் சிகிச்சைக்கு வந்து

விட்டதால் அவருக்கு மாத்திரை மருந்து தேவைப்படவில்லை. வெறும் தெரப்பி மட்டுமே அளித்தோம். காக்னிட்டிவ் பிஹேவியர் தெரப்பியில் அவருக்கு உள்ள பயத்தை, மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் தன்மையைப் போக்கி சுயசார்புடன் இருக்க அவருக்குச் சில பயிற்சிகள் அளித்தோம். பயிற்சியின்போதே கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய தவறுகளைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அதேநேரத்தில் 'எங்கள் இருவருக்குள் கசப்பு ஏற்பட்டுவிட்டது. இனியும் சேர்ந்து வாழ்ந்தால் அந்தக் கசப்பான அனுபவத்தால் எதிர்காலத்தில் மீண்டும் பிரச்னை வரலாம். எனவே இருவரும் பிரிவது நல்லது’ என்றார் நேகா. அதை நித்தினும் ஏற்றுக்கொண்டார்.

இந்த சூழ்நிலையில் வேறு யாராக இருந்தாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகி, சிகிச்சையைத் தவிர்த்திருப்பார்கள். ஆனால், நித்தினோ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனக்குள்ள பிரச்னையை உணர்ந்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருடைய பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு நித்தினின் பிரச்னை பற்றியும் அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் அவசியம் பற்றியும் கவுன்சலிங் அளித்தோம். இரண்டே மாதத்தில் இந்த பேரனாய்டு பிரச்னையில் இருந்து முற்றிலும் வெளிவந்தார் நித்தின்.

இப்போது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism